திருந்திட்டேன் (1)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2016
00:00

நாய்க்குட்டி பாபுவைக் கண்டதும் ஓட்டமெடுக்கும். அவனைக் கண்டாலே அதற்குப் பிடிப்பதில்லை. பவித்ராவைக் கண்டதும் பூனைக்குட்டி கிரீச்சென்று சப்தமிட்டு பதுங்கிக் கொள்ளும். ஏன் தெரியுமா? பாபுவுக்கும், பவித்ராவுக்கும் பிராணிகளைத் துன்பப்படுத்தி விளையாடுவதென்றால் மிகவும் ஆனந்தம்.
அவர்கள் பெற்றோரும் அவர்களை அதட்டி நல்ல பிள்ளைகளாக இருக்கும்படி கண்டித்தனர். ஆனால், அவர்கள் கேட்பதில்லை.
மரத்தின் மீது ஏறி பறவைகளின் கூடுகளைப் பிரித்து அதிலுள்ள முட்டைகளை எடுப்பது இவர்களுக்கு ரொம்ப, ரொம்ப பிடித்தமான விளையாட்டு. விதவிதமான அழகான முட்டை ஓடுகளை சேகரிப்பதில் அவர்களுக்குப் பிரியம் அதிகம். நீல முட்டை, சிவப்பு முட்டை, கரும்புள்ளி விழுந்த முட்டை... இப்படி ரகரகமான முட்டைகளை பஞ்சு வைத்த சோப்புப் பெட்டிகளில் அடுக்கி அழகு பார்ப்பார்கள். அதற்காக பல முட்டைகளைத் நாசம் செய்தனர்.
ஒருநாள், பாபுவும், பவித்ராவும் முட்டை வேட்டைக்குக் கிளம்பினர். முதலில் சிட்டுக் குருவியின் முட்டை இரண்டை தூக்கிக் கொண்டனர். பாவம், தாய் சிட்டுக் குருவி கத்திக் கொண்டு தன் கணவனைக் கூப்பிட ஓடிற்று. பாபுவின் அடுத்த குறி, ஒரு குயிலின் கூடு. பாடிக் கொண்டிருந்த குயில் அழுத வாறே பாபுவின் அக்கிரமச் செயலுக்குச் சாபம் கொடுத்தது.
கடைசியில்தான், பாபு ஒரு குட்டிச் சுவரின் மீது அந்த கூட்டைக் கண்டான். அவ்வளவு தான் ஒரே ஜம்ப்! மறு நிமிடம் பாபு சுவரின் மீது. அடுத்த நிமிடம் ஆச்சரியத்துடன் அவன் கத்தினான்.
''பவித்ரா நமக்கு சரியான அதிர்ஷ்டம்! இதோ... ரொம்ப அபூர்வமான ஒரு பறவையின் முட்டை,'' என்று கத்தினான்.
அந்தக் குட்டிச் சுவரின் மீதிருந்த கூட்டில் ஒரு வினோதமான முட்டை இருந்தது.
பம்பரம் போல்...
''பார்த்தியா பவித்ரா... ஆச்சரியமாக இல்லே. நீ இதுவரைக்கும் இந்த மாதிரி பார்த்திருக்கிறாயா? என்ன வினோதம் பார்த்தாயா?''
சுவரில் தொத்தியபடி ஆச்சரியத்தால் திறந்த வாயுடன் நின்ற பவித்ரா, ''ஆமாண்டா! பம்பரம் போல கூரா இருக்கு. பட்டை பட்டையா வர்ணம் பூசியிருக்கு!''
பாபு அதைக் கையில் எடுத்தான். உடனே 'ஐயையோ' என்று கையை உதறிக் கொண்டு துள்ளிக் குதித்தான்.
''நெருப்பாகக் கொதிக்கிறதே. கையைச் சுட்டுடுத்து,'' என்றான் வாயால் விரலை ஊதியபடி.
பவித்ராவும் தொட்டுப் பார்த்தாள். அது நெருப்பாகக் கொதித்தது. அதற்காக அவர்கள் அதை விட்டு விடவில்லை. மெல்ல அதை ஒரு குச்சியால் தங்களிடமிருந்த ஒரு சோப்புப் பெட்டிக்குள் தள்ளிக்கொண்டு வீடு வந்து விட்டனர்.
வீட்டுக்கு வந்ததும் இருவரும் தோட்டத்து மூலைக்குச் சென்றனர். போனதும் அந்த அதிசய முட்டை இருந்த சோப்புப் பெட்டியை திறந்தனர். என்ன ஆச்சரியம். அது உருமாறி போயிருந்தது. மஞ்சள்-, சிவப்பு-, கறுப்பு கோடுகளுக்கு பதில்... பச்சை, சிவப்பு புள்ளிகள் காணப்பட்டன.
''பாபு... இது மந்திர முட்டை போலிருக்கு,'' என்றாள் பவித்ரா.
''போடி அசடு. எனக்கு மந்திரத்திலெல்லாம் நம்பிக்கையே கிடையாது. சரி, சரி முட்டையில் ஓட்டை செய்து உள்ளே இருப்பதைக் கொட்டி விடு. இதை ஒரு அழகான பெட்டியில் வைப்போம்,'' என்று சொல்லியவாறே அந்த முட்டையை மறந்து போய் கையிலெடுத்தான் அவ்வளவுதான்.
''ஐயோ, அப்பாடி,'' என பொத்தென்று அதைக் கீழே போட்டுவிட்டு குதிகுதி என்று குதித்தான்.
விரலை வாயில் வைத்தான். முட்டை அவன் விரலை கொப்பளிக்க வைத்து விட்டது.
''போடா முட்டாள், முட்டையை உடைத்து விட்டாயே,'' என்று பவித்ரா அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.
''நானென்ன செய்யறது. அது என் விரலை சுட்டு விட்டதே,'' என்று அவளை திருப்பி குட்ட இருவருக்கும் சண்டை உண்டாகி விட்டது. ஆனால், அதிக நேரம் நடக்கவில்லை. ஏன் தெரியுமா? ஒரு அதிசயம் நடந்தது. உடைந்த முட்டையிலிருந்து மஞ்சள் ஜலம் வரவில்லை. அதற்குப் பதிலாக ஒரு சின்னப் பறவை, பளபளப்பான வர்ணத்தோடு கூடிய பறவை, தனது விகாரமான அலகைத் திறந்து கூட்ஸ் வண்டி எஞ்சினைப்போல் சத்தம் போட்டுக் கொண்டு வெளிவந்தது.
பவித்ராவும், பாபுவும் வியப்பினால் ஆடாமல் அசையாமல் அந்த அதிசய பறவையைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பார்க்கப் பார்க்க அது வளர்ந்து, வளர்ந்து ஒரு நெருப்புக்கோழி போல அவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டது. மஞ்சள் தலை, நீண்டு வளைந்த அலகு, கருநீலக் கண்கள், பட்டை தீட்டிய பச்சையும், ஆரஞ்சும் கலந்த இறக்கைகள், கறுப்பான ஒற்றை இறகு வால்!
''ஐயோ! அதைக் கண்டாலே எனக்குப் பிடிக்கல்லே! பயமாயிருக்கே. வாடா பாபு நாம உள்ளே போவோம்! அது ஓடி போயிடட்டும்!'' என்று உள்ளே ஓடினாள் பவித்ரா.
பாபுவும் அவளைத் தொடர்ந்தான். அந்த வினோதப் பறவையும் தன்னுடைய விசித்திரமான நீண்ட இறகுகளை விரித்தபடி அவர்கள் பின்னால் வந்து பாபுவுடன் தோளில் உட்கார்ந்து, அவன் காதை வெடுக்கென்று கொத்திற்று. அது மட்டுமல்ல, கூட்ஸ் வண்டியை போல பலமாக கத்தி ஆரவாரம் செய்தது.
பாபுவும், பவித்ராவும் பயத்தினால் துள்ளிக் குதித்தனர்.
உள்ளே இருந்து அவர்கள் அம்மா, ''ஏ கழுதைகளா, என்ன சீட்டி? பேசாதிருக்க மாட்டீங்க,'' என்று அதட்டினாள்.
இவர்களுக்கோ உண்மையை சொல்ல பயம். பாபு அந்த பறவையை விரட்ட கையை ஓங்கினான். அது சட்டென்று பவித்ராவின் தோளில் உட்கார்ந்து அவள் மூக்கை கவ்வி விட்டு மறுபடி எஞ்சின்போல சத்தமிட்டபடி சீட்டி அடிக்க ஆரம்பித்தது.
''டேய் பாபு... பவித்ரா... அம்மா சொன்னது காதில் விழவில்லையா? சத்தம் போட்டால் உதை பிச்சு விடுவேன்,'' என்று அப்பா உள்ளே இருந்து வந்தார்.
உடனே, அந்த விசித்திரப் பறவை சின்னதாக மாறி பாபுவின் பைக்குள் ஒளிந்துகொண்டது.
பாபுக்கும், பவித்ராவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என்ன செய்வது?
'ராத்திரி எல்லாரும் தூங்கின பிறகு அந்த பறவையை தோட்டத்து மூலையில் உள்ள பானைக்குள் போட்டு மூடி விட்டு வந்து
விடுகிறேன்' என்று பாபு முடிவு செய்தான்.
அதேபோல பாதி ராத்திரி- எல்லாரும் தூங்கிய பிறகு ஓசைப்படாமல் தோட்டத்து மூலைக்கு போய் அந்த பானைக்குள் பறவையை போட்டு மேலே ஒரு பெரிய கல்லை வைத்து மூடிவிட்டு வந்து படுத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் இருவரும் தூங்கிவிட்டனர். ஆனால், கொஞ்ச நேரம் சென்ற பிறகு ஜன்னல் கதவை யாரோ தட்டுவது போலிருந்தது. விழித்துக்கொண்டனர். பறவை பேசுவது போல இருந்தது.
''என்னை உள்ளே விடு. இல்லாவிடில் சீட்டி அடிப்பேன்!''
''ஐயையோ! அந்த பறவை போலல்லவா இருக்கு... பானையிலிருந்து எப்படி வெளியில் வந்தது? பவித்ரா, இப்ப என்னடி செய்வது?'' என்று நடுங்கினான் பாபு.
''இதோ சீட்டி அடிக்க போகிறேன். இதோ... உங்க அப்பா வந்து இருவரையும் வெளுக்கப் போறார்!''
பவித்ரா துள்ளிக்குதித்து எழுந்து சென்று ஜன்னலை திறந்து விட்டாள்.
'அப்பாடா' என்று ஹாய்யா அவர்கள் படுக்கையில் போய் ஜம்மென்று படுத்துக்கொண்டது அந்த விசித்திரப் பறவை.
''நீ ஒரு மந்திரப் பறவையா?'' என்று குழறினான் பாபு.
தொடரும்...

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X