ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (6)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2016
00:00

ஹலோ சில்ரன்...
ஹவ் ஆர் யு? Preposition எங்களுக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு வர்ஷிதா மிஸ்... ஸ்கூல்ல படிக்கும் போது எங்களுக்கு இவ்ளோ புரியல... இப்போதான் எங்களுடைய அறிவுக் கண் திறந்த மாதிரி இருக்கு, 'ஐ லவ் யு வர்ஷிதா மிஸ்!' என்று எழுதியிருந்தீங்க.. சோ சுவீட்....!
இன்னும் Preposition-ல சில வார்த்தைகளைச் சொல்லித் தரேன். ஆர்யு ரெடி?
By
I replaced my old ring by a new one.
நான் பழைய மோதிரத்தை மாற்றி புதுசு வாங்கினேன்.
We were disgusted by his conduct.
அவனது நடவடிக்கையில் நாங்கள் வெறுப்படைந்து விட்டோம்.
I was accompanied by my friend.
என்னுடைய நண்பன் எனக்கு துணையிருந்தான்.

From - to -
From 12.30 to 2.30
12.30 மணியிலிருந்து 2.30 மணி வரை.
From chennai to mumbai.
சென்னையிலிருந்து மும்பைக்கு.
He is not recovered from his illness.
அவன் நோயிலிருந்து இன்னும் குணமடையவில்லை.
My wife prevents me from going there.
என் மனைவி அங்கே போகாமல் என்னை தடுக்கிறார்.
The girl was absent from school
சிறுமி பள்ளிக்குச் செல்லவில்லை.

To
He was addicted to smoking
அவன் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானான்.
I prefer coffee to tea
எனக்கு டீதான் பிடிக்கும்.
Some people prefer wealth to health.
சிலர் ஆரோக்கியத்தை இழந்து பொருள் சேர்க்க விரும்புகின்றனர்.

Into
பொதுவாக, 'உள்' உள்ளே என பொருள்படும்.
I put my books into my bag.
நான் என் புத்தகங்களை என் பைக்குள் வைத்தேன்.
He was admitted into the hospital.
அவன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டுள்ளான்.
The doll fell into the well.
பொம்மை கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

Above
மேலே இருக்கும் பொருளைக் குறிக்கப்பயன்படுகிறது.
The sky is above us.
வானம் நமக்கு மேலே இருக்கிறது.
Against
I always guard you against your enemies.
நான் உன்னை எப்போதும் உன் விரோதிகளிடம் இருந்து காப்பாற்றுவேன்.
இன்றைக்கு பாடம் கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் ஸ்மார்ட் குட்டீஸான உங்களுக்கு இது பெரிய விஷயம் இல்ல. படித்து நல்லா ஞாபகத்தில் வச்சிக்கோங்க சரியா?

பேசிப் பழக குட்டி வாக்கியங்கள்!
Go yourself - நீயாகவே செல்!
Go back - திரும்பிப் போ!
Write with pen - பேனாவால் எழுது!
Don't do so - இனி அப்படிச் செய்யாதே!
Don't chatter - கண்டபடி பேசாதே!
Do your own work - உன் வேலையை நீ பார்!
How dare you say that - இதைக் கூற உனக்கு என்ன துணிச்சல்!

ஸோ இத்துடன் பை சொல்வது உங்கள்,
- வர்ஷிதா மிஸ்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X