கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம் கொண்ட லேப்டாப் பயன்படுத்தி வருகிறேன். இது இலவசமாக டவுண்லோட் செய்ததால், முன்பு கிடைத்தது போல சிஸ்டம் டிஸ்க் என ஒன்றும் இல்லை. ஏதேனும் சிஸ்டத்தில் பிரச்னை என்றால், டிவிடி ட்ரைவ் அல்லது யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து பூட் ஆகும் வகையில் டிஸ்க், விண் 10 சிஸ்டத்திற்கு எங்கு கிடைக்கும்?
எஸ். நந்தகுமார், சென்னை.
பதில்:
எங்கும் தேடி அலையவேண்டாம். அது உங்களிடமே உள்ளது. நீங்களே, உங்கள் விண்டோஸ் 10 சிஸ்டம் உதவியுடன் ஒரு 'ரெகவரி ட்ரைவ்' தயார் செய்து பயன்படுத்தலாம். ஏதேனும் ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றில் இந்த ரெகவரி ட்ரைவ் உருவாக்கலாம். கீழே கொடுத்துள்ள குறிப்புகளை நன்றாகப் படித்துத் தயார் செய்திடவும்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை, நீங்கள் கேட்டுள்ளது போல, ஹார்ட் டிஸ்க் அல்லது சிஸ்டம் உள்ள டிஸ்க் இடம் கெட்டுப் போய், கம்ப்யூட்டர் இயங்காமல் நின்றுவிடும். இதனைச் சரி செய்திட வேண்டும் என்றால், இன்னொரு சிஸ்டம் டிஸ்க் மூலம், அதனை இயக்கி, புதியதாக சிஸ்டம் பைல்களை காப்பி செய்திட வேண்டும். அல்லது கெட்டுப் போன பைல்களுக்குப் பதிலாக, நல்ல முறையில் உள்ள அதே பைல்களைப் பதிந்து இயக்க வேண்டும். இதற்காகவே தான், விண்டோஸ் சிஸ்டத்தின் ரெகவரி டிஸ்க் ஒன்று எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும். பொதுவாக, முன்பு விண்டோஸ் சிஸ்டம் வாங்குகையில், அதனை ஒரு டிவிடியில் பதிந்து தருவார்கள். அதனை எப்போதும் ரெகவரி டிஸ்க் ஆகப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 10 இலவசமாகத் தரவிறக்கம் செய்யப்பட்டு, தானாகவே, அப்கிரேட் செய்யப்படுவதால், அது போன்ற டிஸ்க் நமக்குக் கிடைப்பதில்லை.
ஆனால், இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 10 சிஸ்டத்திலெயே, அதற்கான ரெகவரி ட்ரைவ் தயாரிக்கும் செயலியைத் தந்துள்ளது. இந்த ரெகவரி டிஸ்க்கினைத் தயார் செய்திட, குறைந்தது 512 எம்.பி. கொள்ளளவு கொண்ட, எதுவுமே பதியப்படாத யு.எஸ்.பி. ட்ரைவ் வேண்டும். விண்டோஸ் சிஸ்டம் பைல்களும் கொண்ட ஒன்றாகத் தயார் செய்வதென்றால், இன்னும் கூடுதலாக, குறைந்த பட்சம் 16 ஜி.பி. அளவு கொண்டதாக ஒரு யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றினைத் தயாராக வைத்துக் கொள்ளவும்.
விண்டோஸ் 10ல் உள்ள ரெகவரி டூல், இதனைப் பார்மட் செய்த பின்னரே, ரெகவரிக்குத் தேவையான பைல்களைப் பதிவு செய்திடுவதால், அதில் ஏற்கனவே பைல்கள் இருந்தால், அவை அழிக்கப்பட்டுவிடும். எனவே, முக்கியமான பைல்கள் இருந்தால், அவற்றினை பத்திரமாக எதிலாவது காப்பி செய்து வைத்திடவும்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் உள்ள கண்ட்ரோல் பேனலில், Recovery என்ற தலைப்பின் கீழ், Recovery Media Creator என்ற டூல் இருக்கும். இதனைக் காண இயலாவிட்டால், தேடல் கட்டத்தில் Create a recovery drive என டைப் செய்தால், டூலைப் பார்க்கலாம். உங்கள் ரெகவரி ட்ரைவில், சிஸ்டத்திற்கான பைல்களும் பதியப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (அதுதான் நல்லது) Back up system files to the recovery drive என்ற விருப்பத்தினைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். தானாக, ரெகவரி ட்ரைவ் தயாரிக்கப்படும். தேவையான பைல்கள் காப்பி செய்யப்படும். பின்னர், அந்த யு.எஸ்.பி. ட்ரைவ் மீது, “சிஸ்டம் பைல்” என்ற லேபிளை அமைத்து, அது மீண்டும் பயன்படுத்தாதபடி லாக் செய்து, பத்திரமாக வைக்கவும். தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

கேள்வி: என் ஜிமெயில் இன்பாக்ஸ் முழுவதும் ஆங்கில் எழுத்துகளால், தெரியாத ஆங்கிலம் அல்லாத சொற்கள் உள்ளன. இவை ஆங்கிலச் சொற்களா? அல்லது, ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தும் வேறு மொழியா என்று தெரியவில்லை. மீண்டும் எப்படி ஆங்கில மொழியில் ஜிமெயில் தளத்தினை அமைப்பது என்று வழி காட்டவும்.
ஆர். சந்திர மெளலி, சிதம்பரம்.
பதில்:
தற்போது நமக்குக் கிடைக்கும், தகவல் தொடர்பு செயலிகளில், நாம் பயன்படுத்தும் மொழியினை, உடனுக்குடன் மாற்றிக் கொள்ள எளிய வசதிகள் தரப்பட்டுள்ளன. உங்கள் ஜிமெயில் தளத்தில், ஏற்கனவே, ஆங்கிலத்தில் இருந்ததை, நீங்களோ, அல்லது பயன்படுத்திய வேறு ஒருவரோ, அவர்களே அறியாமல், ஆங்கில மொழியை மாற்றி, ஜெர்மன் அல்லது ஸ்பானிஷ் மொழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அதனால் தான் இந்தக் குழப்பம். இதற்கான தீர்வு, அனைத்து செயலிகளிலும், Settings பிரிவில் இருக்கும். அதே போல, ஜிமெயில் தளத்தில், மேலாக, வலது பக்கத்தில், Settings பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பக்கத்தில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் கீழ் விரி மெனுவில், English (US) என்பதைத் தேடித் தேர்ந்தெடுக்கவும். பின் கீழாகச் சென்று, Save Changes என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். மாற்றப்பட்ட மொழி ஸ்பானிஷ் ஆக இருந்தால், Save Changes என்பது Guardar cambios ஆக இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். ஸ்விட்ச் போட்டு விளக்கு வெளிச்சம் வருவது போல, உங்கள் பக்கம், ஆங்கில மொழியில் கிடைக்கும்.
இந்த பக்கத்தில் கிடைக்கும் சொற்கள் மட்டுமே ஸ்பானிஷ் மொழியில் இருந்திருக்கும். உங்களுக்கு வரும் மெயில்கள் அனைத்தும், அவை எழுதப்பட்ட ஆங்கிலம் அல்லது தமிழிலேயே இருந்திருக்கும்.

கேள்வி: பேஸ்புக் மெசஞ்சரில் வரும் தகவல்களுடன், சின்ன சின்ன இமேஜஸ் அனிமேஷனில் கிடைக்கின்றன. இவை எங்கு கிடைக்கின்றன? எப்படி இணைக்கலாம்?
என். ஆர். லாவண்யா, திருப்பூர்.
பதில்
: இவை GIF பைல்கள். GIF என்பது Graphics Interchange Format என்பதன் விரிவாக்கம். படங்களின் நகர்வைக் காட்டும் தன்மையுடன் கூடிய பட வகை. இந்த பார்மட்டில் உள்ள அனிமேஷன் இணைந்த படங்களை, பேஸ்புக் மெசஞ்சரில் மட்டுமின்றி, பேஸ்புக் ஆன்லைனிலும் இணைக்கலாம். புதிய மெசேஜ் ஒன்றை அமைக்கும் போது, அந்த விண்டோவின் கீழாக, GIF பைல்களை இணைக்க ஆப்ஷன் ஒன்று கிடைக்கும். படத்தை இணைக்க இதில் கிளிக் செய்திட வேண்டும். உடன் சில அனிமேஷன் படங்கள் காட்டப்படும். மெசஞ்சர் எனில், பக்கவாட்டில் ஸ்வைப் செய்தால், இன்னும் சிலவற்றைப் பார்க்கலாம். பிரவுசர் பேஸ்புக்கில், கீழாக ஸ்குரோல் செய்து பார்க்கலாம். உங்களுக்குப் பிடித்த படம் கிடைத்தவுடன், add என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள தேடல் கட்டத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் படங்கள் குறித்து எழுதியும் தேடிப் பெறலாம்.

கேள்வி: கம்ப்யூட்டரின் டாஸ்க் பார் இறுதியில் அப்போதைய நேரம் காட்டப்படுகிறது. கூடுதலாக, இன்னொரு நாட்டின், நகரத்தின் நேரம் காட்டும்படி எப்படி அமைப்பது? என் நண்பர் தன் மகன் வசிக்கும் அமெரிக்க நகரத்தின் நேரம் காட்டும்படி அமைத்துள்ளார். ஆனால், அவருக்கு எப்படி அமைப்பது என்று தெரியவில்லை. உதவவும்.
என். ஸ்ரீனிவாச மூர்த்தி, கும்பகோணம்.
பதில்:
இப்போதெல்லாம், ஒவ்வொருவர் வீட்டிலும், ஒரு பிள்ளையாவது வெளிநாட்டில் இருப்பதால், அவர்களுடன் தொடர்பு கொள்ள, அவர்கள் வசிக்கும் ஊரின் நேரம் தெரிந்து கொள்வது ஒரு தேவையாகிறது. (என் நண்பர் ஒருவர், இதற்காக, வீட்டில் இரண்டு கடிகாரங்களை மாட்டி வைத்து, ஒன்றில், அமெரிக்காவின் நியுஜெர்ஸி நகரின் நேரத்தை அமைத்துள்ளார்). கம்ப்யூட்டரில் இதனை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
விண்டோஸ் சிஸ்டத்தில், கூடுதலாக, இரண்டு ஊர்களின் நேரத்தை அமைத்து வைத்திட வழி தருகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில் பார்ப்பது, நம் ஊரின் நேரமாகும். அதன் அருகே, மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், நாம் அமைத்து வைத்த கூடுதல் நகரங்களின் நேரத்தைக் காணலாம். இதனை அமைக்கக் கீழே கொடுத்துள்ள செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், டாஸ்க் பார் கடிகாரத்தின் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Adjust Date/Time என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது, Date & Time என்ற விண்டோ கிடைக்கும். இதில் நடுவில் Additional Clocks என்ற டேப் இருக்கும். இதில் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் விண்டோவில், நீங்கள் அமைக்க இருக்கும் நாடு, ஊர் ஆகியவற்றை ஸ்குரோல் செய்து தேடிப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம். இதற்கு ஒரு பெயர் கொடுக்கலாம். அதற்கான கட்டத்தில் ஊரின் பெயரை டைப் செய்திடவும்.
இதன் பின்னர், டாஸ்க் பாரில், உள்ளூர் நேரம் மட்டுமே தெரியும். மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், கூடுதலாக அமைத்த ஊரின் பெயரும் நேரமும் காட்டப்படும்.

கேள்வி: சென்ற ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், குரோம் பிரவுசர், எக்ஸ்பி மற்றும் விஸ்டா மற்றும் சில மேக் சிஸ்டங்களுக்கான ஆதரவினை கைவிடுன் என தெரிவிக்கப்பட்டது. அது நடைமுறைக்கு வந்துவிட்டதா? வந்திருந்தால் என்ன செய்திட வேண்டும்?
கே. பன்னீர்செல்வம், தஞ்சாவூர்.
பதில்:
சரியான நேரத்தில் இந்த கேள்வியை அனுப்பி இருக்கிறீர்கள். கூகுள், தன்னுடைய குரோம் பிரவுசரின் குரோம் 50 (Chrome 50) பதிப்பினைச் சென்ற வாரம் வெளியிட்டது. நீங்கள் நினைவு படுத்திய சென்ற ஆண்டு அறிவிப்பின்படி, எக்ஸ்பி மற்றும் விஸ்டா, ஆப்பிள் மேக் சிஸ்டத்தின் மூன்று பழைய பதிப்புகளுக்கான (OS X Snow Leopard, OS X Lion or OS X Mountain Lion) ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்கள், குரோம் பதிப்பு 50 ஐப் பயன் படுத்தமுடியாது. அவர்கள் குரோம் பதிப்பு 49லேயே இயங்க வேண்டியதுதான். புதிய பதிப்புகளுக்கான அப்கிரேட் பைல்கள் இவற்றிற்குக் கிடைக்காது வைரஸ் எதிரான பேட்ச் பைல்களும் கிடைக்காது. இந்த விலக்கல் குறித்து 2015 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது. பின்னர், ஏப்ரல் 2016 வரை ஆதரவு பைல்கள் தரப்படும் என நீட்டிக்கப்பட்டது. அதே போல, தற்போது, அவை தரப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கூகுள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களை, குறைந்த பட்சம் விண்டோஸ் 7 சிஸ்டம் அல்லது அதன் பின்னர் வந்த சிஸ்டங்களுக்கு அப்கிரேட் செய்திட அறிவுறுத்தியுள்ளது. மேக் கம்ப்யூட்டரில், OS X Mavericks அல்லது அதன் பின்னர் வந்த சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் சிஸ்டத்தில் பாதுகாப்பாக குரோம் பயன்படுத்த, Windows 7, Windows 8, Windows 8.1, Windows 10 சிஸ்டம் கொண்டிருக்க வேண்டும். கம்ப்யூட்டரின் ப்ராசசர் Intel Pentium 4 processor அல்லது பின் வெளியானதாக இருக்க வேண்டும். ஆனால், மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர், குரோம் கைவிட்ட அனைத்து சிஸ்டங்களுக்கும் பாதுகாப்பும், மேம்படுத்தலையும் தருகிறது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X