கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்தால், என்னிடம் உள்ள எம்.எஸ்.வேர்ட் புரோகிராம் நீக்கப்படுமா? அதன் இடத்தில் மீண்டும் புதியதாக, வேர்ட் புரோகிராமை இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? அதில் தயாரிக்கப்பட்ட டாகுமெண்ட் பைல்கள்
என்னவாகும்?
என்.பி. சக்தி பெருமாள், விருதுநகர்.
பதில்:
எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 10 சிஸ்டம் அப்டேட் செய்திடப் போகிறீர்கள் என்று தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த கேள்வி தற்போது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலைப் பெறும் வகையில் கேட்கப்பட்ட கேள்வியாகும். நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 10க்கு மாறுவதாக இருந்தால், இந்த பயம் தேவையில்லை. வேர்ட் புரோகிராம் மாறாது. டாகுமெண்ட் பைல்களுக்கும் ஒன்று நேராது. ஆனால், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, கட்டணம் செலுத்திப் பெற்று, “கிளீன் இன்ஸ்டால்” செய்வதாக இருந்தால், உங்களுடைய அனைத்து புரோகிராம்களையும் மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். டாகுமெண்ட்களை, பாதுகாப்பாக, பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

கேள்வி: கம்ப்யூட்டர் ட்ரெய்னிங் சென்டரில் பணி புரிகிறேன். எக்ஸெல் ஒர்க் ஷீட் குறித்து பாடம் கற்றுக் கொடுக்கையில், ஒர்க் ஷீட்களில் கிராபிக்ஸ் நான் தயார் செய்கிறேன். ஆனால், மாணவர்கள், அவர்களாகக் குறிப்பிட்ட இடத்தில் கிராபிக்ஸ் வரைந்து தர வேண்டும். அச்சில் எடுத்து தேர்வு வினாத்தாளாக இது தரப்பட வேண்டும்? நாங்கள் எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்துகிறோம். தயவு செய்து சிக்கலுக்குத் தீர்வு தரவும்.
எம்.ஆதிகேசவன், பெரியகுளம்.
பதில்
: உங்களுடைய நீண்ட கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். கிராமப் புற மாணவர்களுக்கு ஈடுபாட்டுடன், கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் கற்றுத் தரும் தங்களின் பணிக்கு என் வணக்கங்கள். இனி, தங்கள் தேவைக்கு வருவோம். தீர்வு மிக எளிதுதான்.
நீங்கள் தயாரித்த ஒர்க் ஷீட்களில் கிராபிக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அச்சடிக்கையில், அனைத்து வேளைகளிலும், கிராபிக்ஸ் அச்சிடப்படுவதனை நீங்கள் விரும்பவில்லை. மாணவர்களுக்கு, தேர்வு நடத்துவதாக இருந்தால், அந்த தேர்வில், மாணவர்கள் கிராப் அமைக்க வேண்டிய வகையில் வினா இருந்தால், கிராப் இல்லாமல், அந்த இடத்தைக் காலியாக விட்டு, அதில், தேர்வாளர்கள், கிராப் வரைய வேண்டும் எனக் கேட்கலாம்.
இதற்கு, ஒர்க் ஷீட்டினை அச்சிடுகையில், கிராபிக்ஸ் காட்டப்படுவதை மறைத்துவிட்டால் போதும். இதனை மேற்கொள்ள, பைல் ஒன்றை கேள்வி பதில்களுடன் தயாரிக்கலாம். பதில்கள் அனைத்தும் கிராபிக் பைல்களாக இருக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம்.
கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
Tools மெனுவில் Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வியூ டேப்பில் தரப்படும் ஆப்ஷன்கள் காட்டப்படும். இதில் Hide All என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். உடன் அனைத்து கிராபிக்ஸ் படங்கள் மறைந்துவிடும். அவை, ஒர்க் ஷீட்டில் இன்னும் இருக்கும். ஆனால், மறைக்கப்பட்டிருக்கும்.
இப்போது நம் ஒர்க் ஷீட்டினை அச்சடிக்கலாம். கிராபிக்ஸ் மறைக்கப்பட்டிருப்பதால், ஒர்க் ஷீட் வேகமாக அச்சடிக்கப்படும். பின்னர், மீண்டும் கிராபிக்ஸ் காட்டப்பட வேண்டும் என்றால், மேலே சொல்லப்பட்ட வழிகளைப் பின்பற்றவும். Show All பட்டனைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுக்கவும்.

கேள்வி: முன்பு விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்தேன். அப்போது கண்ட்ரோல் கீயை அழுத்தினால், மவுஸ் பாய்ண்டர் எங்கு உள்ளது என்று, சிறிய அளவில் வட்டமிட்டு காட்டப்படும். என்னைப் போன்ற வயதானவர்களுக்கு, இது நல்ல உதவியாக இருந்தது. ஆனால், இப்போது விண்டோஸ் 10 உள்ள லேப்டாப் கம்ப்யூட்டரில், இது கிடைக்கவில்லை. இதனைப் பெற தர்ட் பார்ட்டி புரோகிராம் ஏதேனும் உள்ளதா?
ஆர். சேகர் ராஜ், காரைக்குடி.
பதில்
: இந்த வசதி இன்னும் உள்ளது. விண்டோஸ் 10லும் உள்ளது. இதனை நீங்கள் இயக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் கிடைக்கும். முதலில் கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும். Mouse என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். Mouse Properties விண்டோ திறக்கப்படும். அதில் உள்ள Pointer என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Show location of pointer when I press Ctrl key என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். அதன் பின்னர், Apply மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதன் பின்னர், நீங்கள் கேட்டுக் கொண்டபடி கண்ட்ரோல் கீ கிளிக் செய்திடுகையில், மவுஸ் பாய்ண்டர் உள்ள இடம் காட்டப்படும்.

கேள்வி: அண்மையில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து அதனை நன்கு பயன்படுத்தி வருகிறேன். இதில், All Apps என்று ஒரு பிரிவு உள்ளது. App என்பது எதனைக் குறிக்கிறது? பொதுவாக All Programs என்று தானே இருக்கும். அப்படியானால், புரோகிராம்கள், விண்டோஸ் 10ல் இல்லையா?
கே. ஆரோக்யராஜ், மதுரை.
பதில்:
App என்பது Application என்பதின் சுருக்கம். அப்ளிகேஷன் என்பது ஒரு புரோகிராம். புரோகிராம் என்பது ஓர் அப்ளிகேஷன். இரண்டும் ஒன்றேதான். விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவில் All Apps என்பது இருப்பதனைக் காணலாம். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள்/ அப்ளிகேஷன்கள் அனைத்தும் அகர வரிசைப்படி பட்டியலிடப்படும்.
அப்ளிகேஷன்களை இரு வகைகளாகப் பார்க்கலாம். அவை ~ Apps and Desktop Apps ஆகியவை ஆகும். Desktop Apps என்பவை பெர்சனல் கம்ப்யூட்டரில் மட்டுமே, விண்டோஸ் 10 சிஸ்டத்தின் கம்ப்யூட்டிங் சக்தியுடன் இயங்குபவை ஆகும். இதில் வர்த்தக நிறுவனங்களுக்கான சாப்ட்வேர் மற்றும் அடோப் போட்டோஷாப் அல்லது அடோப் பிரிமியர் போன்றவை அடங்கும்.
மற்ற அப்ளிகேஷன்கள், மற்ற கட்டமைப்பிலும் இயங்கும். விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர், விண்டோஸ் டேப்ளட், விண்டோஸ் போன், ஏன் எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனத்தில் கூட இயங்கும். நீங்கள் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் புதுப்பித்தால், பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் நீக்கப்படும். ஆனால், விண்டோஸ் இயக்கத்துடன் வரும் மைக்ரோசாப்ட் பெயிண்ட், போட்டோ ஆப், குரூவ் மியூசிக், வேர்ட் பேட், நோட்பேட் மற்றும் விண்டோஸ் பிளேயர் ஆகியவை உடன் பதியப்பட்டே இருக்கும். மற்றவற்றை, நீங்கள் பணம் செலுத்தி வாங்கியவை மற்றும் விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பெற்று இன்ஸ்டால் செய்தவற்றை, நீங்கள் மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
இந்த அப்ளிகேஷன்களை நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கியிருந்தால், அவற்றிற்கான 'ப்ராடக்ட் கீ' என்ற உரிம அனுமதியினை வைத்திருக்க வேண்டும்.

கேள்வி: ஜனவரி 12 முதல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8.9 மற்றும் 10 ஆகியவற்றுக்குத் தரப்பட்ட பாதுகாப்பு பைல்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது எனக் கட்டுரையில் தகவல் தந்துள்ளீர்கள். என் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பான, வேகமாக இயங்கும் பிரவுசர் எது என்று சொல்லவும். அதனைப் பதிந்து வைத்துக் கொள்கிறேன். நன்றி. இல்லை என்றால், பழைய பிரவுசரிலேயே தொடரலாமா?
என்.கே. கலாமணி, திண்டுக்கல்.
பதில்:
முதலில் உங்கள் கேள்வியின் இறுதிப் பகுதிக்கு வருகிறேன். பழைய பிரவுசரில் தொடரலாமா? என்று கேட்டுள்ளீர்கள். தொடரலாம். ஆனால், அது கத்தி தலைக்கு மேலே தொங்குவதைப் போன்றது. பாதுகாப்பு புதுப்பிக்கப்படாத பிரவுசர் என்பதால், எந்த நேரமும், உங்கள் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டு, அதில் தரப்படும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். எனவே, தயவுசெய்து வேறு பிரவுசருக்கு மாறிக் கொள்ளவும். நீங்கள் Chrome 49, Firefox 43, IE 11, அல்லது Opera 34 ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். எளிதான வழி, IE 11க்கு மாறிக் கொள்வதுதான். ஆனால், இது விண்டோஸ் 10ல் நன்றாகச் செயல்படுகிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், மைக்ரோசாப்ட், நீங்கள் விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. அதனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயல்படுவதனை அவ்வளவு சரியாகத் தரவில்லை. (விண்டோஸ் 10 சிஸ்டத்திலும், எந்த பிரவுசர் சரியாக நன்றாக இயங்குகிறது என முழுமையாக அறியமுடியவில்லை. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 சரியில்லை என்பது உறுதியாகத் தெரியப்பட்டுள்ளது.)
மேலே சொல்லப்பட்ட அனைத்து பிரவுசர்களையும், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கிப் பார்த்த பல சோதனைகளில், விண்டோஸ் 7க்கு, குரோம் 49 தான் சரியாக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது. எனவே, குரோம் பிரவுசரையே பயன்படுத்தவும்.

கேள்வி: புதியதாக ஐ போன் ஒன்றை வாங்கியுள்ளேன். இதுவரை ஆண்ட்ராய்ட் போன்களையே பயன்படுத்தி வந்துள்ளேன். இதில் முக்கியமான அப்ளிகேஷன்கள் என எவற்றைப் பதிய வேண்டும் என ஆலோசனை கூறவும். இணையதளங்களில் சென்று தேடினால், நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. அவை மூலம் மால்வேர் புரோகிராம்கள் வந்துவிடுமோ என அச்சமாக உள்ளது.
தா. பாக்யநாதன், திருச்சி.
பதில்:
சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஐபோனைப் பயன்படுத்தியத் தொடங்கியதற்கும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையான இந்த கேள்விக்கும் உங்களைப் பாராட்டுகிறேன். ஒரு சில பாதுகாப்பான, அதே நேரத்தில் தேவையுள்ள சில அப்ளிகேஷன்கள் குறித்து குறிப்புகள் தருகிறேன்.
முதலாவதாக கூகுள் போட்டோஸ் (Google Photos). ஆப்பிள் நிறுவனத்தின் iCloud Photo Library செயலிக்கு இணையாகச் செயல்படும். உங்கள் ஐபோன் போட்டோக்களை பேக் அப் செய்து நிர்வகிக்கலாம். இதனுடைய image recognition திறன் அசாத்தியமானது. எடுத்துக் காட்டாக, உணவு, மலை சார்ந்த போட்டோக்களை இதன் வழியாகத் தேடி அறியலாம். உங்கள் போட்டோ ஆல்பத்தினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அடுத்ததாக, பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger). இதன் மூலம், பேஸ்புக்கில் உள்ளவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். இதற்கு பேஸ்புக்கில், உங்களுக்கு அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. இதனைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் போன் அழைப்புகளை ஏற்படுத்தித் தொடர்பு கொள்ளலாம். ஸ்பார்க் (Spark) என்ற மின் அஞ்சல் செயலி மிகவும் பயனுள்ளதாக இயங்கும். உங்களுக்கான இன் பாக்ஸ் ஒன்றில், உங்களுக்கு வரும் அஞ்சல்கள், அவற்றின் தன்மையில் பிரிக்கப்பட்டு உங்களுக்குக் காட்டப்படும். இது முற்றிலும் இலவசமே. அடுத்ததாக, Dropbox. அருமையான க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதியினை இது தருகிறது. மிகவும் பயனுள்ள செயலியாக நான் கருதுவது Password. நாம் பல அக்கவுண்ட்களையும், பாஸ்வேர்ட்களையும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இவை அனைத்தையும் இந்த செயலியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். ஒரே ஒரு பாஸ்வேர்ட் மூலம் அவற்றைப் பெற்று பயன்படுத்தலாம். எனவே, ஹேக்கர்களிடமிருந்து நீங்கள் உங்கள் நிதிப் பரிமாற்றங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X