பெங்களூருவில் நடந்த 'டுவென்டி-20' லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 146/7 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய வங்கதேச அணி வெற்றிக்கு, பாண்ட்யா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இதில் துடிப்புடன் செயல்பட்ட கேப்டன் தோனி, முஸ்தபிஜுரை 'ரன்-அவுட்' செய்ய, வங்கதேச அணி 20 ஓவரில் 145/9 ரன்கள் எடுத்து 1 ரன்னில் தோல்வியடைந்தது.