கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளப் போகிறேன். தற்போது எம்.எஸ்.ஆபீஸ் 2007 தொகுப்பினை என் விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வருகிறேன். இதே ஆபீஸ் தொகுப்பினையே பயன்படுத்த வேண்டுமா? அல்லது இதற்குப் பின் வந்த, ஆபீஸ் 2013 பயன்படுத்தலாமா? அது விண்டோஸ் 10 சிஸ்டத்தில் நன்றாக இயங்குமா?
லா. சாமுவேல் ஜெபராஜ், சென்னை.
பதில்:
எம்.எஸ். ஆபீஸ் 2013 நிச்சயமாக விண்டோஸ் 10ல் இயங்கும். எனவே, இதனையே பயன்படுத்தலாம். ஆபீஸ் 2007, விண் 10னைப் பதிந்தவுடன், முன்பு இருந்தது போலவே இயங்கும். எனவே, அதனையும் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 பதிக்கப்படும் முன், ஏற்கனவே உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்களில் எவை எல்லாம் இயங்கும் என்று உங்களுக்குக் காட்டப்படும். எனவே, கவலை வேண்டாம்.

கேள்வி: நான் தயாரிக்கும் டாகுமெண்ட்களை என் கீழ் பணிபுரிபவர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறும் வேலை எனக்கு. அப்போது, அவர்கள் அந்த டாகுமெண்ட்களில் எந்த திருத்தமும் ஏற்படுத்தக் கூடாது. இதனை எப்படி பாதுகாப்பது? வேர்ட் 2007 பயன்படுத்தி வருகிறேன்.
எஸ்.கே. ஈஸ்வரி மோகன், செய்யாறு.
பதில்:
வேர்டில் இதற்கான வழிகள் உள்ளன. உங்கள் டாகுமெண்ட்டினை 'படிக்க மட்டும்' (Read Only) என அமைத்துவிட்டால் போதும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும், மிக எளிய வழி ஒன்றினைக் கீழே விளக்குகிறேன்.
1. வழக்கம் போல் உங்கள் டாகுமெண்ட்டினை உருவாக்கவும்.
2. அடுத்து F12 அழுத்தவும். வேர்ட் Save As டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
3. இந்த டாகுமெண்ட்டினை எங்கு, எந்த போல்டரில் சேவ் செய்திட வேண்டும் என்பதைக் காட்டவும்.
4. அடுத்து Save பட்டன் இடதுபுறம் உள்ள Tools பட்டனை கிளிக் செய்திடவும். அடுத்து General Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இந்த டயலாக் பாக்ஸில், டாகுமெண்ட்டிற்கு பாஸ்வேர்ட் ஒன்று கொடுக்கலாம். டாகுமெண்ட்டிற்கு read-only என்ற பண்பினை அமைக்கலாம்.
6. இங்கு 'ஓகே' கொடுத்தவுடன், வேர்ட் மீண்டும் Save As டயலாக் பாக்ஸினைக் காட்டும். Save அழுத்தி, டாகுமெண்ட்டினை சேவ் செய்து வெளியேறவும். இனி டாகுமெண்ட்டினைத் திருத்த வேண்டும் என்றால், அதற்கு நீங்களும் பாஸ்வேர்ட் கொடுத்தால் தான் முடியும்.

கேள்வி: இணைய உலா செல்லும் போது, நாம் பார்த்த தளங்களை மற்றவர் யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக, இறுதியில் அனைத்தையும் நீக்கிவிடுகிறேன். ஆனால், சில வேளைகளில், நான் பார்த்த தளங்களின் முகவரிகள் தேவைப்படுகின்றன. மற்றவர்கள் பார்க்காமல், நான் மட்டுமே பார்க்கும் வகையில் இவற்றை எப்படி அமைத்துக் கொள்வது?
எஸ். பூமிநாதன், பெங்களூரு.
பதில்:
நல்ல கேள்வி. இது போன்ற சூழ்நிலைகளைப் பலர் எதிர்நோக்குகின்றனர். நாம் அழித்துவிடுவதால், மீண்டும் அவற்றைப் பார்க்க இயலாது. வைத்திருந்தால், நான் எந்த தளங்களைப் பார்க்கிறோம் என்று மற்றவர்கள் பார்த்து, எந்த வகை தகவல்களைத் திரட்டி உள்ளோம் என்று கண்டறிந்துவிடுவார்கள். இது போன்ற திட்டமிடலுக்கு உதவிட ஒரு இலவச புரோகிராம் உள்ளது. அதன் பெயர் xmarks. இதனை www.xmarks.com என்ற இணைய தளத்தில் பெறலாம். இந்த தளம் சென்று, இதற்கான Install Now பட்டனை அழுத்தவும். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கவும். யூசர்நேம், பாஸ்வேர்ட் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளைத் தரவும். இவற்றின் மூலம், எக்ஸ்மார்க்ஸ் தளம் சென்று, எந்த பிரவுசர் வழியாகவும், நீங்கள் பயன்படுத்திய அனைத்து புக்மார்க்குகளையும் பெறலாம். இந்த வசதியுடன் சேர்த்து ஒரு சில கூடுதல் வசதிகளையும் இந்த தளம் தருகிறது.

கேள்வி: இந்த ஆண்டில், லேப்டாப் கம்ப்யூட்டர்களில், புதிய தொழில் நுட்ப வசதிகளாக எவை இருக்கும் என எண்ணுகிறீர்கள்? அவை நிலைத்திடுமா? என்பதனையும் விளக்கவும்.
என். ஜெயப்பிரகாஷ், சென்னை.
பதில்:
தற்போது விற்பனைக்கு அறிமுகமாகி வரும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், சென்ற ஆண்டில் வெளியாகி, மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள பல புதிய வசதிகள், இனி மாறா நிலையில் அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இடம் பெறும். இவை நிலைத்திடுமா? என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இனி புதிய தொழில் நுட்ப வசதிகள் குறித்து கூறுகிறேன்.
1. லேப்டாப், டேப்ளட் பி.சி. என ஒரே சாதனம் இரண்டு வகையில் இயங்கும் வகையில் இருப்பது தொடரும்.
2. டிஜிட்டல் பேனா, ஸ்டைலஸ் பேனா, பென்சில் மூலம் உள்ளீடு செய்வது அதிகரிக்கும்.
3. விரல் ரேகை மற்றும் முக அடையாள அடிப்படையில் பாதுகாப்பான தொடக்கம் தரப்படுவது பரவலாகும்.
4. லேப்டாப் கம்ப்யூட்டர்களில், புதியதாக 4கே தொழில் நுட்பத்திலான டிஸ்பிளே கொண்ட திரைகள் இருக்கும்.
5. லேப்டாப் திரைகளில், இனி வண்ணங்கள் துல்லியமாகக் காட்டப்படும்.
6. எடை குறைந்த, ஆனால் வலிமை கூடிய (மேக்னீசியம் உலோக வடிவமைப்பு) அழுத்தி அமைக்கப்பட்ட உலோக வெளிப்பூச்சுகள், லேப்டாப் கம்ப்யூட்டர்களை வலிமையுடன் அமைத்து, அவற்றை விழுவதனால் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும்.
7. பேட்டரியின் வாழ்நாள் அதிக நாட்கள் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
8. ஆடியோ தொழில் நுட்பம் உயர்வடையும். அதற்கேற்ற வகையில் திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் பொருத்தப்படும். இதன் மூலம், பயனாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த முறையில் தங்கள் திட்டங்கள், பொருட்கள் குறித்து விளக்க முடியும்.
9. லேப்டாப் தயாரிப்பாளர்கள், மற்ற தயாரிப்புகளிடமிருந்து தங்கள் கம்ப்யூட்டரை வேறுபடுத்திக் காட்ட, புதிய தொழில் நுட்ப உதவியுடன், தனி வசதியினைக் கொண்டு லேப்டாப் கம்ப்யூட்டர்களை வடிவமைப்பார்கள். லேப்டாப் இயக்கப்படாமல் இருக்கும்போது, ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்வது போன்ற வசதிகள் கிடைக்கும்.
10. யு.எஸ்.பி. இணைப்பில், அதிகமாக டைப் சி கனக்டர்கள் பயன்பாடு பெருகும்.

கேள்வி: இணையத்தில் வலம் வருகையில், பல தளங்களில், “sign in with Facebook” என்று கேட்கப்படுகிறது. தொடர்ந்து அந்த தளத்தைப் பார்க்க, நம் அடையாளத்தைக் காட்ட, இது எளிதான வழிதான். ஆனால், பேஸ்புக் கணக்கு வழியாகச் செல்கையில், நான் பார்க்கின்ற தளமும் நான் அனுமதி தந்த என் நண்பர் அல்லது உறவினர் போல அடுத்து இயங்குமா? இந்த தளத்திற்கு அடுத்து வருபவர்கள், என் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தில் உள்ள தகவல்களைப் பார்க்க அனுமதித்தது போல ஆகிவிடுமா?
என். சியாமளா, விருதுநகர்.
பதில்:
நல்ல கேள்வி. பலருக்கு இது போல சந்தேகம் உண்டு. முதலில், நீங்கள் அனுமதிக்கும் உங்கள் நண்பர்களும் உறவினர்களும், நீங்கள் எந்த தகவல் பதிவுகளை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறீர்களோ, அவற்றை மட்டுமே பார்க்க முடியும். போட்டோ, போன் எண்கள் போன்றவையும் அது போலவே தான். உங்களுடைய பேஸ்புக் லாக் இன் மூலம் ஒரு தளத்திற்குச் செல்கையில், உங்கள் பதிவுகளை அத்தளம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டாலும், அது உங்களிடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே முடியும். பேஸ்புக்கில், எவற்றை, யார் யார் பார்த்து பகிர்ந்து கொள்ள அனுமதிக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்திட வசதி உண்டு. இதற்கு பேஸ்புக்கில் உங்கள் அக்கவுண்ட் தளம் செல்லவும். பின்னர், அதில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர், Apps என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Logged in with Facebook என்ற டேப் இருப்பதனைக் காணலாம். இங்கு இதனைச் சற்று மாற்றி அமைக்க வழி தரும் App என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் ஏற்கனவே இது போல அனுமதி தந்தவை பட்டியலாக இருக்கும். அவற்றின் பெயருக்கு எதிரே, எடிட் செய்திட Edit Settings / Remove ஆகியவை கொண்ட மெனுகிடைக்கும். இதில் Edit Settings கிளிக் செய்து, எவற்றை எல்லாம், குறிப்பிட்ட கேம்ஸ் அல்லது தளம் பார்க்கலாம் என்பதற்கான அனுமதி கொடுக்கலாம் அல்லது நீக்கலாம். அவ்வளவுதான், உங்கள் கவலை நீங்கும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மட்டுமே கார்டனாவைப் பயன்படுத்த முடியுமா. என்னிடம் விண் 8.1 உள்ளது. இதில், கார்டனா அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று என் நண்பர் கூறுகிறார். தெளிவாக விளக்கவும். மேலும், விண்டோஸ் சிஸ்டம் உள்ள ஸ்மார்ட் போனில் பயன்படுத்த முடியுமா?
ஆர். ஷக்கரியா பாட்சா, காரைக்கால்.
பதில்:
கார்டனா செயலி, விண்டோஸ் 10ல் மட்டுமே கிடைக்கும். உங்களிடம் விண்டோஸ் 8.1 சிஸ்டம் இருப்பதால், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு இலவசமாக மாறிக் கொள்ளுங்கள். அதில் கார்டனா இணைக்கப்பட்டே கிடைக்கும். இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும். உங்களுடைய விண்டோஸ் ஸ்மார்ட் போனுக்கான விண் 10 சிஸ்டத்திலும் கார்டனா கிடைக்கிறது. இந்த அப்ளிகேஷனை நீங்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்கள் பொதுவாக, வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு எழுத்துகளுடன் அமைக்கப்படுகின்றன. ஒரு சில டாகுமெண்ட்களில், மிக லேசான அழுத்தத்தில் வண்ணங்கள் பின்னணியில் உள்ளன. எழுத்துகளின் நிறமும் மாற்றப்பட்டுள்ளன. எழுத்தின் நிறம் மாற்றுவது குறித்து நான் அறிவேன். பின்னணி நிறம் எப்படி அமைப்பது? விரும்பிப் படிக்கும் வகையில், மெல்லிய நிறத்தை எப்படிக் கொண்டு வருவது?
ஆ. ஸ்ரீலஷ்மி, தென்காசி.
பதில்:
பொதுவாக, இணைய தளங்களுக்குப் பக்கத்தை உருவாக்குபவர்களே, பின்னணியில் நிறம் அமைத்து, டெக்ஸ்ட் அமைப்பார்கள். இருப்பினும் உங்கள் விருப்பத்திற்கான என் பதில் இதோ: வேர்ட் புரோகிராம் இதற்கான வசதியைனைக் கொண்டுள்ளது. பயன்படுத்துவதும் எளிது. பின்புல வண்ணம் அமைக்கும் வழிகளைக் கீழே தருகிறேன்.
1. ரிப்பனில் பேஜ் லே அவுட் டேப்பினைக் கிளிக் செய்திடவும்.
2. இங்கு Page Background குரூப்பில், Page Color என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் வண்ணங்கள் நிறைந்த ஒரு கட்டத்தை உங்களுக்குக் காட்டும். இதிலேயே, கூடுதல் வண்ணங்கள் பெறவும் வழிகள் இருக்கும்.
3. உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வண்ணம், டாகுமெண்ட்டிற்கு பின்புல வண்ணமாக, படிப்பதற்கு இடையூறு இல்லாத வகையில் அமைக்கப்பட வேண்டும்.
நீங்கள் மவுஸ் கர்சரை வண்ணங்களுக்கான கட்டங்களில் செல்லும்போதே, டாகுமெண்ட் பின்புறம் இந்த வண்ணங்கள் அமைக்கப்பட்டுக் காட்டப்படும். சரியானது என நீங்கள் முடிவு செய்தால், அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வண்ணத்தினை நீக்க வேண்டும் என முடிவு செய்தால், மேலே காட்டியுள்ளபடி சென்று “No color” என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X