ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2016
00:00

ஹலோ புஜ்ஜீஸ்... இங்கிலீஷ் கத்துக்க ரெடியா? போன வாரம் என்ன பார்த்தோம். Prepositions என்றால் என்ன என்று பார்த்தோம் இல்லையா?
இப்படியும் சொல்லலாம் Pre - முன்னாள் என்பது பொருள்
Positions - இடம் என்பது பொருள்
Prepositions - முன்னால் வரும் இடம் என்று பொருள். எதற்கு முன்னால்? என்று கேட்கிறீர்களா? School என்ற Nounனுக்கு முன்னால் என்று பொருள்.
ஆக Prepositions - Nounனுக்கு முன்னால் வரும். அதாவது Prepositionsயை அடுத்து Noun வரவேண்டும் என்பதை மட்டும் இப்போது கவனத்தில் கொள்ளுங்கள்.
சரி... இப்போ இந்த Preposition களை எப்படி யூஸ் பண்றதுன்னு சொல்லப்போறேன்.
on, in, of, above, without, with, from, to between, into - இவையெல்லாம் Prepositions

On
பொதுவாக இதன் அர்த்தம், 'மேலே' என்பது. The photo is on the table போட்டோ டேபிளின் மேலே இருக்கிறது. இப்படிப்பட்ட இடங்களில் On உபயோகிக்க வேண்டும். ஆனால், பல்வேறு இடங்களில் On என்ற Preposition வேறுவேறு பொருள்களில் வரும். அவற்றையும் இப்போது நாம் பார்க்கலாம்.
தேதிகளைக் குறிப்பிடவும் On பயன்படுகிறது.
On 25th - 25ந் தேதியன்று,
On 5th - 5ந் தேதியன்று,
கிழமைகளைக்குறிக்கும்போதும் On பயன்படுகிறது.
On monday - திங்களன்று,
On wednesday - புதன்கிழமையன்று,
School on monday? திங்கட்கிழமை பள்ளி உண்டா? என்று கேட்கலாம்.

In
வருடம், காலங்களைக் குறிக்க In பயன்படுகிறது. உதாரணமாக,
In 2005 - 2005ல்
In 1948 - 1948ல் என்று கூறலாம்.
விடியற்காலையில் என்பதை, Early in the morning - அதிகாலை வேளையில்,
In the evening - மாலையில்,
In the Afternoon - மதியவேளையில்
இடங்கள், ஊர்களைப் பற்றி குறிப்பிட In பயன்படுகிறது.
(e.g) He is in kerela - அவன் கேரளாவில் இருக்கிறான்.
She is in chennai - அவள் சென்னையில் இருக்கிறாள்.
Mummy is in the room. - அம்மா அறைக்குள் இருக்கிறாள்.
மாதங்களை குறிக்கவும், In பயன்படுகிறது.
In september - செப்டம்பர் மாதத்தில்.
In November - நவம்பர் மாதத்தில்.
அது மட்டுமல்ல நேரத்தை குறிக்கப் பயன்படுத்தப்படும் Prepositionகள்.
at 7 o'clock - 7 மணிக்கு,
after 7 o'clock - 7 மணிக்கு பின்னர்,
before 7 o'clock - 7 மணிக்கு முன்பாக,
around 7 o'clock -கிட்டதட்ட 7 மணிக்கு.

For இதன் பொதுவான அர்த்தம், 'க்கு'
For u? - உனக்கு?
For what? - எதுக்கு?
For me - எனக்கு
I care for his health - நான் அவன் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறேன்.

With
We should be familiar with the english -நாம் ஆங்கில மொழியை அறிந்திருக்க வேண்டும்.
with my wife - என் மனைவியுடன்
I am satisfied with your progress - உன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு திருப்தியடைகிறேன்.

OF
He is fond of mangoes - அவனுக்கு மாம்பழங்கள் மிகவும் பிடிக்கும்.
Are you sure of your success? - உங்கள் வெற்றி பற்றி உறுதியாக சொல்ல முடியுமா?
She reminds me of my sister? - அவளை பார்க்கும்போது என் சகோதரியின் நினைவு வருகிறது...
இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் படித்துப் பழகுங்க...

பேசிப் பழக குட்டி வாக்கியங்கள்!
Just coming - இப்போழுதே வருகிறேன்.
Anything else? - இன்னும் ஏதேனும்?
Why not? - ஏன் கூடாது?
Not a bit - கொஞ்சம் கூட வேண்டாம்.
No, never - இல்லை ஒருபோதும் இல்லை.
Oh dear - கண்ணே!
How dare he! - என்ன தைரியம் அவனுக்கு!
அதுவரை, பை... பை!

- வர்ஷிதா மிஸ்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X