இணைய இணைப்பில் பாகுபாடு கூடாது - 'ட்ராய்' அதிரடி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2016
00:00

பேஸ்புக் மற்றும் தொலை தொடர்பு வர்த்தக சேவைப் பிரிவில் இயங்கும் பாரதி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ ஆகியோருக்குத் தடை விதிக்கும் வகையில், சென்ற வாரம், இந்தியாவில் தொலை தொடர்பு சேவை நிறுவனங்களைக் கண்காணிக்கும் 'ட்ராய்' அமைப்பு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. 'Prohibition of Discriminatory Tariffs for Data Services Regulations, 2016' என்ற பெயரில் இந்த ஆணை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், இணைய இணைப்பு சேவை வழங்குவதில், டேட்டா அடிப்படையில் கட்டணம் விதிக்கையில், பயனாளர்கள் பயன்படுத்தப்படும் டேட்டா வகையினைச் சார்ந்து கட்டணம் விதிக்கக் கூடாது என்று அறிவித்துள்ளது. ஏதேனும், அவசர நிலை காலங்களில், அவசரமாகத் தேவைப்படும் சேவையினை வழங்க, நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்குவதை 'ட்ராய்' அனுமதிக்கிறது. ஆனால், அவை வழங்கத் தொடங்கியவுடன் ஏழு நாட்களுக்குள், ட்ராய் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்த ஆணையில், “இந்திய சட்டப்படி, எந்த டேட்டா சேவைகள் குறிப்பிட்டவருக்கு மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதோ, அவை தவிர இணையத்தில் கிடைக்கும் அனைத்து டேட்டாவும், அனைத்து நுகர்வோருக்கும், கட்டண வேறுபாடின்றி வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண சலுகையில் சில சேவைகள் வழங்கப்பட்டால், நுகர்வோர்கள், அவை சார்ந்து இயங்கக் கூடும். இது இணையப் பயன்பாட்டில் சார்ந்த ஒரு நிலையை மக்களிடம் உருவாக்கும். இது கூடாது.
ஏர்டெல் நிறுவனம், 'Zero Rating' என்ற வகை சேவைத் திட்டத்தில், சில குறிப்பிட்ட இணைய தளங்களுக்குக் கட்டணமின்றி சேவை வழங்குவதை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டது. பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 'Free Basics' என்பதன் கீழ் குறைந்த கட்டணத்தில் சில இணைய தள சேவைகளை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இயக்கி வருகின்றன. இனி, இதனை இயக்க முடியாது.
'Free Basics' போன்ற திட்டங்கள், இணையத்தைப் புதிய பயனாளர்களுக்குப் பெரும் அளவில் கொண்டு சேர்க்கும் என்ற கோட்பாடினை 'ட்ராய்' ஏற்றுக் கொள்ளவில்லை.
இது போன்ற திட்டங்கள், சேவையினை வேறுபடுத்திக் காட்டுகிறது என்றும், சேவை நிறுவனங்களிடையே, ஆரோக்கியமற்ற போட்டியை ஏற்படுத்தும் என 'ட்ராய்' கூறி உள்ளது. இணையத்தில் உள்ள எந்த டேட்டாவினையும், அது எங்கிருந்து கிடைக்கிறது, சேரும் இடம், டேட்டாவின் தன்மை அல்லது அதனைக் கொண்டு தரும் செயலி ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தக் கூடாது. டேட்டாவின் அடிப்படையில், இணைய சேவை நிறுவனங்கள் கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என்று 'ட்ராய்' தலைவர் ஷர்மா அறிவித்துள்ளார். இதற்கு எதிராக, ஏதேனும் ஒரு தொலை தொடர்பு சேவை நிறுவனம், வித்தியாசமான கட்டணத்தை, டேட்டா அடிப்படையில் விதித்தால், அந்த நிறுவனத்திற்கு, நாளொன்றுக்கு ரூ.50,000 முதல் ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இணையத்தை ஒரு திறந்த வெளியாகவும், எந்த பாகுபாடும் இன்றிப் பெறும் வகையிலும் கிடைக்க தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் (telecom service providers (TSPs)) இயங்குவதை உறுதி செய்திட இது போன்ற விதிகள் தேவை என 'ட்ராய்' கருதுகிறது. தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், இணையம் வழங்கும் டேட்டாவின் தன்மை அடிப்படையில் வேறுபட்ட கட்டணத்தில் சேவைத் திட்டங்களுக்கென வேறு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொள்வதை, 'ட்ராய்' தடை செய்கிறது.
இந்த புதிய அறிவிப்பு குறித்து, ”மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பின்” (Cellular Operators Association of India (COAI)) தலைவர் கருத்து தெரிவிக்கையில், வேறுபட்ட கட்டண விதிப்பு மூலம், இதுவரை இணைப்பு பெறாத, நூறு கோடி பயனாளர்களுக்கு இணைய சேவை பெற வழி கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. இதனை 'ட்ராய்' அமைப்பு கருத்தில் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், அனைவருக்கும் சமமான இணைய சேவை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கும் நுகர்வோர் அமைப்பு, 'ட்ராய்' அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், இணைய தளங்களைத் தேர்ந்தெடுத்து தருவதும், ஒவ்வொன்றுக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கட்டணம் விதிப்பதும், இந்த விதிமுறைகளால் இனி செயல்படுத்த முடியாது. சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான அமைப்பான நாஸ்காம் இது குறித்துக் கூறுகையில், 'ட்ராய்' எப்பக்கமும் சாராமல், சரியான முடிவை எடுத்துள்ளது என்று அறிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளில், குறிப்பிட்ட சில வகை இணைப்புகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில சேவைகளை மட்டும் பயன்படுத்தும் வகையில், குறிப்பிட்ட பயனாளர்களை உள்ளடக்கிய வலைப் பின்னல்களுக்கு (Intranet for Closed Groups) இந்த விதி பொருந்தாது.
இந்த விதிவிலக்கலைத் தொலை தொடர்பு நிறுவனங்கள், தங்களுக்குச் சாதகமான முடிவுகளுக்காகத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
சென்ற ஏப்ரல் மாதம், ஏர்டெல் நிறுவனம் Airtel Zero என்ற பெயரில், குறைந்த கட்டணத்தில் சில இணையதள சேவைகளை வழங்கத் திட்டமிட்டது. ஆனால், அறிவித்த சில நாட்களிலேயே, இதற்குக் கடும் எதிர்ப்பு காட்டப்பட்டதால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அனைவருக்கும் சமமான இணைய சேவையினை ஆதரிக்கும் நுகர்வோர்கள், இது போன்ற திட்டங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர். இணையம் வழியாகவும், மின் அஞ்சல்கள் வழியாகவும், ட்ராய் அமைப்பிற்குத் தங்கள் எதிர்ப்பினைக் காட்டினார்கள். ட்ராய் இது குறித்து மக்களை கருத்து கேட்ட போது, 24 லட்சம் பேர் கருத்து தெரிவித்தனர். சமமான இணைய சேவையை விரும்பிய பெரும்பாலானவர்கள், பேஸ்புக் நிறுவனத்தின் “Free Basics” திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், தெரிவித்த கருத்துகளில் தெளிவில்லை என்று ட்ராய் அறிவித்தது. தற்போது, இந்த முடிவினை அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த முடிவு மீண்டும் பரிசீலனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் இது போல மக்கள் எதிர்ப்பினால், அரசாங்கம், அனைவருக்கும் சமமான இணைய இணைப்பினையே வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. எகிப்து நாட்டு அரசு, சென்ற டிசம்பரில், பேஸ்புக்கின் Free Basics திட்டத்தினைத் தடை செய்தது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X