ஆண்ட்ராய்ட் போனில் பாதுகாப்பு | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
ஆண்ட்ராய்ட் போனில் பாதுகாப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 மே
2016
00:00

ஸ்மார்ட் போனை இயக்கும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், 'லாக் ஸ்கிரீன்' என நாம் அழைக்கும் ஸ்கிரீன் மிக முக்கியமான ஒன்றாகும். அத்துடன் அதனைப் பாதுகாப்பாக வைப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், லாலிபாப் பதிப்பு வந்த பின்னர், இந்த ஸ்கிரீனைப் பாதுகாப்பது மிகவும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வகையில் ஏற்கனவே இருந்த சில வழிமுறைகள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன; அல்லது வேறு இடங்களில் வைக்கப்பட்டுவிட்டன. எடுத்துக் காட்டாக, லாக் ஸ்கிரீனில் இயங்கிய விட்ஜெட் புரோகிராம்கள் 'கோஸ்ட்' என்ற அம்சத்தை எடுத்துவிட்டன. Face Unlock என்பது இப்போது நல்லதொரு 'ஸ்மார்ட் லாக்' ஆக “Trusted Face” என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், லாக் ஸ்கிரீன் மெனு, அதன் அனைத்து அம்சங்களையும் காணும் வகையில் எளிதானதாக மாறிவிட்டது.
இந்த லாக் ஸ்கிரீன் குறித்து இன்னும் சற்று விரிவாக இங்கு பார்க்கலாம். இதற்கு முதலில் செட்டிங்ஸ் மெனு செல்ல வேண்டும். இதனை, 'நோட்டிபிகேஷன் ஷேட்' பகுதியை இழுத்து அதில் காட்டப்படும் சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம். (சில ஆண்ட்ராய்ட் சாதனங்களில், இந்த சிறிய சக்கர செட்டிங்ஸ் ஐகானைப் பெற, இருமுறை விரலால் இழுக்க வேண்டியதிருக்கும். அல்லது, அப்ளிகேஷன் ட்ராயரில் (App Drawer) செட்டிங்ஸ் ஐகானில் தட்டிப் பெற வேண்டும்.)செட்டிங்ஸ் மெனு கிடைத்தவுடன், ஸ்குரோல் செய்து சென்று, “Personal” என்னும் பிரிவினை அடையவும். இங்கு “Security” என்ற பிரிவில் டேப் செய்திடவும்.
இந்த மெனுவில், முதல் ஆப்ஷன் “Screen lock” என்பதாக இருக்கும். இதைத்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம். இதில் மீண்டும் டேப் செய்து உள்ளே செல்லவும். இங்கு பல ஆப்ஷன்கள் நமக்காகத் தரப்பட்டிருக்கும். அவை:
None: இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுத்தால், லாக் ஸ்கிரீனுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற நிலை கிடைக்கும்.
Swipe: இந்த ஆப்ஷன் எந்தவித பாதுகாப்பினையும் தராது. ஏனென்றால், திரையின் குறுக்காகத் தேய்க்கும் வழி இது. இதனை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்பதால், இது பாதுகாப்பானது இல்லை.
Pattern: இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டால், கொடுக்கப்படும் ஒன்பது புள்ளிகளில், ஏதேனும் ஒரு வழியில் தேய்த்தால் மட்டுமே லாக் ஸ்கிரீன் திறக்கப்பட்டு, போனைப் பயன்படுத்த வழி கிடைக்கும்.
Pin: இதன் விரிவாக்கம் Personal Identification Number என்பதாகும். நாம் நம் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் போன்றவற்றைப் பயன்படுத்துகையில், நாம் மட்டுமே பயன்படுத்த இந்த 'பின்' நம்பரைப் பயன்படுத்துவோம். அதே போல, ஸ்மார்ட் போனின் லாக் ஸ்கிரீனை விலக்கவும் நாம் ஒரு பின் எண் கொடுக்க வேண்டும். டெபிட் கார்டுக்கான எண்ணை இங்கு தரக்கூடாது. ஏனென்றால், நாம் போனைத் திறக்கவென நண்பர்களிடம் அல்லது உறவினர்களிடம் இந்த எண்ணை ஏதேனும் அவசர காலத்தில் சொல்ல வேண்டியதிருக்கும். பின் அவர்கள் அதே எண்ணை நம் டெபிட் கார்டிலும் பயன்படுத்தி பணத்தை எடுக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.
Password: இது உங்கள் கூகுள் பாஸ்வேர்ட் அல்ல. இந்த லாக் ஸ்கீரினுக்கு மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய பாஸ்வேர்ட். இந்த பாதுகாப்பு தரும் வழிகளிலேயே இதுதான் மிகவும் சற்று சுற்றலான வழி. மேலே தரப்பட்டுள்ள இந்த வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனைத் தட்டவும். பின்னர் அதுவே உங்களை வழி நடத்தி, உங்கள் போனின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிடும்.
நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? ஒவ்வொரு முறையிலும் சில நன்மையும் சில பிரச்னைகளும் உண்டு. எடுத்துக் காட்டாக, Pattern மற்றும் PIN ஆகிய வழிகளில், நம் விரல்கள் திரையில் ஏற்படுத்தும் அழுத்தமான தூசி விலக்கலைக் கொண்டு மற்றவர்கள் அதனைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், பாஸ்வேர்டைக் காட்டிலும் 'பின்' நம்பர் தான் நல்லது. ஆனால், பாஸ்வேர்டினைக் குழப்பமாக, யாரும் அறியமுடியாத வகையில் அமைத்து, அதனை எளிதாக உள்ளீடு செய்திட முடியும் என்றால், அதுவே சிறந்த வழியாக அமையும்.
பாதுகாப்பான ஸ்கிரீன் லாக் அமைப்பது பலருக்கு எரிச்சலைத் தரும் ஓர் அம்சமாகத் தெரியலாம். தற்போது வரும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும், அண்மைக் காலத்திய ஆண்ட்ராய்ட் பதிப்புகள் “Smart Lock,” என்ற ஒன்றைப் பயன்படுத்துகின்றன. இது நீங்கள் வீட்டில், காரில் மற்றும் நீங்கள் மட்டுமே இருக்கும் இடங்களில் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X