ஏப்ரல் 2 சர்வதேச சிறுவர் புத்தக தினம் (International Children's Book Day)
பல புதிய விஷயங்களை, புத்தக வாசிப்பின் மூலம் தெரிந்து கொள்கிறோம். கதைப் புத்தகங்களைப் படிக்கிறபோது நமக்குள் ஒரு புதிய கற்பனை உலகம் உருவாகிறது. புத்தக வாசிப்பு நம் வாழ்க்கையைச் செழுமையாக்கும்.
ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான ஏப்ரல் 24 சர்வதேச புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அதுபோலவே, சிறுவர் இலக்கிய எழுத்தாளர் 'எச்.சி.ஆன்டர்சன்' (H.C. Andersen) என்பவரின் பிறந்த தினம் சர்வதேச சிறுவர் புத்தக தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இவர் டென்மார்க் (Denmark) நாட்டைச் சேர்ந்தவர். இவர் எழுதிய 'தேவதைக் கதைகள்' (ஃபேரி டேல் - Fairy Tale) மிகவும் பிரபலமானவை. கதைகள், பயணக் கட்டுரைகள் என 125க்கும் மேற்பட்ட சிறுவர் புத்தகங்களை ஆன்டர்சன் எழுதியிருக்கிறார்.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கவும், சிறுவர் நூல்கள் மீதான கவனத்தை ஈர்க்கவும் சர்வதேச சிறுவர் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
தமிழில் அழ.வள்ளியப்பா, பெரியசாமித் தூரன், வாண்டு மாமா போன்றோர் பல சிறுவர் இலக்கியப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். தற்காலத்தில் யூமா வாசுகியின் மொழிபெயர்ப்புக் கதைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
சிறுவர் நூல்களுக்கான பயனுள்ள இணைய தளங்கள்:
Library of Congress: https://www.loc.gov/
Association for Library Service to Children www.ala.org/alsc/
Children's Books Online http://www.childrensbooksonline.org
H.C.Anderson Story Telling Centre http://www.hcastorycenter.org/