காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்காக, சோதனை முறையில், ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் அடிப்படையில் வாகனப் போக்குவரத்து முறையை டில்லி அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த ஜனவரி 1 முதல் 15 நாட்களுக்கு இந்தத் திட்டம் பயன்பாட்டில் இருந்தது. இப்போது மீண்டும், ஏப்ரல் 15 முதல் 30 வரை அதே முறையைக் கடைப்பிடிக்க டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.