மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
00:00

சென்ற ஏப்ரல் 13 அன்று, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய கேன்வாஸ் 6 மற்றும் கேன்வாஸ் 6 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிட்டது. கேன்வாஸ் 6 போன் முழுவதுமாக உலோகப் பூச்சில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்பக்கமாக, விரல் ரேகை சென்சார் தரப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும், 1080p திறன் கொண்ட 5.5. அங்குல அளவிலான திரை அமைந்துள்ளது. கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1920 x 1080 ஆக உள்ளது. இரண்டு போன்களிலும் Octa-Core Mediatek Helio X10 ப்ராசசர் தரப்பட்டுள்ளது.
கேன்வாஸ் 6 போனின் இதர சிறப்பம்சங்கள் பின்வருமாறு : இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். இரண்டு சிம்களை (மைக்ரோ மற்றும் நானோ) இதில் இயக்கலாம். ஆண்ட்ராய்ட் லாலி பாப் 5.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் இயங்குகிறது. பின்புறமாக LED ப்ளாஷ் கொண்ட, 13 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக, 8 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.1., மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டதாக உள்ளது.
கேன்வாஸ் 6 ப்ரோ E484 போனின் சிறப்பம்சங்கள்: மேலே குறிப்பிட்ட பொதுவான அம்சங்களுடன், இதன் ராம் மெமரி LPDDR3 வகையில் அமைந்துள்ளது. இதன் அளவு 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி.இதனை மைக்ரோ எஸ்.டி.கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். இதிலும் இரண்டு சிம்களை (மைக்ரோ மற்றும் நானோ) இயக்கலாம். பின்புறமாக LED ப்ளாஷ் கொண்ட, 13 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக, 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.1., மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டதாக உள்ளது.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 6, தங்க நிறத்தில் கிடைக்கிறது. கேன்வாஸ் 6 ப்ரோ, கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களின் அதிக பட்ச விலை ரூ. 13,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணைய தளத்தில் முன்பதிவு நடக்கிறது.
இந்த இரு போன்களை அறிமுகப்படுத்திய விழாவில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், Micromax Bolt Supreme, Bolt Supreme 2, Bolt Q381, Canvas Spark 2+, Canvas Evok, Canvas Mega 2, Canvas Unite 4 மற்றும் பல போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இவற்றுடன், 4ஜி டேப்ளட் பி.சி.க்களும், எல்.இ.டி. டிவிகளும் அறிமுகமாயின. இவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில், அடுத்த ஆண்டு ரூ. 300 கோடி கூடுதல் முதலீடு செய்திட மைக்ரோமேக்ஸ் முடிவெடுத்துள்ளது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X