இந்தியாவில் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொகாலியில் நடந்த பிரிவு-2' லீக் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 180/5 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 158/5 ரன்கள் மட்டும் எடுத்து, 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஏற்கனவே, இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் (6 புள்ளி) முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.