இந்த ஆண்டு முதல், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் புதிய வண்ணத்தில் அளிக்கப்பட உள்ளன. கனமான, வழவழப்பான பச்சை வண்ணத் தாளில், 'வாட்டர் மார்க்' (Water mark), 2டி பார்கோடு (2D Barcode) போன்ற ரகசியக் குறியீடுகளும் இதில் அச்சிடப்பட்டு இருக்கும். தமிழக அரசு முத்திரையும், நடப்பு ஆண்டைக் குறிக்கும் ரகசிய எண்ணும் இந்த மதிப்பெண் சான்றிதழ்களில் இடம் பெறுவதால் போலி சான்றிதழ்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.