பட்ஜெட் மல்ட்டிமீடியா மொபைல் போன்களுக்குப் பெயர் பெற்ற, பிளை நிறுவனம், அண்மையில் பி435 என்னும் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு குவெர்ட்டி கீ போர்டுடன் வடிவமைக்கப்பட்ட போன். மல்ட்டிமீடியா வசதிகளுடன், சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு நேரடி இணைப்பு வசதியினையும் கொண்டுள்ளது. 10.5 மிமீ தடிமனில் மிகவும் ஸ்லிம்மாக (110 x 57 x 10.5) 95 கிராம் எடையில் அமைக்கப்பட்டுள்ளது. மிக எளிதாகப் பாக்கெட்டில் போட்டு எடுத்துச் செல்ல விரும்பும் இளைஞர்களுக்கு உகந்தது.
இரண்டு ஜி.எஸ்.எம். சிம்கள் பயன்பாடு, 1.3 எம்பி கேமரா, ஈக்குவலைசர் கொண்ட எம்பி3 பிளேயர், ரெகார்டிங் வசதி கொண்ட எப்.எம். ரேடியோ, ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், WAP பிரவுசர், வீடியோ பிளேயர், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். இமெயில், A2DP இணைந்த புளுடூத், ஜிமெயில் பயன்பாடு, இமேஜ் வியூவர், கால்குலேட்டர், அலாரம், இ-புக் ரீடர், மோடமாகப் பயன்பாடு ஆகிய வசதிகள் உள்ளன. கருப்பு, வெள்ளை என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. தொடர்ந்து 10 மணி நேரம் பேசக்கூடிய அளவிற்குத் திறன் தரும் பேட்டரி தரப்படுகிறது.
இதன் அதிக பட்ச விலை ரூ. 3,359 மட்டுமே.