நாளை வா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2016
00:00

அரசர் அகிலேந்திராவுக்கு, செல்வராஜ் என்ற பெயரும் உண்டு. தர்ம வழி நின்று எந்தக் காரியத்தையும் அவர் செய்வார்.
ஒருநாள்
ஒரு ஏழை, அரசரை அணுகி, ''செல்வராஜா! எனக்குத் தாங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்,'' என்று வேண்டினான்.
''நாளைக்கு நீ வா, நீ விரும்புகிற உதவியை அவசியம் நான் செய்கிறேன்,'' என்று பதில் சொன்னார் அரசர்.
இந்த உரையாடலைச் செவிமடுத்த பீமசேனன் ஓடிச் சென்று, வாயிலில் கட்டியிருந்த பெரிய மணியை வேகமாக அடித்தான்.
பெரும் நிகழ்ச்சி ஏதாவது நடந்தாலோ அல்லது பெரும் வெற்றி கிட்டியிருந்தாலோ மட்டும் தான் அந்த மணியை அடிப்பது வழக்கம்.
மணி ஓசை கேட்டதும் ஊர் மக்கள் அதிசயமுற்று அரண்மனை அருகே திரண்டு விட்டனர். காரணம் புலப்படாது, வியப்புற்று அரண்மனை அருகே நின்றனர்.
அரசரின் காதிலும் மணியோசை விழுந்தது. விவரத்தை அறிய ஆவல் கொண்டு, அவர் விசாரித்தார்.
''பீமசேனன்தான் மணியை அடித்தார்!'' என்று சிப்பந்திகள் தெரிவித்தனர்.
உடனே பீமசேனனை அழைத்து வரச் செய்து காரணத்தைக் கேட்டார் அரசர்.
''இன்று நமக்கு ஒரு பெரிய வெற்றி கிட்டி இருக்கிறது. யாராலும் வெல்ல முடியாத எமனை இன்று அரசர் வெற்றி கொண்டுள்ளார். இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் வரை எமன் தன்னை அணுக முடியாது என்று அரசர் உறுதியாக நம்புகிறார். அதனால்தான் உதவியை நாடி வந்த அப்பாவி ஏழை ஒருவனை நாளைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார். இது நமக்குப் பெரிய வெற்றி அல்லவா?'' என்று பதில் சொன்னான் பீமசேனன்.
இந்த பதிலைக் கேட்டதும் அரசர் உணர்வு பெற்றார். தான் செய்த தவறை உணர்ந்தார். தம்மிடம் உதவி கேட்ட ஏழையை உடனே அழைத்து வரச் செய்து, வேண்டிய உதவிகளை அவனுக்கு செய்தார்.
யார் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருப்போம் என்று யாருக்குத் தெரியும்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X