அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 15வது இடத்திலுள்ள பெலாரசின் அசரன்கா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 'நம்பர்-1' வீராங்கனையான அமெரிக்காவின் செரினாவை வீழ்த்தினார். இதன் மூலம், பட்டம் வென்று அசத்தினார்.
* இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பைனலில் 'நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச், கனடாவின் மிலோஸ் ராவோனிச்சை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார்.