நெகிழிப் பைகளின் பயன்பாடு
நிமிடக் கணக்கில் முடிந்துவிடும்
ஆனால் அவற்றின் பாதிப்போ
ஆண்டு பற்பல தொடர்ந்திடுமே!
நெகிழிக் குப்பை மட்காமல்
நிலத்தை மாசு படுத்திடுமாம்
நிலத்தடி நீர்வளம் குறைவதற்கு
நெகிழியும் ஒரு காரணியாம்!
நெகிழிக் குப்பை எரிவதனால்
நேரும் கரும்புகைப் படலத்தால்
நல்ல காற்றும் மாசுபடும்
நமக்கும் சுவாசம் பாதிக்கும்!
நெகிழிப் பைகளில் உணவு வைத்து
உண்டால் குடலும் புண்ணாகும்
எல்லா வழியிலும் நெகிழிகளால்
ஏகப்பட்ட தொல்லைகளே!
- ச. தனராஜன், சக்கரக்கோட்டை.