கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2016
00:00

கேள்வி: எனக்குக் கிடைக்கும் எக்ஸெல் ஒர்க் ஷீட்களில், அழகாக கட்டம் கட்டி, அதனுள்ளாக டெக்ஸ்ட் அமைத்து வருகிறது. செல் எல்லைகள் அதனைக் கட்டுப்படுத்துவது இல்லை. இதனை எப்படி அமைப்பது?
என். தண்டபானி, விருத்தாச்சலம்
பதில்:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் 'டெக்ஸ்ட் பாக்ஸ்' என்பதுவும் ஒரு வகையில் கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட் போல அமைக்கப்படுவதுதான். இதனை அமைக்கக் கீழ்க்காணும் வகையில் செயல்படவும்.
1. செயல்பட ஒர்க் ஷீட் ஒன்றைத் திறந்து கொள்ளவும். இப்போது Insert என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. Insert டேப்பில் கிடைக்கும் மெனு ஐகான்கள் வரிசையாகக் கிடைக்கும். இங்கு வலது புறத்தில் A எழுத்துடன் கூடிய பாக்ஸ் ஒன்றின் ஐகான் இருக்கும். இதுவே டெக்ஸ்ட் பாக்ஸ் தரும் ஐகான் ஆகும். இதனைக் கிளிக் செய்திடவும்.
3. இப்போது, ஒர்க் ஷீட்டில், ஒரு பாக்ஸ் சிறியதாகக் கிடைக்கும். இதன் முனைகளை மவுஸ் கர்சரினால் இழுத்து பெரிதாக்கலாம்.
4. அடுத்து கர்சரை உள்ளே கொண்டு சென்றால், வேர்டில் டைப் செய்வது போல உங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடலாம். டாகுமெண்ட் போல அதனை பார்மட் செய்திடலாம்.
தொடர்ச்சியாக, அந்த டெக்ஸ்ட் பாக்ஸை எங்கு அமைக்க வேண்டுமோ, அங்கு மவுஸ் கர்சர் கொண்டு இழுத்துச் சென்று, டெக்ஸ்ட்டுடன் பாக்ஸை விட்டுவிடலாம். ஒர்க் ஷீட் சேவ் செய்திடுகையில் அதுவும் சேவ் செய்யப்படும்.

கேள்வி: நான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மெதுவாக வேலை செய்கிறது என்று பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், பின்னர் குரோம் பிரவுசருக்கும் மாறினேன். இப்போது குரோம் பிரவுசரும் மெதுவாக வேலை செய்கிறது. ஆனால், வேறு பிரவுசர் எதுவும் எனக்குத் தெரியவில்லை. நான் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7. அறிவுரை கூறவும்.
கே. சிராஜுதீன், உத்தமபாளையம்.
பதில்:
விண்டோஸ் 7 உள்ளதே. உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இணைந்து செயல்படும் என்றால், விண்டோஸ் 10க்கு மாறிக் கொண்டு, எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்திப் பாருங்கள். அதில் குரோம் பிரவுசரையும் பயன்படுத்தலாம். இருப்பினும், குரோம் பிரவுசரின் வேகத்தை அதிகரிக்கக் கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள். அவற்றை இங்கு சுருக்கமாகத் தருகிறேன்.
1. குரோம் பிரவுசருக்கான அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்து மேம்படுத்திக் கொள்ளவும். இதற்கு chrome://help என அதன் அட்ரஸ் பாரில் டைப் செய்து, சென்று, அதில் தரப்படும் வழிகளைப் பின்பற்றவும்.
2. அடுத்து, chrome://extensions என டைப் செய்து கிடைக்கும் தளத்தில், பயன்படுத்தாத, தேவையற்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை முடக்கி (Disable) வைக்கவும்.
3. அதே போல, chrome://plugins என டைப் செய்து, தேவையற்ற ப்ளக் இன் புரோகிராம்களை முடக்கி வைக்கவும்.
4. அடுத்ததாக, chrome://flags என டைப் செய்து, கிடைக்கும் தளத்தைக் காணவும். இங்கு Enable fast tab/windows close என்று இருப்பதைக் காணவும். இதன் மூலம் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இதன் பின்னர், RELAUNCH NOW அழுத்தி, அமைப்பினை புதிதாய் இயக்கவும்.
5. மீண்டும் chrome://flags என்ற தளம் சென்று, அதில் Enable tab discarding என்பதனைக் காணவும். இதன் மூலம் பின்னணியில் இயங்கும் டேப்களை குரோம் மூடித் தன் செயல் வேகத்தினை அதிகரிக்கும். முன்பு கூறியது போல, இந்த பட்டனை அழுத்தி இயக்கிய பின்னர், RELAUNCH NOW என்பதனையும் அழுத்த வேண்டும்.
6. அடுத்து, குரோம் பிரவுசருக்கான கேஷ் மெமரியை நீக்கவும். இது தொடர்ந்து அதிகரிப்பதால், டிஸ்க்கில் இதற்கென ஒதுக்கப்பட்ட இடம் குறைந்து, செயல்பாடு வேகம் குறையலாம்.
7. அடுத்து, Malwarebyte's Anti-Malware. Google's Software Removal ஆகியவற்றைப் பயன்படுத்தி, பிரவுசர் இயக்கத்திற்கு பிரச்னைகளைத் தரும் மால்வேர் புரோகிராம்களை நீக்கவும். மேக் கம்ப்யூட்டரில், குரோம் பயன்படுத்துபவர்கள் Malwarebyte's Anti-Malware for Mac என்ற புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.
8. மேற்கண்ட முயற்சிகளை மேற்கொள்கையில், குரோம் அந்த அந்த பக்கங்களின் மேலாக, சில எச்சரிக்கை செய்திகளைத் தரும். அதற்கேற்ற வகையில் இயங்கவும். ஏற்படுத்திய மாற்றங்களை மீண்டும் இயக்க நிலைக்குக் கொண்டு வர, Reset all to default என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

கேள்வி: கிரிக்கெட் குறித்து ஒரு டாகுமெண்ட் தயாரிக்கையில், வேர்ட் புரோகிராமில், தவறாக எழுத்துப் பிழையுடன் கூடிய ஒரு சொல்லை, அதில் தரப்பட்டுள்ள Custorm Dictionary யில் சேர்த்துவிட்டேன். இதனை எப்படி அழிப்பது எனத் தெரியவில்லை? வழி காட்டவும். நான் பயன்படுத்துவது விண்டோஸ் 7. ஆபீஸ் 2010.
என்.எஸ். மஹாதேவன், பரமக்குடி.
பதில்:
File டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Proofing தேர்ந்தெடுத்து, அதில் தரப்படும் பிரிவுகளில் Custom Dictionaries தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து “Edit Word List” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு தேடல் கட்டத்தில், நீங்கள் தவறாகத் தந்த சொல்லைத் தரவும். அல்லது சொற்கள் பட்டியலில், வரிசையாகச் சென்று, அந்தச் சொல்லைக் கண்டறியவும். அதனைச் சரியாகக் கண்டறிந்த பின்னர், Delete பட்டனை அழுத்தி நீக்கவும்.

கேள்வி: வேர்ட் புரோகிராமில் தரப்பட்டுள்ள டிபால்ட் எழுத்தினை, நான் எப்போதும் பயன்படுத்தும் எழுத்துக்கு மாற்ற விரும்புகிறேன். இதனை எப்படி மேற்கொள்வது? ஒவ்வொரு முறையும் டாகுமெண்ட்டில் இதனை மாற்றிக் கொள்வது சிரமமாக உள்ளது. இந்த எழுத்தினை அமைத்துக் கொள்வதை வேர்ட் எப்படி மேற்கொள்கிறது என்று விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். தெய்வேந்திரன், சங்கரன் கோவில்.
பதில்:
நீங்கள் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்குகையில், வேர்ட் அந்த டாகுமெண்ட் எப்படி தோன்றுகிறது என்பதனை சில மாறா நிலை அமைப்புகளின் அடிப்படையில் அமைக்கிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவினை, இரண்டு இடங்களில் அமைத்துக் கொள்ள முடியும் என்றாலும், ஓர் இடத்தில் மட்டுமே அமைக்கிறது. விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் இதனைப் பதிவு செய்கிறது. இதன் அடிப்படையில் தான், Normal Template என்னும் டாகுமெண்ட்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு உருவாகிறது.
வேர்ட் மாறா நிலையில் மேலே சொல்லப்பட்ட டெம்ப்ளேட்டினை அமைக்கவில்லை என எடுத்துக் கொண்டு, நீங்கள் விரும்பும் எழுத்துரு வகையினை மாறா நிலையில் அமைக்கலாம்.
1. புதிய டாகுமெண்ட்டில், தானாக இயங்கும் எழுத்தில் ஏதேனும் சில சொற்களை டைப் செய்திடவும்.
2. நீங்கள் டைப் செய்தவற்றில் சில எழுத்துகளைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது Ctrl+D என்ற கீகளை அழுத்தவும். வேர்ட் இப்போது Font Dialogue Box ஐக் காட்டும்.
4. அந்த பாக்ஸில் தரப்பட்டுள்ள கண்ட்ரோல் டூல்களைப் பயன்படுத்தி, நீங்கள் பயன்படுத்த விரும்பும், மாறா நிலையில் அமைக்க விரும்பும், எழுத்துருவினைத் தேர்ந்தெடுக்கவும்.
5. தொடர்ந்து Default பட்டனை அழுத்தவும். இப்படி அழுத்துகையில், விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் இந்த மாற்றம் பதியப்படும்.
6. இந்த எழுத்துருவினையே, மாறா நிலையில் அமைக்க விருப்பமா? (Default Font) என்ற கேள்விக்கு “Yes” என அழுத்தவும்.
7. தொடர்ந்து OK அழுத்தி வெளியே வரவும்.
வேர்ட் ஏற்கனவே, Normal.dotm என்ற ஒன்றை ஏற்படுத்தி இருந்தால், இன்னொரு வகையிலும், இந்த மாற்றத்தினை மேற்கொள்ளலாம். கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. உங்கள் ஹார்ட் ட்ரைவில் Normal.dotm எங்கு உள்ளது எனக் கண்டறிந்து, அதனை வேர்ட் புரோகிராமில் திறக்கவும்.
2. இப்போது வேர்ட் ரிப்பனில், Home டேப்பில், Styles குரூப் பார்க்கவும். இதில் வலது ஓரமாக, ஒரு கீழ்விரி பட்டியலுக்கான அம்புக் குறி இருக்கும். அதனை அழுத்தவும். வேர்ட் இப்போது Styles task pane ஐக் காட்டும்.
3. ஸ்டைல் பட்டியலில் கீழாகச் செல்லவும். அதில் Normal என்ற ஸ்டைல் இருக்கு.
4. இதிலும் வலதுபுற அம்புக் குறியை அழுத்திக் கிடைக்கும் பட்டியலில், Modify என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Modify Style பாக்ஸ் கிடைக்கும்.
5. இனி Format கிளிக் செய்து, Font தேர்ந்தெடுக்கவும். வேர்ட் பாண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
6. இங்கு கண்ட்ரோல் பயன்படுத்தி, உங்களுக்கு விருப்பமான எழுத்துருவினைத் தேர்ந்தெடுக்கவும்.
7. தொடர்ந்து இருமுறை OK கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: கூகுள் தளத்தில், அதன் தேடல் டூல் மூலம் நாம் மேற்கொள்ளும் தேடல்கள் எல்லாம் கூட பட்டியலிட்டுக் கிடைக்கும் என்று என் நண்பர் கூறுகிறார். இது உண்மையா? அப்படியானால், அவற்றை மற்றவர்கள் பார்த்து, நாம் மேற்கொண்ட தேடல்களை அறிந்து, நம் தனிப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திடுமே? இதனை எப்படி தடுக்கலாம்?
ஆர். ரேவதி பிரகாஷ், தேனி.
பதில்:
உங்கள் நண்பர் கூறுவது உண்மையே. கூகுள் நீங்கள் மேற்கொண்ட தேடல்களை எல்லாம், தன் பதிவாகக் கொண்டிருக்கும். இவற்றை நீங்கள் மட்டுமே பார்வையிட முடியும். நீங்கள் பிரவுசர் வழி பார்த்த இணைய தளங்களை, உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பது போல, இதனையும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இவற்றை உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்தால் தான், கூகுள் தேடல் பட்டியலைக் காட்டும். எனவே, கவலைப்பட வேண்டாம். தேவை எனில், நீங்கள் உங்கள் தேடல்களை, ஒரு டெக்ஸ்ட் பைலாகப் பெற்று, ரகசியமாக, மற்றவர் அறியாமல் வைத்துக் கொள்ளலாம். அதனை எப்படிப் பெறுவது என்று கீழே கூறுகிறேன்.
இந்த தொகுப்பினைப் பெற முதலில் https://history.google.com/ என்ற தளம் செல்லவும். நீங்கள் ஜிமெயில் பார்த்துக் கொண்டிருந்தாலும், மீண்டும் பாஸ்வேர்ட் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். சரியாகக் கொடுத்த பின்னர், கிடைக்கும் தளத்தில், வலது மேல் மூலையில் இருக்கும் கியர் ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். அங்கு காட்டப்படும் கீழ்விரி மெனுவில், "Download" என்பதில் கிளிக் செய்தால், உங்களின் தேடல்கள் அனைத்தும், அவை சேர்த்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டு, உங்களுக்குத் தரப்படத் தயாராய் இருக்கும். உங்களின் சந்தேகத்திற்குத் தீனி போடும் வகையில், கூகுள் ஒரு எச்சரிக்கையைத் தரும்.
”உங்கள் தேடல்களில், மற்றவர்கள் அறியக் கூடாத தேடல்கள் சில இருக்கலாம். மற்றவர்களுக்குக் காட்டப்படாமல் இருக்க வேண்டிய தளங்கள் இருக்கலாம்” என்று அறிவித்து, பின்னர் எப்படி எச்சரிக்கையாக, இதனைக் காப்பாற்றி வைக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி, அந்தப் பட்டியலைத் தரும். அல்லது மொத்த தேடல் தொகுப்பினையும் பெற, உங்கள் மெயில் அக்கவுண்ட்டிற்கு ஒரு லிங்க் அனுப்பும். அந்த பைல் சுருக்கப்பட்ட பைலாக இருக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
18-மார்ச்-201616:02:24 IST Report Abuse
kalyanasundaram My laptop dell Vostro 3558 flicker even after changing mother board, and display screen. how can I over come this defect.
Rate this:
Share this comment
Cancel
rc - Chennai,இந்தியா
14-மார்ச்-201620:45:39 IST Report Abuse
rc கம்ப்யூட்டர் மலர் பகுதிக்கு ஆண்டி வைரச் தகுதி நிலையில் நார்டன், காச்பெர்ச்கை, டிரண்ட் மைச்ரோ முதலியவை மேலிருக்கின்றன. ஆனால், கச்பெர்ச்கி தளத்தில் விண்டோச் 10 க்கான பாதுகாப்பு முழுமையாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்களே? தெளிவாக்க வேண்டும். நன்றி, சந்தர்
Rate this:
Share this comment
Cancel
rc - Chennai,இந்தியா
14-மார்ச்-201620:40:22 IST Report Abuse
rc ஆசிரியருக்கு, மிகவும் உபயோகமான கம்ப்யூட்டர் மலர் பகுதிக்கு கேள்விகள் அனுப்பவேண்டிய இ-மெயில் முகவரி காணக்கிடைக்கவில்லையே - சந்தர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X