பிரதமரை நேரில் சந்தித்தோம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2016
00:00

ஸ்ரீவில்லிபுத்தூர், செட்டியக்குடித் தெருவில் உள்ள தொடக்கப் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பாரத பிரதமராக இருந்த நேரு மாமா, மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு காரில் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். எங்கள் பள்ளி இருந்த சாலை வழியாக கார் செல்வதாக பயண திட்டமிருந்தது. பாரத பிரதமராச்சே அவரை எங்களால் பார்க்க முடியுமா? பார்க்க வேண்டும் என்ற ஆவல் எங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களிடமும் இருந்தது.
காலை, பள்ளிக்கு முன்னுள்ள சாலையில் மாணவ, மாணவியர் அனைவரும் வரிசையாக நின்றோம். அதிகாரிகள், நேரு (பிரதமர்) வரும் கார் மெதுவாகச் செல்லும். ஆனால், நிற்காது. அப்போது அவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர். ஆனால், நடந்ததே வேறு.
எங்கள் தலைமையாசிரியர் அடைக்கலம், மாணவர்களிடம் ஆளுக்கொரு ரோஜா மலரைக் கொடுத்து நிற்க வைத்தார். தானும் ஒரு ரோஜா மாலையைக் கையில் வைத்துக் கொண்டார்.
நேரு மாமா கார் எங்கள் பள்ளிக்கு அருகில் வந்தது. ரோஜா மலர்களுடன் நின்றிருந்த எங்களைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்னார். கீழே இறங்கி வந்து எங்களிடம் உள்ள பூக்களை வாங்கினார். தலைமையாசிரியரும் நேரு மாமாவிற்கு மாலையை அணிவித்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டார் எங்கள் தலைமையாசிரியர்.
பள்ளிக்கு முன் நேருவை வரவேற்பது, தம் கையால் அவருக்கு மாலை அணிவிப்பது. இரண்டும் நிறைவேறிவிட்டன. எங்களுக்கும் பேரானந்தம். ஒரு நாட்டின் பிரதமரைச் சந்திப்பது என்றால் சும்மாவா? அதுவும் எங்கள் கையால் அவருக்கு ரோஜாப் பூ கொடுப்பது என்றால் கேட்கவே வேண்டாம் தானே. நடக்கவே முடியாத விஷயம். ஆனால், அவை இரண்டும் அன்று நிறைவேறின.
இந்நிகழ்ச்சியை என்றும் எங்களால் மறக்கவே முடியாது. இந்நிகழ்வு எங்கள் வாழ்க்கையில் பசுமை நிறைந்த நினைவாக இன்றும் உள்ளது.
- ப.வெள்ளை, திருவில்லிபுத்தூர்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X