வயதான காலத்தில் படபடப்பு ஏற்படலாமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2010
00:00

எஸ்.ராஜராஜன், தேனி: ரத்தக்கொதிப்புக்கு Amlodipine  5 மி.கி., மாத்திரையை தொடர்ந்து எடுப்பதால் பக்க விளைவுகள், குறிப்பாக ஆண்மை குறைவு ஏற்படுமா?
ரத்தக்கொதிப்புக்கு முதன்மை சிகிச்சை வாழ்க்கை முறை மாற்றமே. உப்பு, சர்க்கரை, எண்ணெய்யை குறைப்பது, காய்கறி, பழங்களை அதிகமாக எடுத்து கொள்வது, தினமும் நடைப்பயிற்சி, மனதை லேசாக வைத்து கொள்வது போன்றவை முக்கியம். மருந்து வகைகளை பொறுத்தவரை மிக நல்ல மாத்திரைகள் உள்ளன. இதில் ஒன்று தான் Amlodipine. இது Calcium Blocker  வகையை சேர்ந்தது. இதனால் வரக்கூடிய பக்க விளைவுகள் மிகவும் குறைவே. குறிப்பாக மிகச்சிலருக்கு கால் வீக்கமோ அல்லது மலச்சிக்கலோ ஏற்படலாம். இதனால் ஆண்மை குறைவு ஏற்படும் வாய்ப்பு மிக மிக குறைவு. இதை தொடர்ந்து எடுப்பது நல்லது.

பி.கே.ராமன், மதுரை: எனது வயது 70. சில காலமாக வேகமாக மாடிப்படி ஏறினாலும், எந்த வேலை செய்தாலும் படபடப்பு ஏற்படுகிறது. எனக்கு ரத்தக்கொதிப்பும், சர்க்கரையும் உள்ளது. அவற்றை கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். எனக்கு வேறு பரிசோதனைகள் தேவையா?
எழுபது வயதில் படபடப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. அவசியம் நீங்கள் முழு பரிசோதனை செய்தாக வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கொலஸ்ட்ரால், கிரியாட்டினின் அளவை தெரிந்து கொள்வது அவசியம். இத்துடன் சிறுநீர் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., எக்கோ, டிரெட்மில் பரிசோதனைகளை செய்தாக வேண்டும்.
இவற்றில் எதனால் படபடப்பு வந்தது என கண்டறிய இயலும். அதற்கேற்ப சிகிச்சை முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

நாகலட்சுமி, மதுரை: ஆஞ்சியோகிராம் பரிசோதனை அறிக்கையில்  Right Dominant System  என்பது எதை குறிக்கிறது?
இதயத்திற்கு ரத்த ஓட்டம் மூன்று குழாய்கள் வழியாக செல்கிறது. இவை இடதுபுறம் 2ம், வலதுபுறம் ஒன்றுமாக உள்ளன. இடதுபுறம் உள்ள ரத்தக்குழாய்,  Left Anterior Descending Artery   என்றும், Circumflex  என்றும் உள்ளன. வலதுபுறம் உள்ள ரத்தக்குழாய், Right Coronary Artery எனப்படும். Dominance  என்றால் எந்த ரத்தக்குழாய் இதயத்தின் அடிப்பகுதிக்கு  (Crux) ரத்தம் எடுத்துச் செல்கிறதோ, அதையே Dominant Artery  என்று குறிப்பிடுவர். பொதுவாக 85 சதவீதம் பேருக்கு வலது கொரனரி ஆர்டரி தான் Dominant  ஆக இருக்கும். 10 சதவீதம் பேருக்கு இடதுபுறமுள்ள சர்க்கம்ப்ளக்ஸ் ஆர்டரி தான் Dominant  ஆக இருக்கும். 5 சதவீதம் பேருக்கு CoDominant­ ஆக வலது கொரனரி மற்றும் சர்க்கம்ப்ளக்ஸ் ஆர்டரி ஆகிய 2ம் அமைந்துள்ளது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், வலதுபுறம் உள்ள வலது  கொரனரி ஆர்டரி  Dominant  ஆக இல்லாமல் இருந்து, அந்த ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால் அந்த ரத்தக்குழாய்க்கு ஆஞ்சியோ பிளாஸ்டியோ அல்லது பை-பாஸ் அறுவை சிகிச்சையோ தேவைப்படாது.

ஜேக்கப், மதுரை: எனது வயது 46. கடந்த 20 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்புக்கு LosartanH  என்ற மாத்திரையை காலை, மாலை எடுத்து வருகிறேன். இதை நான் தொடர்ந்து எடுக்கலாமா?
உங்களுக்கு 20 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளதென்றால், 26 வயதிலேயே ரத்தக்கொதிப்பு துவங்கி விட்டது.
இந்த வயதில் ரத்தக்கொதிப்பு இருக்கிறது என்றால், இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எனவே, எதனால் உங்களுக்கு ரத்தக்கொதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிய வேண்டும். வாழ்க்கை முறை மாற்றம் ரத்தக்கொதிப்புக்கு முக்கிய சிகிச்சை. உங்கள் வயதுக்கு நீங்கள் எடுக்கும் மாத்திரை சரியானது அல்ல. உடனடியாக நீங்கள் இதய டாக்டரிடம் சென்று, ஆலோசனை செய்து, உங்கள் வயதுக்கு ஏற்ற, பக்க விளைவுகள்  இல்லாத மாத்திரையை எடுப்பது முக்கியம். - டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X