1842 மார்ச் -30 கிராஃபோர்டு லாங் (Crawford Long) எனும் மருத்துவர், முதன் முதலாக, நைட்ரஸ் ஆக்சைடுக்குப் பதில் ஈதர் (Ether) எனப்படும் கரிம சேர்மங்களை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தார்.
1858 மார்ச் -30 பிலடெல்ஃபியாவைச் சேர்ந்த ஹைமன் லிப்மன் (Hymen Lipman), அழிப்பானுடன் கூடிய பென்சிலை அறிமுகப்படுத்தி அதற்கான காப்புரிமை பெற்றார்.
1889 மார்ச் -31 ஈஃபிள் டவர் திறப்பு விழா. இது, பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் அடையாளம். இதை வடிவமைத்த 'கஸ்டேவ் ஈஃபிள்' (Gustave Eiffel) பெயரினால் ஈஃபிள் என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்வை இடுகிறார்கள்.
1957 ஏப்ரல் -1 இந்தியாவில் முதன் முறையாக நயா பைசா (புதிய நாணயங்கள்) அறிமுகப்படுத்தப்பட்டது.
1872 ஏப்ரல் -2 ஒற்றைக் கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் சாமுவெல் ஃபின்லே பிரீஸ் மோர்ஸ் (Samuel Finlay Breese Morse) இறந்தார்.
1880 ஏப்ரல் -3 மஹாராஷ்டிரப் பேரரசை ஆண்ட, சத்ரபதி சிவாஜி மறைந்த தினம்.