வாசகர்கள் மனத்தில் என்ன சந்தேகம் எல்லாம் வரும் என்று எதிர்பார்த்து, எங்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வெளியிட்ட லினக்ஸ் எதிர்பார்ப்புகள் என்ற கட்டுரைக்கு என் நன்றி.
-ஆ. நல்லசிவம், திருத்தணி
லினக்ஸ் டிப்ஸ் கொடுத்த கையோடு, விண்டோஸ் இயக்கத்திற்கும் வேகமாக இயங்கக் கொடுத்த ஆலோசனைகள் பயன்தருபவையாய் உள்ளன. இரண்டு சிஸ்டங்களையும் உங்கள் உதவியுடன் இயக்குகிறேன்.
-நா. சங்கமேஸ்வரன், புதுச்சேரி
வேர்ட் கிராஸ் ரெபரன்சிங் டிப்ஸ் மிகவும் புதுமையாய் உள்ளது. இந்த வசதி எங்களுக்கு ப்ராஜக்ட் எழுதுகையில் மிகவும் உதவும்.
-கம்ப்.சயின்ஸ் மாணவர்கள் சார்பாக, தினேஷ் குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.
டேப்ளட் பிசிக்கள் குறித்த செய்திகள், அவற்றின் பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. நாம் பழையபடி ஸ்லேட்டிற்கு, டிஜிட்டல் ஸ்லேட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். நல்ல மாற்றம்.
-கா. ஸ்ரீசக்தி, தாம்பரம், சென்னை.
சயின்டிபிக் கால்குலேட்டர் குறித்து எழுதியது மிகவும் உபயோகமாக உள்ளது. தொடர்ந்து இது போல மாணவர்களுக்குப் பயன்படும் செய்திகளைத் தரவும்.
-சா. மதிவாணன், எம்.பி.ஏ. மாணவர், கோவை.
3ஜி சேவையின் பயன்களைப் பட்டிய லிட்டது எல்லாம் ஓகே. கட்டணம் எவ்வளவு, எந்த திட்டம் எடுக்கலாம் என்பது குறித்து டிப்ஸ் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-கே.என். காந்திராஜ், திருமங்கலம்.
கூகுளின் லோகோ மியூசியம் சென்று பார்த்த போது, என்ன என்ன வகைகளில் எல்லாம், மக்கள் மனதைக் கவர, கூகுள் முயற்சிக்கிறது எனத் தெரிய வருகிறது.
-ஆ. பரந்தாமன், செஞ்சி.
டிபால்ட் பிரவுசர் அமைக்க வழி காட்டியது விளக்கமாக இருந்தது. இவ்வாறு அமைத்த பின்னரும் சிக்கல்கள் வருமா என்று சொல்லவும்.
-தே. மகேஷ்வரன், திருநகர்.
மொபைல் போன் பயன்பாட்டிற்கான டிப்ஸ் கொடுத்து வெகு நாளாயிற்றே! 3ஜி குறித்து அதிகம் எழுதவும்.
-எஸ்.டி. விஜயா மகேந்திரன், திருப்பூர்.
கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் வாழ்க்கையை மாற்றியது போல, 3ஜியும், டேப்ளட் பிசியும் நம் வாழ்க்கை முறையை, சிந்தனையை மாற்றப் போகின்றன என்று அழகாகச் சொல்லி வருகிறீர்கள். மக்களைத் தயார்ப்படுத்தும் உங்கள் பணி சிறக்க ஆசிகள்.
-சி. சிவத்தம்பி, கோயம்புத்தூர்.
புதுசு புதுசா வைரஸ் என்று சொல்லி, மனதில் கிலியை ஏற்படுத்து றீங்களே! இதற்கான தீர்வையும் தந்து விடுங்கள். எந்த நிறுவனம் தற்காப்பு நடவடிக்கைக்கான புரோகிராமினை, இலவசமாகத் தருகிறது என்று அடுத்த இதழில் சுட்டிக் காட்டவும்.
-செ. சுவாமிநாதன், பொள்ளாச்சி.