நாட்டை இழந்த ஒரு ராஜா... தன் நாட்டை மீட்பதற்காக, பக்கத்தில் இருக்கும் ஒரு காட்டுக்குள் இருந்து திட்டம் தீட்டுகிறார். சிறிது சிறிதாக ஆள் பலத்தையும் சேர்க்கிறார். பல முறை முயன்றும், நாட்டை மீட்க முடியாமல் தவிக்கிறார். ஒரு நாள், காட்டில் அலைந்து கொண்டு இருந்தபோது, ஒரு பாட்டி பரிதாபப்பட்டு ராஜாவை சாப்பிட அழைக்கிறார். சூடான களியை வட்டையில் பரிமாறினார். மன்னன் களியின் நடுவில் கையை வைத்து எடுத்தார். "ஆ... சூடு..." என்று அலறினார். “அட என்னப்பா நீ... நம்ப முட்டாள் மன்னன் மாதிரி, நடுவுல போய்க் கையை வைக்கிறே... ஓரத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சாப்புடு..." என்று சொன்னார்.
மன்னனுக்கு உறைத்தது. சுற்றி இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றாமல் மத்தியில் இருக்கும் கோட்டையை முதலில் கைப்பற்ற நினைத்தது தவறு என்பதை உணர்ந்தார் மன்னர்.