ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்த ஆண்டின் முதல் கிராண்ட் பிரிக்ஸ் 'பார்முலா-1' தொடர் நடந்தது. பந்தய தூரத்தை ஒரு மணி நேரம், 48 நிமிடம், 15.565 வினாடியில் அடைந்த 'மெர்சிடஸ்' அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் முதலிடம் பிடித்து, கோப்பை வென்றார். அடுத்த இரு இடங்களை 'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் ஹாமில்டன், 'பெராரி' அணியின் ஜெர்மனி வீரர் வெட்டல் ஆகியோர் பிடித்தனர்.