மாரடைப்பை தடுப்பது எப்படி?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2010
00:00

இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான புகைபிடித்தல் போன்ற காரணங்களை தவிர்த்து,  அத்தகைய மருத்துவ காரணங்கள் (உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு) இருப்பின் அதை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான சில வாழ்வு முறைகளை அமைத்து, அதை தவறாமல் கடைபிடித்து வருவதே மாரடைப்பை தடுக்க சிறந்த வழி.
ஆரோக்கியமான வாழ்வு முறை:
கொழுப்புச் சத்து குறைந்த உணவு உட்கொள்ளுதல். உணவில் சரியான அளவு பழவகைகளையும், காய்கறிகளையும் சேர்த்து கொள்ளுதல். உப்பின் அளவை குறைத்தல். இத்தகைய உணவு முறைகளின் மூலம் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து போன்ற மருத்துவ காரணங்களையும் கட்டுப்படுத்துவது எளிதாகிறது.
சரியான உடல் எடையை பேணுதல்:
 இது உங்கள் உயரத்தை பொறுத்தது. இதைக் கண்டறிய, உங்கள் உயரத்தை சென்டி மீட்டரில் அளந்து, அதிலிருந்து 100ஐ கழித்தால் வரும் எண்ணின் அளவிலான, "கிலோ' அளவே உங்கள் சரியான எடை. உதாரணமாக உங்கள் உயரம் 160 செ.மீ., என்றால், உங்களின் சரியான எடை (100 கழித்து) 60 கிலோ இருக்க வேண்டும்.
இடுப்பின் சுற்றளவு, ஆண்களுக்கு 90 செ.மீ.,க்கு மிகாமலும், பெண்களுக்கு 80 செ.மீ.,க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இடுப்பின் அளவு இதற்கு மிகையாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பின்னாளில் மாரடைப்போ, பக்கவாத நோயோ வரும் சாத்தியக் கூறுகள் இருமடங்காகின்றன. இதன் பொருள் என்னவென்றால், உடலின் மற்ற பாகங்களில் தேங்கும் கொழுப்பை விட, இடுப்பில் படியும் கொழுப்பு, உடலின் உள்ளுறுப்புகளின் கொழுப்பு சதவீதத்தை பிரதிபலிக்கிறது. - டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா, மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X