கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மே
2016
00:00

கேள்வி: அண்மையில் ஒரு நூலில், USB is hot-swappable and hot-pluggable எனப் படித்தேன். இதன் பொருள் என்ன? நன்றி.
எஸ். சஞ்சனா, சென்னை.
பதில்:
தொழில் நுட்பம் சார்ந்த உரைகளில், “hot” என்ற சொல் கையாளப்பட்டிருந்தால், அது சாதாரணமாக 'செயல்பட்டுக் கொண்டிருக்கும்' அல்லது 'திறன் பெற்ற' என்ற பொருளைக் கொண்டிருக்கும். எனவே, hot-pluggable or hot-swappable என்றால், குறிப்பிட்ட அந்த சாதனத்தை, அது இணைக்கப்பட்டிருக்கும் சிஸ்டத்தின் செயல்பாட்டினை நிறுத்தாமல், இணைக்கவும், நீக்கவும் செய்திடலாம் என்று பொருள். யு.எஸ்.பி. hot-pluggable or hot-swappable என்றால், அந்த யு.எஸ்.பி. சாதனத்தினை, கம்ப்யூட்டரின் இயக்கத்தினை நிறுத்தாமலேயே இணைக்கவும் நீக்கவும் செய்திடலாம். பிரிண்டர் அல்லது மவுஸ் எல்லாம் இந்த விளக்கத்தின் கீழ் வரும். வெளிப்புறமாக இணைத்துப் பயன்படுத்தக் கூடிய எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் இது போல்தான். ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரைவ்கள் அடங்கிய சர்வரில், ஒரு ட்ரைவ் வேலை செய்திடத் தவறினால், சர்வரின் இயக்கத்தினை நிறுத்தாமலேயே அதனை எடுத்துவிட்டு இன்னொன்றைப் பொருத்தலாம்.

கேள்வி: விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள லேப்டாப் ஒன்றை இயக்கி வருகிறேன். முன்பு, விண்டோஸ் 8.1க்கு மாறச் சொல்லி தகவல் பாப் அப் கட்டமாக வந்தது. தானாக அப்கிரேட் செய்யும்படி விட்டுவிடலாமா? விண்டோஸ் 10க்கு மாற வேண்டிய நேரம் நெருங்குவதால், விண் 10க்கு மாற எண்ணியுள்ளேன். விண்டோஸ் 8.1க்கு மாறிக் கொண்ட பின்னர் தான், விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்குமா? என்ன, எப்படி செய்வது என்று வழி காட்டவும்.
என். தர்ம ராஜன், கோவை.
பதில்:
விண்டோஸ் 8.1க்கு முதலில் அப்டேட் செய்து கொள்ளுங்கள். இதில் எந்த சிக்கலும் ஏற்படாது. எந்த நிலையிலும் அப்டேட் செய்திடுகையில், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் மின் சக்தி இருக்க வேண்டும். இடையே தடைபடக் கூடாது. விண்டோஸ் 8.1க்கு மாறிய பின்னரே, விண்டோஸ் 10க்கு மாற முடியும் என்பது சரியே. நீங்கள் இப்போது மாறாவிட்டாலும், விண் 10க்கு மாற முயற்சிக்கையில், அது விண் 8.1க்கு மாற்றிக் கொண்டுதான், விண் 10க்கு உங்களைக் கொண்டு செல்லும். புதிய சிஸ்டங்களைப் பயன்படுத்தி, புதிய வசதிகளை இயக்கி அனுபவித்துப் பாருங்கள். உங்கள் கம்ப்யூட்டர் தொடு உணர் திரை கொண்டது என்றால், உங்கள் மகிழ்ச்சி இன்னும் கூடுதலாக இருக்கும்.

கேள்வி: என் அலுவலகத்தில் நான் உருவாக்கும் சில பைல்களை, பாஸ்வேர்ட் கொடுத்து என்கிரிப்ட் செய்து பாதுகாக்க விரும்புகிறேன். எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பில், வேர்ட் மற்றும் எக்ஸெல் புரோகிராம்களில் இதனை எப்படி மேற்கொள்வது என விளக்கவும்.
என். பிரகாஷ், சென்னை.
பதில்:
ஆபீஸ் டாகுமெண்ட் அல்லது பைல் ஒன்றைப் பாஸ்வேர்ட் கொடுக்கும் வகையில் பாதுகாக்க, உங்கள் கோப்பினை, வேர்ட், எக்ஸெல் பவர்பாய்ண்ட் அல்லது அக்செஸ் புரோகிராமில் திறக்கவும். பின்னர், மேலாக இடது ஓரத்தில் உள்ள “File” மெனுவினை, கிளிக் செய்திடவும். Info பிரிவில், “Protect Document” என்பதைக் கிளிக் செய்து, “Encrypt with Password” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்டில் இந்த பட்டன் “Protect Document” எனத் தரப்பட்டிருக்கும். மற்ற புரோகிராம்களில், அதன் பைல் தன்மைக்கேற்ப மாறுதலாக, “Protect Workbook” / “Protect Presentation” என இருக்கும். Access புரோகிராமில், “Encrypt with Password” என்று மட்டுமே நேராகக் காட்டப்படும்.
நீங்கள் உங்கள் கோப்பினை எடிட் செய்வதை மட்டும் தடுக்க வேண்டும் என்றால், “Restrict Editing” என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். மொத்த டாகுமெண்ட்டினையும் மற்றவர் பார்ப்பதைத் தடுக்க வேண்டும் எனில், டாகுமெண்ட் முழுவதையும் என்கிரிப்ட் செய்வது சிறந்த வழியாகும். “Encrypt with Password” தேர்ந்தெடுத்து, பின்னர், அதற்கான நல்லதொரு பாஸ்வேர்டினைக் கொடுக்கவும். யாரும் எளிதில் யோசித்துக் கண்டறியக் கூடியதாக இருக்கக் கூடாது. இதில் ஓர் எச்சரிக்கையினைத் தருகிறேன். நீங்கள் தரும் பாஸ்வேர்டினை நீங்களே மறந்துவிட்டால், பின்னர் எந்த நிலையிலும், அந்த டாகுமெண்ட்டினைத் திரும்பப் பெற இயலாது. என்கிரிப்ட் செய்ததனால், டாகுமெண்ட் குறித்த தகவல் பிரிவில், “A password is required to open this document” எனக் காட்டப்படும்.
அடுத்து டாகுமெண்ட்டினைத் திறக்க முயற்சிக்கையில், “Enter password to open file” என்ற பாக்ஸ் காட்டப்பட்டு, பாஸ்வேர்டுக்குக் காத்திருக்கும். சரியான பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டுமே, டாகுமெண்ட் திறக்கப்படும்.
இந்த பாஸ்வேர்டினை நீக்க எண்ணினால், “Protect Document” பட்டனைக் கிளிக் செய்திடவும். மீண்டும் “Encrypt with Password” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பாஸ்வேர்டுக்கான இடத்தில் காலியாக விட்டுவிடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். எம்.எஸ். ஆபீஸ், குறிப்பிட்ட டாகுமெண்ட்டிற்கான பாஸ்வேர்டை நீக்கிவிடும்.
உங்கள் எம்.எஸ்.ஆபீஸ் 2007 ஆக இருக்கும் பட்சத்தில், ஆபீஸ் பட்டன் அழுத்திக் கிடைக்கும் மெனுவில், Prepare என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் மெனுவில் Encrypt Document என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, பாஸ்வேர்ட் கொடுக்கச் சொல்லி சிறிய கட்டம் கிடைக்கும். அவ்வளவுதான். உங்கள் டாகுமெண்ட் பாதுகாப்பாக என்கிரிப்ட்செய்யப்பட்டுவிட்டது.

கேள்வி: பேஸ்புக் தளத்தில் நாம் பைல்கள், விடியோ, போட்டோ ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம். ஸ்கைப் போல, இதில் நேரடியாக விடியோவினை இயக்க முடியுமா? அதாவது, பயனாளர் தம் நண்பருடன் நேரடியாகப் பார்த்து பேச முடியுமா?
என். ஜெயலஷ்மி, மதுரை.
பதில்
: நல்ல நேரத்தில் இந்த கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். அந்த வசதி இதுவரை இல்லை. விரைவில் தர இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. இந்த வசதியை Going Live என பேஸ்புக் அழைக்கிறது. இதன் மூலம், பேஸ்புக்கில் இயங்கும் குழுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனிப்பட்ட நபர்கள் ஆகியோருக்கிடையே நேரடியாக ஒளி பரப்பும் விடியோக்களைப் பகிர்ந்து கொள்ள இயலும். ஐ.ஓ.எஸ். சாதனங்களில் இந்த வசதியினை, பேஸ்புக் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் பெற்று பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் சாதனத்தில் இது தரப்படுகிறதா என்பது இன்னும் தெரியவில்லை.
உடனடி ஒளி பரப்பினைத் தொடங்க, பேஸ்புக் ஐ.ஓ.எஸ். அப்ளிகேஷனில் லாக் இன் செய்திடவும். உங்கள் Timeline, News Feed or Pageல், மேலாகத் தட்டவும். பின்னர், இரு கோடு வட்டத்திற்குள் ஆள் ஒருவர் இருப்பது போன்ற ஐகானில் தட்டவும். இங்கு நீங்கள் ஒளிபரப்ப இருக்கும் நிகழ்வு குறித்த சிறிய குறிப்பினை எழுதவும். தொடர்ந்து Go Live என்பதில் தட்டி, உங்கள் விடியோ ஒளிபரப்பினைத் தொடங்கலாம். ஒளிபரப்பினை முடிக்க எண்ணுகையில் Finish என்பதில் தட்டவும். நீங்கள் ஒளி பரப்பிய காட்சி, ஒரு விடியோ கோப்பாக, உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருக்கும். இந்த ஒளிபரப்பு, அதிக பட்சம் 90 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் நண்பர்கள் யாராவது இந்த ஒளிபரப்பினைக் காணக் கூடாது என்று எண்ணினால், அவர்கள் profile படத்தில் (viewer's comment பகுதியில் உள்ளது) தட்டி, கிடைக்கும் ஆப்ஷன்களில் Block என்பதில் தட்டவும். ஏற்கனவே ஒருவரை இவ்வாறு தடுத்திருந்தால், Unblock என்பதில் தட்டி, அவருக்கு ஒளிபரப்பினைக் காணும் உரிமையக் கொடுக்கலாம்.

கேள்வி: பேஸ்புக்கில், என் நண்பர்கள் விடியோவுடன் தங்கள் தகவலைப் பதிந்துவிடுகையில், நான் அதனைப் பார்க்கையில், என் முயற்சி இல்லாமலேயே, விடியோ இயங்கத் தொடங்கிவிடுகிறது. இது குறித்து நண்பர்களுக்கு எழுதி அவ்வாறு வேண்டாம் என்று சொன்னதற்கு, அவர்கள் தாங்கள் அது போல அமைக்கவில்லை என்று கூறுகின்றனர். இதனை நான் விரும்பினால் மட்டுமே இயங்கும் வகையில் அமைப்பது எப்படி?
ஜே. சுதா செல்வி, இராஜபாளையம்.
பதில்:
விடியோ இயங்குவதனை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். பேஸ்புக் திரையில், மேலாகக் காட்டப்படும் சிறிய அம்புக் குறி அல்லது முக்கோணத்தினை கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் செட்டிங்ஸ் (Settings) என்பதில் கிளிக் செய்து செட்டிங்ஸ் மெனு பெறவும். திரையின் இடது புறம் உள்ள பிரிவில், கீழாக Videos என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். பின்னர், இரண்டு பிரிவுகள் காட்டப்படும். ஒன்று மாறா நிலையில் உள்ளவை; இன்னொன்று Auto-Play Videos. பேஸ்புக் திறந்தவுடன், அதில் பதியப்பட்டுள்ள வீடியோக்கள் உடனே இயங்க வேண்டாம் என முடிவெடுத்தால், இதன் அருகில் உள்ள அம்புக் குறியை கிளிக் செய்து, அதில் Off என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: நான் எழுபது வயதைக் கடந்தவன். பெர்சனல் கம்ப்யூட்டரைத் தகவல் தொடர்புக்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும் பயன்படுத்துபவன். என்னுடைய பல சந்தேகங்களை, கம்ப்யூட்டர் மலர் தொடர்ந்து தீர்த்து வழி காட்டி வருகிறது. மிக்க நன்றி. அண்மையில் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறினேன். நான் பொழுது போக விளையாடும், எனக்கு மிகப் பிடித்த “Freecell” மற்றும் “Mahjong”. ஆகிய இரண்டு கேம்ஸ் இப்போது கம்ப்யூட்டரில் காணப்படவில்லை. தயவு செய்து இவற்றைப் பெறும் வழிகளைக் காட்டவும்.
கே. தட்சிணாமூர்த்தி, பேராசிரியர் (ஓய்வு), மதுரை.
பதில்
: தங்கள் பாராட்டுக்கு நன்றி. ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்தில், சிஸ்டத்துடன் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்ஸ் விளையாட்டுகள், விண் 10க்கு மேம்படுத்தப்படுகையில் மறைந்து போகும் என நான் முன்பே கட்டுரையில் எழுதி இருந்தேன். அவை காணாமல் தான் போகும்.
ஆனால், அவற்றை மீண்டும் பெற்றுவிடலாம். உங்களுடைய விண்டோஸ் 10 கம்ப்யூட்டர் மூலம், விண்டோஸ் ஸ்டோர் செல்லவும். இதற்கான விண்டோஸ் ஸ்டோர் ஐகான் உங்கள் கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில் இருக்கும். ஷாப்பிங் பேக் மாதிரி இது காட்டப்படும். இதில் கிளிக் செய்திடவும். அல்லது ஸ்டார்ட் மெனுவில் தேடல் கட்டத்தில் தேடிப் பெறலாம்.
ஸ்டோர் திறக்கப்பட்டவுடன், உங்களுக்குத் தேவையான கேம்ஸ் உள்ளதா எனத் தேடிப் பார்க்கலாம். Mahjong மற்றும் Free Cell ஆகியவற்றின் இலவச பதிப்பினைக் காணலாம். இவை இலவசம் தான் என்பதை, அந்த கேம்ஸ் தலைப்பிலேயே அறியலாம். Free பட்டனில் கிளிக் செய்து, அவற்றை டவுண்லோட் செய்திடவும். ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்திலேயே அவை டவுண்லோட் ஆகி, கம்ப்யூட்டரில் பதியப்பட்டுவிடும்.
இவை, அண்மையில் இணைக்கப்பட்ட புரோகிராம் பட்டியலில் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். அல்லது All Programs என்ற பட்டியலிலும் காணலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X