பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கு, யானை. நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதும் நீண்ட ஆயுள் கொண்டதும் இதுதான். யானைகள் 70 ஆண்டுகள்வரை உயிர் வாழும். குடும்பமாக வாழும்.
வகைப்பாடு
உயிருலகு (கிங்டம் - Kingdom) விலங்குலகு - அனிமலியா ( Animalia)
பிரிவு (டிவிஷன் - Division) முதுகெலும்பி - கார்டேட்டா (Chordata)
வகுப்பு (கிளாஸ் - Class) பாலூட்டி - மமேலியா (Mammalia)
வரிசை (ஆர்டர் - Order) - புரோபோசிடியே (Proboscidea)
காதுகள்
உடல் வெப்ப நிலையை சீராக வைப்பதற்காக, ரத்த நாளங்கள் அதிகமுள்ள காதுகளை எந்த நேரமும் ஆட்டிக்கொண்டே இருக்கின்றன. இதனால், இதன் உடல் வெப்பம் 1 டிகிரி செல்ஷியஸ் ஆகக் குறையும்.
உணவுகள்
நாள் ஒன்றுக்கு 300 கிலோ வரை உணவுகளை உண்கின்றன
தந்தங்கள்
இரண்டு தந்தங்கள். இதை 'யானைக் கோடு' என்றும் சொல்லலாம். ஆசிய யானைகளின் தந்தங்கள் 3 மீட்டர் வரை வளரக்கூடியவை.
எடை 39 கிலோ வரை இருக்கும்.
இனப்பெருக்கம்
கர்ப்ப காலம் 22 மாதங்கள். ஒரே ஒரு கன்றை ஈனும். எப்போதாவது இரட்டைகள் பிறக்கும். பிறந்த யானைக் கன்று 90 - 115 கிலோ எடைவரை இருக்கும்.
மூளை
தரையில் வாழும் விலங்குகளிலேயே யானைகளின் மூளைதான் மிகவும் பெரியது. சராசரியாக 5 கிலோ எடை இருக்கும். இவற்றுக்கு நினைவாற்றல் அதிகம்.
கால்கள்
தூண்கள் போன்ற கால்களால் வேகமாக ஓட முடியுமே தவிர, தாவ முடியாது. பாதங்கள் மென்மையானவை. தரையில் பதியும்போது விரியும். உயர்த்தும்போது சுருங்கும்.
சராசரி எடை 4,000 - 6,000 கிலோ
உயரம் 11 - 13 அடி
நீளம் 12 - 24 அடி
வாழிடங்கள்
காடுகள், புல்வெளிகள், வனப்பகுதிகள்
தும்பிக்கை
இது 60,000 தசை நார்களால் ஆனது. 10லிட்டர் தண்ணீரை ஒரே மூச்சில் உறிஞ்சிவிடும்.
யானை எழுப்பும் சத்தத்தை 'பிளிறுதல்' என்பார்கள்.
யானைகளில் மூன்று சிற்றினங்கள் இருக்கின்றன.
1. ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்
2. ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்
3. ஆசிய யானைகள்.
இவற்றில் மிகப் பெரியவை, ஆப்பிரிக்க யானைகள். சுமார் 8000 கிலோ எடைவரை இருக்கும். இது, 96 மனிதர்களின் மொத்த எடைக்குச் சமம்.
50,000 ஆசிய யானைகளின் மொத்த எண்ணிக்கை
இந்தியா 28,500
தென்மாநிலங்கள் 15,000
தமிழகம் 4,000
யானை பெயர்கள்
ஆண் 'களிறு'
பெண் 'பிடி'
யானைக் குட்டி 'கன்று'
இலக்கியங்களில் வேறு பெயர்கள்: வேழம், பிளிறு, களபம், மாதங்கம், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, ஆனை, கரி, கைம்மா