கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான், அதிக புவி வெப்ப அளவு பதிவாகி உள்ளதாம்! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின், விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனம் 'கட்டார்டு இன்ஸ்டியூட்' (Goddard Institute for Space Studies) வெளியிட்டுள்ள அறிக்கை இதைத் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும், அது பிப்ரவரி மாதத்தில் 1.35 டிகிரி செல்சியசாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.
பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும், எல் நினோ காரணமாக இந்த பருவநிலை மாறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.