கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மே
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 10 இயங்கும் லேப்டாப் வைத்திருக்கிறேன். இதனுடன், என் புளுடூத் கீ போர்ட் மற்றும் ஸ்பீக்கர் ஆகியவற்றை இணைக்கும் வழி தெரியவில்லை. தயவு செய்து வழி காட்டவும்.
என். சம்பூர்ணம், திருநெல்வேலி.
பதில்:
எளிதாக உங்கள் சாதனத்தை புளுடூத் வழியில் இணைக்கலாம். முதலில், இணைக்க விரும்பும் சாதனத்தில் புளுடூத் இயக்கத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும். உங்களுடைய சாதனத்தைப் பொறுத்து இது வேறுபடும். அடுத்து ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். இங்கு Settings > Devices > Bluetooth எனச் செல்லவும். தொடர்ந்து Bluetooth வசதியை இயக்கத்தில் அமைக்கவும். இங்கு நீங்கள் இணைக்கவிரும்பும் சாதனத்தின் பெயர் காட்டப்படும். பின்னர், இரண்டு சாதனங்களையும் Pair செய்திட வேண்டும். தொடர்ந்து வேறு ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள்ளச் சொல்லி தகவல் கிடைத்தால், அவற்றை மேற்கொள்ளவும். இல்லை எனில், இப்போது அவை இரண்டும் இணைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.

கேள்வி: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், அவற்றை நான் குறிப்பிடும் டைரக்டரியில் சேவ் செய்திட, என்ன அமைப்பு வழிகளைக் கையாள வேண்டும். இவை என் கம்ப்யூட்டரில் டாகுமெண்ட்ஸ் லைப்ரேரியில் சேவ் ஆகின்றன. ஒவ்வொரு முறையும், டைரக்டரி மற்றும் போல்டரைத் தேர்வு செய்து சேவ் செய்திட வேண்டியதுள்ளது. நான் அமைக்கும் போல்டரில் எப்படி தானாக சேவ் செய்திட அமைக்கலாம்?
டி.கருணாமூர்த்தி, தூத்துக்குடி.
பதில்:
முதன் முதலில் வேர்ட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில், மாறா நிலையில் சேவ் செய்யப்படும் டைரக்டரியாக "Documents" அமைக்கப்படுகிறது. முந்தைய பதிப்புகளில், சிஸ்டம்களில் இது "My Documents" ஆக இருந்தது. இதனை நீங்கள் விரும்பும் டைரக்டரிக்கு மாற்றலாம். இது மிகவும் எளிது.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, Word Options தேர்ந்தெடுக்கவும்.
2. இப்போது வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் இடது புறம் Save என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Customise how documents are saved என்ற விண்டோ கிடைக்கும். இதில் Default File Location என்ற பிரிவின் எதிரே உள்ள நீள கட்டத்தில், டைரக்டரிக்கான வழி அமைக்கப்பட்டிருக்கும். இதில் நீங்கள் சேவ் செய்திட விரும்பும் டைரக்டரிக்கான வழியை அமைத்து, சேவ் செய்திடவும்.
4. பின் வேர்ட் செயலியை மூடி, மீண்டும் இயக்கவும். இனி, நீங்கள் தயாரிக்கும் டாகுமெண்ட் பைல்கள், நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள டைரக்டரியில் மட்டுமே சேவ் ஆகும்.

கேள்வி: கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 10 ஆகிய இரண்டு சிஸ்டங்களையும் அமைத்து டூயல் பூட் முறையில் இயக்கலாம் என்று டிப்ஸ் தந்துள்ளீர்கள். அப்படியானால், என் பெர்சனல் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 உள்ளது. உடன் இலவசமாக, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து, இரண்டு சிஸ்டங்களையும் டூயல் பூட் முறையில் இயக்க முடியுமா? அதற்கான வழிகளைத் தெளிவாக கூறவும்.
ஆ. பழனிநாதன், திருப்பூர்.
பதில்:
பழனிநாதன், உங்களுடைய லாஜிக் நன்றாகத்தான் உள்ளது. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டம் பெற விதித்துள்ள நிபந்தனைகளை மீண்டும் பார்ப்போமா! விண்டோஸ் 7 இருந்த இடத்தில், விண்டோஸ் 10 இலவசமாகப் பதியப்படுகையில், நீங்கள் அதனை அப்கிரேட் செய்கிறீர்கள். விண்டோஸ் 7 உரிமம், விண்டோஸ் 10 உரிமம் ஆக மாற்றப்படுகிறது. எனவே, நீங்கள் தொடர்ந்து டூயல் பூட் முறையில், விண்டோஸ் 7 பயன்படுத்த விரும்பினால், விண்டோஸ் 10 உரிமத்தினை கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். இரண்டும், ஒரே கம்ப்யூட்டரில் டூயல் பூட் முறையில் நன்றாகவே இயங்குகின்றன. இதனை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.

கேள்வி: நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கி சில மாதங்கள் ஆன பின்னர், அதன் செயல்திறன் வேகம் குறையும் என்று என் நண்பர் கூறுகிறார். இது எப்படி? எல்லாமே டிஜிட்டல் தானே? நகர்ந்து சென்று வேலை செய்திடும் பாகங்கள் இல்லையே? பின் எப்படி தேய்மானமும், வேகக் குறைவும் ஏற்படும்? இதனை எப்படியாவது தடுத்து, எப்போதும் போல, ஒரே வேகத்தில் இயங்குமாறு செய்திட முடியுமா?
என். சிக்கந்தர், சிதம்பரம்.
பதில்:
உங்களுடைய வாதம் சரி என்றாலும், வேறு சில இயக்க தன்மைகளையும் இங்கு பார்க்க வேண்டும். கம்ப்யூட்டரின் வேகம் நாட்கள் செல்லச் செல்ல குறைந்து கொண்டே இருக்கும். முதல் காரணம், கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களின் எண்ணிக்கை. தொடக்கத்தில், புதிய புரோகிராம் ஒன்றை நாம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன் தயாராக இருப்பதற்காக, தொடக்கத்திலேயே அதன் இயக்கத்தினையும் தொடங்கிடுவோம். ஆனால், நாட்கள் சென்ற பின்னர், அதன் தேவை இல்லை என்றாலும், அதனை தொடக்க நிலை செயல்பாட்டிலிருந்து விடுவிக்க மாட்டோம். இதே போல பல புரோகிராம்கள், நாம் அறியாமலேயே பின்னணியில் இயங்குவதால், ராம் மெமரி இடம் குறைகிறது. கம்ப்யூட்டரின் செயல்பாட்டின் வேகமும் குறைகிறது. இதனை எப்படித் தவிர்க்கலாம்? தேவையற்ற புரோகிராம்கள், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போதே, இயங்குவதை நிறுத்தலாம். கம்ப்யூட்டரில் உள்ள கேஷ் மெமரியைப் புதுப்பிக்கலாம்; தற்காலிகமாக உருவான பைல்களை நீக்கலாம். இதற்கு சிகிளீனர் போன்ற புரோகிராம்களை அடிக்கடி பயன்படுத்தலாம்.

கேள்வி: எப்போதும் வேர்ட் டாகுமெண்ட்களில் செயல்படுபவன் நான். பயன்படுத்துவது விண்டோஸ் 7 மற்றும் வேர்ட் 2007. சில வேளைகளில், டாகுமெண்ட்டினை சேவ் செய்திடுகையில் “Word cannot complete the save due to a file permission error” என்ற செய்தி காட்
டப்பட்டு, பைல் சேவ் செய்யப்பட மறுக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது? பெரிய சிக்கலாக உள்ளது.
என். ஜெயபால், பழனி.
பதில்
: இதற்குப் பல காரணங்கள் உண்டு. டாகுமெண்ட்களை மறைப்பதற்கென அவற்றைச் சுருக்கும் செயலி, நீங்கள் வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். அந்த செயலியுடன் வேர்ட் ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கலே இதற்குக் காரணம். அல்லது, நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் செயலியாலும் இந்த சிக்கல் ஏற்படலாம். இதனை உணர்ந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வடிவமைப்பாளர்கள், இதற்கான தீர்வு தரும் பேட்ச் பைல்களை அப்டேட் ஆகத் தந்துள்ளனர். நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்திடவும்.
ஆனால், இதனைத் தவிர்க்க ஓர் எளிய வழி சொல்கிறேன். டாகுமெண்ட் சேவ் செய்திட மறுக்கையில், Save As கிளிக் செய்து, அப்போது வலது புறமாகக் கிடைக்கும் பைல் வகையில் Word 97~2003 Document என்பதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடவும். உங்களின் உழைப்பு வீணாகாமல் சேவ் செய்யப்படும். பைல் பெயரில் அடைப்புக் குறிக்குள் [Compatibility Mode] எனக் காட்டப்படும். இதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்கள் தயாரித்த டாகுமெண்ட் முக்கியம் அல்லவா.

கேள்வி: டூயல் பூட் முறையில், என் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 10 பதிந்து கொண்டு இயக்க முடியுமா? இன்றைக்கு இருக்கின்ற நிலையில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை நம்பி, அப்கிரேட் செய்திடத் தயக்கமாக உள்ளது. டிப்ஸ் தரவும்.
என். ராஜேந்திரன், மதுரை.
பதில்
: டூயல் பூட்டிங் என்பது நம் விருப்பத் தேர்வே. உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவினைப் பிரிவுகளாக அமைக்கையில், ஒரு பிரிவில், ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும், இன்னொன்றில், இன்னொரு வேறுபட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் பதியலாம். கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குகையில், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் இயங்க விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டு, இரண்டும் காட்டப்படும். நீங்கள் விரும்பும் சிஸ்டத்தினைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறை மாறி வேறு ஒரு சிஸ்டத்தில் இயங்க, கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திட வேண்டும். ஒன்றில் இயங்கும்போது, இன்னொன்றுக்குத் தாவிச் செல்லுதல் இயலாது.
இனி, உங்கள் பிரச்னைக்கு வருவோம். நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன், விண்டோஸ் 10 ஐ இணைத்து, டூயல் பூட்டிங் அமைப்பில் வைத்து இயக்க விரும்புகிறீர்கள். இதனை மேற்கொள்ளலாம். ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைக் கட்டணம் செலுத்தித்தான் வாங்க வேண்டும். இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பதிகையில், விண்டோஸ் 7 சிஸ்டம் பைல்கள் நீக்கப்பட்டு ஒரு மாதம் மட்டும் உங்கள் கம்ப்யூட்டரில் பாதுகாக்கப்படும். இது இயக்கி செயல்பட அல்ல. உங்களுக்கு விண்டோஸ் 10 சிஸ்டம் பிடிக்காமல் போனால், மீண்டும் உங்கள் பழைய சிஸ்டத்திற்குச் செல்ல மைக்ரோசாப்ட் இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளது. ஒரு மாதத்திற்குப் பின் இந்த வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்காது.

கேள்வி: அண்மையில், திடீரென அழிக்கப்பட்ட பைல் ஒன்று தேவைப்படுகையில் தான், இந்த தேவையை உணர்ந்தேன். நம்மை அறியாமல், அல்லது அறிந்தே, அழிக்கப்பட்ட பைல்களை மீட்டு எடுக்கும் புரோகிராம்கள் குறித்து டிப்ஸ் தரவும். சிறந்த புரோகிராம் ஒன்றைப் பரிந்துரை செய்திடவும்.
என். சிவபாக்கியம், திண்டுக்கல்.
பதில்:
பொதுவாக, பைல் ஒன்று அழிக்கப்படுகையில், அது ரீசைக்கிள் பின்னில் தங்குகிறது. பின் இங்கிருப்பதனையும் அழித்துவிட்டால், பைல் அழிக்கப்படுகிறது. ஆனால், விண்டோஸ் சிஸ்டத்தில், இத்தகைய பைல் நீக்கம் என்பது என்ன என்று பார்த்தால், உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும். பைல் ஒன்றை நிரந்தரமாக நீங்கள் அழிப்பதாக நினைத்து அழிக்கையில், அந்த பைல் அழிக்கப்படுவதில்லை. அந்த பைலை விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைக்கும் தொடர்புகளே அழிக்கப்படுகின்றன. அழித்த பைலை மீட்டுத் தரும் புரோகிராம்கள், இந்த லிங்க்கினை மீண்டும் அது நீக்கப்பட்ட வழியில் பின்னோக்கிச் சென்று கண்டறிகின்றன. பின்னர், அதன் மூலம், பைலை மீட்டுத் தருகின்றன. இந்த வகையில் Recuva என்னும் புரோகிராம், மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த புரோகிராமினை இயக்கி, ஸ்கேன் செய்திட கட்டளை கொடுக்கையில், அது அப்போதைய நிலையில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, மீட்கப்படக் கூடிய அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டறிந்து பட்டியல் இடும். அழிக்கப்பட்ட பைல்கள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் இயக்கம், எதிர்பாராத நிலையில், முடக்கப்பட்டு செயல் இழந்து போகையில், அழிக்கப்படும் பைல்களையும், இந்த புரோகிராம் மீட்டு எடுத்துத் தரும்.
எனவே, ரெகுவா அப்ளிகேஷன் புரோகிராம், கம்ப்யூட்டரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு புரோகிராம் ஆகும். இதனை இலவசமாகவே, இதன் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் வசதிகளுடன் கூடிய புரோகிராம் 20 டாலர் கட்டணத்தில் கிடைக்கிறது.

கேள்வி: டாகுமெண்ட்களில் உள்ள வரிகளில் எண்களை அமைக்கையில், அந்த எண்கள், வரிகளிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி இருக்க வேண்டும் என குறிப்பிட்டு அமைக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன? செட்டிங்ஸ் பக்கம் எங்கு அமைந்துள்ளது?
டி. விக்னேஷ் ராஜா, திருப்பூர்.
பதில்
: மிக எளிதாக இதனை அமைக்கலாம். கீழே தந்துள்ள செயல்முறைகளைப் பின்பற்றவும்.
1. ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Page Setup குரூப்பில் உள்ள Line Numbers என்னும் டூலில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Line Number Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Page Setup டயலாக் பாக்ஸில் உள்ள Layout டேப்பினைக் காட்டும்.
3. Line Numbers பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Line Numbers டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. அடுத்து From Text என்னும் பாக்ஸில் உள்ள அளவை, நீங்கள் வரிகளில் எந்த அளவிற்கு முன்னதாக எண்கள் இருக்க வேண்டுமோ, அதற்கேற்றார்போல் அதில் தரப்பட்டுள்ள அளவினை அமைக்கவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து Line Numbers டயலாக் பாக்ஸை மூடவும்.
6. பின்னர், ஓகே கிளிக் செய்து Page Setup டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும். இனி நீங்கள் விரும்பியபடி எண்களை அமைக்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X