பனிப் பிராணிகள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2016
00:00

பனிப் பிரதேசம் ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு விதத்தில் அழகாகக் காட்சி அளிக்கும். இடைவிடாமல் பனி பொழியும்; கடற்கரை ஓரங்களில் திமிங்கிலங்கள் அணிவகுத்து நிற்கும்; பேபி பென்குவின்கள் சிறகுகளை அடித்துக்கொண்டு ஓடும். இப்படி அங்கே நிலவும் சூழல்களையும் அங்கு வாழும் சில விலங்குகளையும் பறவைகளையும் பற்றிப் பார்க்கலாம்.

துருவ நரி: ஆர்க்டிக் நரி (Arctic Fox) என்பது ஒரு சிறு நரி இனம். வெள்ளை நரி, பனி நரி, துருவ நரி போன்றவை இதன் வேறு பெயர்கள். அடர்த்தியான தோல், குறுகிய காதுகள், நீண்ட முடி ஆகியவை குளிரில் இருந்து பாதுகாக்கின்றன. பனிக் காலத்தில் இதன் நிறம் வெள்ளையாகவும் வெயில் காலத்தில் பழுப்பாகவும் காணப்படும். முயல், ஆந்தை, முட்டைகள், மீன் போன்றவற்றை உண்ணும்.

பறக்க முடியாத பறவை: பறவை இனமாக இருந்தாலும் பென்குவின் (Penguin) பறக்காது! இவற்றில் மிகப் பெரியது சக்ரவர்த்தி பென்குவின் (Emperor Penguin). இது சுமார் 1.1 மீட்டர் உயரம், 35 கிலோ எடை என்கிற அளவில் இருக்கும். மிகச் சிறியது நீல பென்குவின் (தேவதை பென்குவின்). உயரம்: 35 செ.மீ. முதல் 40 செ.மீ. எடை: 1 கிலோ. மீன்கள், இறால்கள் போன்றவற்றை உண்ணும். இது நீந்துவதைப் பார்த்தால் பறப்பது போலவே இருக்கும். வேகமும் லேசுப்பட்டதில்லை... மணிக்கு சுமார் 25 கி.மீ.!

பஃபின் (Puffin): இந்தப் பறவைகளால் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பறக்க முடியும். மிகவும் அழகாக, வாத்து மற்றும் பென்குவின்களின் கலவை போல இருக்கும். இறகுகள் கருப்பு, வெள்ளை நிறத்திலும் பாதங்கள் பளபளக்கும் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கின்றன. பஃபினுக்கு 'ஃபிராடர்குலா ஆர்க்டிகா' (Fratercula arctica) என்பது அறிவியல் பெயர்.

உலகம் சுற்றும் பறவை: ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) ஒரு கடல் பறவை. உலகிலேயே அதிக தூரம் வலசை போகும் பறவை இது. வட துருவ ஆர்க்டிக் பகுதியில் இருந்து தென் துருவ அன்டார்க்டிக் பகுதிக்குச் செல்ல 35 ஆயிரம் கி.மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகைச் சுற்றி வருவதற்குச் சமமானது இது.

துருவ ஓநாய் (Arctic Wolf): குடும்பமாக வாழும். ஒரு பிரசவத்தில் ஆறு, ஏழு குட்டிகள் ஈனும். தந்தை ஓநாய்தான் குடும்பத்துக்கு இரை தேடும். குளிர் அதிகமான காலங்களில் வளை தோண்டி அதற்குள் உறங்கும். பிற இன ஓநாய்களும் கரடிகளும் இவற்றின் எதிரிகள்.

நீர் நாய் (சீல் - Seal): அட்லான்டிக், பசிபிக் போன்ற பெருங்கடல்களின் கரைப்பகுதிகளில் காணப்படுகின்றன. பழுப்பு, சாம்பல் நிறங்களில் அடர்ந்த ரோமத்தோடு இருக்கும். பகலில் தூங்கி இரவில் இரை தேடும். ரோமங்களுக்காகவும் உணவிற்காகவும் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன.

கருப்பு மூக்கன்: நீரிலும் நிலத்திலும் வேட்டையாடக் கூடியது, பனிக்கரடி (Polar Bear). ஆண் கரடிகளின் எடை 400 முதல் 600 கிலோ. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோ எடை இருக்கும். இவற்றின் உடல் பனி போல வெள்ளையாக இருக்கும். மூக்கு மட்டும் கருப்பாக இருக்கும். அதைப் பார்த்து இரை உஷார் ஆகிவிடாமல் இருக்க வேட்டையாடும் போது கையால் மூக்கை மூடிக் கொள்ளும்.

பனி ஆந்தை (Snowy Owl): ஆர்க்டிக் ஆந்தை, வெண் பேராந்தை எனவும் அழைக்கப்படுகிறது. மிகுந்த குளிரைச் சமாளிக்க இதன் கால்களிலும் இறகுகள் இருக்கும்! கனடாவில் உள்ள கியூபெக் மாநிலத்தின் மாநிலப் பறவையும் இதுதான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X