பட்ஜெட் விலையில் போன்களைத் தந்து எப்படியாவது மொபைல் விற்பனைச் சந்தையில் தங்கள் இடங்களைத் தக்க வைக்க அனைத்து நிறுவனங்களும் களம் இறங்கியுள்ளன. அண்மையில் இன்டெக்ஸ் நிறுவனம் ரூ.2,200 என விலை குறியிட்டு, குவெர்ட்டி கீ போர்டு கொண்ட, இரண்டு சிம்களில் இயங்கக் கூடிய மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஜி.பி.ஆர்.எஸ்., வாப், 1.8 அங்குல திரை, ஆடியோ வீடியோ பிளேயர், ஈக்குவலைசர், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, மொபைல் ட்ரேக்கர், 10 எண்களை அழைக்கவிடாமல் செய்திடும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் மேலாகத் தரப்பட்டுள்ள ஐந்து எல்.இ.டி. கொண்ட டார்ச் லைட் அவசர காலங்களில் நமக்கு உதவுகிறது. இதில் இந்தி மற்றும் ஆங்கிலம் டெக்ஸ்ட் அமைக்கலாம். மேலும் இதில் ஆட்டோ கால் ரெகார்ட் வசதியும் தரப்பட்டுள்ளது.