7 வகுபடுமா?
ஓர் இயல் எண் 7ஆல் வகுபடுமா என்பதைக் கண்டுபிடிக்க.. கொடுக்கப்பட்ட இயல் எண்ணின் இறுதி இலக்கத்தை நீக்கிவிட வேண்டும்.நீக்கிய அந்த எண்ணை இரண்டால் பெருக்கவும். கிடைக்கும் சிறிய எண்ணைப் பெரிய எண்ணிலிருந்து கழிக்க வேண்டும். இவ்வாறு ஓர் இலக்கம் அல்லது இரண்டு இலக்கங்களை வரை கழித்து கொண்டே வர வேண்டும். இறுதியாகக் கிடைக்கும் விடை 0 அல்லது 7ஆக அமைந்தால் கொடுக்கப்பட்ட எண் ஏழால் வகுபடும்.
உதாரணத்துக்கு 1, 19, 574 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். இதன் இறுதி எண் 4. அதை நீக்கினால் 11, 957 கிடைக்கும். இறுதி எண்ணான் நான்கை இரண்டால் பெருக்கினால் 8. 11957ல் இருந்து எட்டைக் கழித்தால் 11949. ஒன்பதை இரண்டால் பெருக்கி 1194ல் இருந்து கழிக்க வேண்டும். இறுதியாக 0 வருகிறது.
11957 - (2 x 4) = 11949
1194 - (2 x 9) = 1176
117 - (2 x 6) = 105
10 - (2 x 5) = 0
ஆக 1,19,574 என்ற எண் ஏழால் வகுபடும்.
11ல் வகுபடும் முறை
கொடுக்கப்பட்ட எண்ணில், ஒற்றைப்படை இடங்களில் இருக்கும் எண்களைக் கூட்ட வேண்டும். கிடைக்கும் தொகையில் இரட்டைப்படை இடங்களில் இருக்கும் எண்களின் கூட்டுத் தொகையைக் கழிக்க வேண்டும். 0 அல்லது 11 கிடைத்தால் கொடுக்கப்பட்ட எண் பதினொன்றால் வகுபடும்.
13ல் வகுபடும் முறை
கொடுக்கப்பட்ட இயல் எண்ணின் இறுதி இலக்கத்தை நீக்கிவிட வேண்டும். அதனை நான்கால் பெருக்கி, பெரிய எண்ணுடன் கூட்ட வேண்டும். இவ்வாறு ஓர் இலக்கம் அல்லது இரண்டு இலக்கம் எண் வரும்வரை கூட்டிக் கொண்டே போக வேண்டும். இறுதியாக கிடைக்கும் விடை பதிமூன்றின் பெருக்கல் மடங்கான 13, 26, 39 என அமைந்தால், கொடுக்கப்பட்ட எண் பதிமூன்றால் வகுபடும்.
பேராசிரியர். 'பை' சிவராமன், தூ.கோ. வைணவ கல்லூரி, சென்னை