கோயம்புத்தூரில் 'ஸ்ரீலங்கன் பறக்கும் பாம்பு' என்ற அரிய வகைப் பாம்பு காணப்பட்டது. 'பாம்பு பறக்குமா' என்று ஆச்சரியப்படாதீர்கள். இந்தப் பாம்புகள் எளிதாக மரம் விட்டு மரம் தாவும் திறன் பெற்றவை. மரப் பட்டைகளில் உள்ள சொரசொரப்பைப் பயன்படுத்தி வேகமாக ஏறும். இந்த அரிய பாம்புக்கு விஷத்தன்மை இல்லை. கோயம்புத்தூரில் பிடிபட்ட பாம்பு இரண்டரை அடி நீளமுடையது. இந்தப் பாம்பு, கோவை வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.