கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 நவ
2010
00:00

கேள்வி: நீங்கள் எழுதும்போதும், மொபைல் போன் விளம்பரங்களிலும் 3ஜி என்று சொல்கின்றனர். நீங்கள் எழுதிய கட்டுரையிலும் பல தகவல்கள் இருந்தன. இந்த 3ஜி என்பதன் விளக்கம் என்ன? 4ஜி உள்ளதா? அன்பு கூர்ந்து தெளிவாக விளக்கவும்.  -நீ. ஷண்முகப் பிரியா, மதுரை
பதில்: நல்ல கேள்வி தான். தொலை தொடர்பு பிரிவில், போன்கள் வடிவமைக்கப்பட்டதில், அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில், முதல் (Generation) தலைமுறை, இரண்டாம் தலைமுறை என அழைக்கப்பட்டன. இப்போது நான்காம் தலைமுறை போன்கள் வந்துவிட்டன. இந்தியாவிற்கு மூன்றாம் தலைமுறை போன்கள் வரத் தொடங்கி விட்டன.முதல் தலைமுறை போன்கள் 1980ல் வந்தன. இவை ஏ.எம். மற்றும் எப்.எம். ரேடியோ  அலைவரிசைகளைப் பயன்படுத்தின. டிஜிட்டல் வழி தொடர்புகள் இவை மூலம் ஏற்படவில்லை. 1991ல் இரண்டாம் தலைமுறை போன்கள், முதலில் பின்லாந்தில் வந்தன. இவை டிஜிட்டல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தின. டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் இணைய இணைப்பு இருந்தாலும், வேகம் மிக மெதுவாகவே இருந்தது. ஜப்பானில் முதன் முதலாக, 2001ஆம் ஆண்டில்  3ஜி போன் வெளிவந்தது. நெட்வொர்க் செயல்பாட்டின் வேகம் அதிகமானது. இன்டர்நெட் இணைப்பில் இருக்கையிலேயே, போன் வழி பேசவும் முடிந்தது. 4ஜி போன்கள் அண்மைக் காலத்தில் வெளியாகி, மிக அதிகமான வேகத்தில் இயங்கி வருகின்றன. பிராட்பேண்ட் இணைப்பைக் காட்டிலும் அதிகமான வேகத்தில், இன்டர்நெட் இணைப்பைத் தந்து வருகின்றன.

கேள்வி: என் நண்பர் இடது கைப் பழக்கம் உள்ளவர். அவருக்கு மவுஸை இடம் மாற்றிக் கொடுத்திருக்கிறோம். அதே போல பட்டன் இயங்கும் நிலையையும் மாற்றிக் கொடுக்க முடியுமா? அல்லது இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கென தனி மவுஸ் விற்பனை செய்கிறார்களா? -நி. முத்துஸ்வாமி, ராஜபாளையம்
பதில்:மவுஸின் பட்டன்கள் இயக்கத்தினை மாற்றி அமைத்து செட் செய்திடலாம். இதற்கென தனியான மவுஸ் இல்லை. விண்டோஸ் இயக்கத்தில், இடது மவுஸ் பட்டன் தேர்ந்தெடுப்பதற்கும், இருமுறை கிளிக் செய்தால் புரோகிராமினை இயக்குவதற்கும் பயன்படுகிறது. இது இடது கைப் பழக்கம் உள்ளவர் களுக்குச் சற்று ஏமாற்றமாகவும், எரிச்சலாகவும் இருக்கும். இவர்கள் விரும்பும் வகையில், பட்டன்களின் இயக்கத்தினை மாற்றி அமைக்கலாம். அதாவது, இடது மவுஸ் பட்டன் இயக்கத்தினை வலது மவுஸ் பட்டனுக்கும், வலதை இடதிற்கும் மாற்றி அமைக்கலாம். 1. முதலில் கண்ட்ரோல் பேனலில், மவுஸ் ஐகான் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள். பல டேப்கள் கொண்ட விண்டோ  கிடைக்கும்.  “Mouse Properties”  என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Buttons”   என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.  “Switch primary and secondary buttons”  என்று இருப்பதில் செக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி, உங்கள் நண்பருக்கேற்ற வகையில் மவுஸ் இயங்கும்.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டம் வரத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று படித்தேன். இந்த சிஸ்டம் வரத் தொடங்கிய நாள்முதல், தன் உருவாக்கத்தில்,  ஏற்படுத்திய சாதனைகள் என்ன என்று சுருக்கமாக விளக்குங்கள்.  -கா. சிவஞானம், திருத்தணி
பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட வரலாற்றில், சாதனை படைத்தது சில மட்டுமே. விண்டோஸ் பதிப்பு 1 மற்றும் 2 அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. ஆனால் பதிப்பு 3, அனைத்து நாடுகளிலும், மக்களைச் சென்றடைந்து பயன்படுத்தப் பட்டது. விண்டோஸ் மீது மக்களுக்கு ஒரு மோகத்தினை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் பல வேலைகள், விஜிஏ கிராபிக்ஸ், ட்ரூ டைப் பாண்ட்ஸ் என அதிசயப்படத் தக்கவைக்கும் விஷயங்கள் கிடைத்தன.
அடுத்த சாதனை விண்டோஸ் 95. டாஸ் மீது தன் இயக்கத்தினை மேற்கொள்ளாமல், டாஸ் மற்றும் விண்டோஸ் இணைந்ததாக உருவாக்கப்பட்டு இயங்கியது. ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார், ப்ளக் அண்ட் பிளே போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு கம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதுவித செயல்பாட்டினைத் தந்தன. அடுத்த தொகுப்பு விண்டோஸ் எக்ஸ்பி. இன்றும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் இல்லாமல், தன் இயக்கத்திற்கு டாஸ் துணை இல்லாமல் வெளிவந்த சிஸ்டம். முன் வந்த சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில் நிலையானதாகவும், சற்று பாதுகாப்பானதாகவும் இருந்தது.
விண்டாஸ் 7 தொகுப்பு அடுத்த சாதனை. விஸ்டா கொடுத்த அடியிலிருந்து, சரியான பயனுடன் எழ வேண்டும் என்ற வேகத்துடன் உருவாக்கப்பட்டு, தற்போது மெல்ல மெல்ல அனைத்து மக்களும் விரும்பும் தொகுப்பாக உருவாகி வருகிறது.
இந்த வரிசையில் அடுத்த சாதனையாக, மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் போன் 7 தொகுப்பினைக் கூறலாம். மைக்ரோசாப்ட், மொபைல் போனுக்கென வடிவமைத்த முந்தைய சிஸ்டங்களின் தோல்வியை முழுவதுமாக மறக்கச் செய்து மக்கள் விரும்பும்  சிஸ்டமாக இது உருவாகி வருகிறது.

கேள்வி: நான் விண் ஆர்.ஏ.ஆர். அன்ஸிப் பயன்படுத்துகிறேன். சில வேளைகளில் இதன் மூலம் ஸிப் செய்த பைல்களை அன்ஸிப் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. கூடுதலாக இன்னொரு அன்ஸிப் புரோகிராமினைப் பயன்படுத்தலாமா? எதனை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்? -எஸ். கே. பத்மா ஜெயராஜ், சென்னை.
பதில்: ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் போல, ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அன்ஸிப் சாப்ட்வேர் தொகுப்புகள் இருப்பது தவறில்லை. அது நல்லதும் கூட. ஆர்.ஏ.ஆர். புரோகிராம் நன்றாகச் செயல்படும் புரோகிராம் தான். இதனைப் போலவே பிரபலமான இன்னொரு புரோகிராம், அனைவரும் அறிந்த விண் ஸிப்  (Winzip) புரோகிராம் ஆகும். புதிதாக ஒன்றை உங்களுக்குச் சொல்வதென்றால், 7zip  புரோகிராமினைப் பரிந்துரைக்கலாம்.   இதனை http://www.7zip.org/   என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது பல பார்மட்டுகளில் ஸிப் செய்யப்பட்ட பைல்களைப் பிரித்துத் தருகிறது. zip, gzip, tar, 7z,  rar, iso, msi, cab or dmg  போன்ற பார்மட்டுகளில் உள்ளவற்றைப் பிரித்துத் தருகிறது. இந்த புரோகிராம், விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைந்து செயல்படுவதால், எளிதாக இதனை இயக்கலாம். அதாவது பைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில் கிடைக்கும் மெனுவில் இந்த புரோகிராம் பிரிவு ஒன்று இருக்கும். அதில் கிளிக் செய்து ஸிப் மற்றும் அன்ஸிப் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.  மிக அதிகமான எண்ணிக்கையில் ஸிப் பைல்களைப் பிரித்து, பைல்களைப் பெற வேண்டும் எனில்,  ExtractNow   என்னும் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இதனை  http://www.extractnow.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

கேள்வி: வேர்ட் பயன்படுத்துகையில், ஏற்கனவே செட் செய்யப்பட்ட மார்ஜின் நமக்குக் கிடைக்கிறது. இதனை மாற்ற வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில்,வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். -கா. சிவப்பிரகாசம், தேனி.
பதில்:வேர்ட் தொகுப்பு, டாகுமெண்ட்டிற்கான மார்ஜின்களை மாற்றுவதற்கு மிக எளிய வழிகளைத் தருகிறது. (இங்கு தரப்படும் குறிப்பு வேர்ட் 97 தொடங்கி, வேர்ட் 2003 வரை உள்ள தொகுப்புகளில் பயன்படுத்தலாம்.)
1. முதலில் டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர்  File   மெனு சென்று  Page Setup ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உடன் வேர்ட், Page Setup  டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இதில் உள்ள  Margin  டேப்பினைத் தேர்ந்தெடுங்கள்.
3. Top, Bottom, Left, மற்றும்  Right  என உள்ள மார்ஜின்களை மாற்றவும். மாற்றுகையில் வலது கீழாகக் காட்டப்படும் கட்டத்தில் உங்கள் ஆவணத்தில் என்ன வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என சிறிய படம் காட்டப்படும்.
4. பின்னர் Apply To  என்ற கீழ்விரி பட்டியலில் Whole Document  என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் நீங்கள் குறிப்பிட்ட பாரா அல்லது பிரிவினை மட்டும் தேர்ந்தெடுத்து, மார்ஜினை அதற்கு மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.  இதன் மூலம் உங்களுடைய ஆவணத்தில், ஒவ்வொரு பகுதிக்கும், அதன் தனித்துவத்தினைக் காட்ட வெவ்வேறு மார்ஜின் வைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: வேர்டில் பிரிண்ட் எடுக்கையில், குறிப்பிட்ட பைலின் சம்மரி இன்பர்மேஷனை பிரிண்ட் செய்திட முடியுமா? வழி காட்டவும். -வி.எம். ராஜேந்திரன்,  மதுரை
பதில்: வேர்ட் டாகுமெண்ட் களுக்கான சம்மரி இன்பர்மேஷன் குறித்து அறிந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி.  டாகுமெண்ட் ஒன்றை, வேர்ட் சேவ் செய்திடுகை யில், டாகுமெண்ட் டை சேவ் செய்வது டன், டாகுமெண்ட் குறித்த தகவல்களையும் சேவ் செய்கிறது. டாகுமெண்ட் பிரிண்ட் செய்யப் படுகையில், இந்த தகவல்கள் அச்சிடப் படுவதில்லை.  இதனையும் அச்சிட வேண்டும் எனில், கீழ்க்காணும் கட்டளைகளைத் தர வேண்டும். File  மெனுவிலிருந்து Print தேர்ந்தெடுக்கவும்.  இப்போது பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.இங்கு Print What   என்ற கீழ்விரி பெட்டி கிடைக்கும்.  இதில் Document Properties  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.  பின்னர் ஓகே கிளிக் செய்து அச்செடுக்கவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash - madurai,இந்தியா
05-டிச-201019:18:29 IST Report Abuse
Prakash அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். EXCEL –ல் A1–ல் 1, A2–ல் 2 என இருந்தால் அதை select செய்து MOUSE – ன் RIGHT CLICK–ஐ பிடித்து இழுத்தால் 1,2,3,4,5 .... என வருவது போல் 1/30,2/30,3/30,4/30, 5/30,6/30 ..... என வருவதற்கும் option உள்ளதா? அன்புடன் வே.பிரகாஷ் பி.இராமச்சந்திரபுரம் திருவில்லிபுத்தூர்
Rate this:
Share this comment
Cancel
கணேசன் - சேலம்,இந்தியா
01-டிச-201015:38:16 IST Report Abuse
கணேசன் நான் பல மாதங்களாக தங்களது தளத்தை பயன்படுத்தி படித்து வருகிறேன்
Rate this:
Share this comment
Cancel
ALAMELU - CHENNAI,இந்தியா
01-டிச-201013:35:15 IST Report Abuse
ALAMELU In my computer The DATE AND TIME is not same as the current .How to set this?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X