ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (8) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (8)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2016
00:00

ஹாய் ... ஹாய் குட் மார்னிங் சில்ரன்! நல்லா படிக்கிறீங்க... ரொம்ப ஆர்வமா கேள்விகள் கேட்குறீங்க... சூப்பர்... நானே உங்களிடம் இருந்து இவ்ளோ, 'ரெஸ்பான்சை' எதிர்பார்க்கல.
'வர்ஷி மிஸ்... அடுத்து எந்த தலைப்பில் சொல்லித் தரப்போறீங்க... நாங்க ரொம்ப ஆவலா காத்துகிட்டிருக்கிறோம். 'தி'... 'த'க்கு வித்தியாசம் சொல்லித் தந்தீங்களே... அது ரொம்ப, ரொம்ப சூப்பர் மிஸ்...'ன்னு எழுதி இருந்தீங்க.
இன்று Gender (ஜெண்டர்) என்றால் என்ன என்று பார்ப்போமா?
'ஜெண்டர்'னா தமிழில் என்ன என்றுதானே கேட்குறீங்க?
உங்க தமிழம்மா ஆண் பால், பெண்பால், பலவின்பால்னு உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்களே...
யெஸ் மிஸ்...
அதுதான் இது! ஆங்கிலத்திலும் பால் நான்கு வகைப்படும். அவை,
1.ஆண் பால்,
2.பெண் பால்,
3.பொதுப்பால்,
4.பலவின் பால்.
இப்ப ஒவ்வொன்றாக பார்க்கலாமா?
1.ஆண் பால் - Masculine Gender
ஆணினம் அனைத்தும் ஆண்பாலைச் சேர்ந்தது. வசந்தன், வாசு, பாலு.
2.பெண்பால் - Feminine Gender
பெண் வர்க்கத்தை குறிக்கும் அனைத்துப் பெயர்களும் பெண்பால் எனப்படும். ரம்யா, வாசுகி, நிஷா,
3.பொதுப் பால் - Common Gender.
பொதுவான பெயர்கள் அனைத்தும் பொதுப் பால் எனப்படும்.
(எ-.கா) மக்கள். இக்கூட்டத்தில் ஆண், பெண் இருவரும் இருப்பதால் இவை பொதுப் பால்.
4. பலவின் பால் (உயிரற்ற பொருட்பால்) - Neuter Gender
உயிரற்ற பொருட்கள் அனைத்தும் இவ்வகை பாலைச் சேர்ந்தவை. உதாரணமாக, புத்தகம், கத்தி, பேனா, வளையல்.
ஓ.கே., வா.
Masculine Gender - Feminine Gender
King - Queen
Cock - Hen
Monk - Nun
Actor - Actress
Master - Mistress

சரி... இது போதும் என நினைக்கிறேன். இத்துடன் Singular - Plural உங்களுக்கு தெரிந்திருக்கும் அல்லவா? தெரியாதவர்களுக்காக கொஞ்சம் சொல்லித் தருகிறேன்.
ஒருபொருளை பற்றி குறிப்பது ஒருமை; பல பொருட்களை சேர்த்து குறிப்பிடுவது பன்மை. சரியா?

Singular - Plural
Pen - Pens
Girl - Girls

இங்கு ஒருமைப் பெயர் சொற்களுடன், S சேர்ந்து பன்மைப் பெயர்ச் சொற்களாக மாறியுள்ளது. எல்லா பெயர் சொற்களும் இப்படி மாறும் என்று சொல்ல முடியாது.
உதாரணமாக, CH - SH - S - O - X போன்ற எழுத்துக்களில் முடியும் பெயர்ச் சொற்களை பன்மையாக மாற்ற, es சேர்க்க வேண்டும்.
புரியலியா?
1.Brush - Brushes
2.Inch - Inches
3.Ox-Oxes
4.Tomato -Tomotoes
ஆனால், o என்ற வார்த்தையை இறுதி எழுத்தாக முடியும் சொற்கள் சிலவற்றுடன்,
es சேராமல், s மட்டும் சேரும். அவை.
Photos, Studios. சரியா?

பேசிப் பழக குட்டி வாக்கியங்கள்!
1. Please wake him up - அவனை எழுப்பு.
2. Let me work - என்னை வேலை செய்யவிடு.
3. Let them relax - அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும்.
4. I feel hungry? எனக்குப் பசிக்கிறது.
5. You ate very little - நீ கொஞ்சமா சாப்பிட்டயா.
6. Have a little more- இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்.
7. Bring me a cup of coffee - எனக்கு ஒரு கப் காபி கொண்டு வா.

இதை மனதில் பதிய வச்சிக்கோங்க... மற்றவை அடுத்த கிளாசில் பார்க்கலாம்!
பை.. பை! வர்ஷிதா மிஸ்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X