விண்டோஸ் எக்ஸ்பி- கேள்விகளும் பதில்களும் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
விண்டோஸ் எக்ஸ்பி- கேள்விகளும் பதில்களும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 டிச
2010
00:00

விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இயங்குவது குறித்த சந்தேகங்கள் வாசகர்களிடமிருந்து தொடர்ந்து வருகின்றன. பலருக்கு தொலைபேசி மூலம் தீர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு சில பிரச்னைகள் குறித்து பல வாசகர்கள் எழுதியுள்ளனர். அப்படிப்பட்ட பொதுவான பிரச்னைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம்.
கேள்வி-1: சென்ற வாரம் நண்பர் ஒருவரிடம் இருந்து  செகண்ட் ஹேண்ட் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை, வீட்டில் இரண்டாவதாக இருக்கட்டும் என்று  வாங்கினேன்.  அதில் விண்டோஸ் எக்ஸ்பி பதியப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது. அதற்கான லைசன்ஸ் எண் அதன் கேபினட்டில் ஒட்டப் பட்டுள்ளது. ஆனால் ஒரிஜினல் விண்டோஸ் சிடி தரப்படவில்லை. இப்போது பிரச்னை என்னவென்றால், அதன் ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போயுள்ளது. நான் புதிய ஹார்ட் டிஸ்க் ஒன்றை வாங்கி இணைக்க எண்ணுகிறேன். இதற்கென  வேறு ஒரு நண்பரிடம் உள்ள, லைசன்ஸ் தரப்பட்டுள்ள,  விண்டோஸ் எக்ஸ்பி சிடி வாங்கி இதில் ரீ-இன்ஸ்டால் செய்திடலாமா?
பதில்: ஒரு இன்ஸ்டலேஷன் டிஸ்க் இல்லாமல், கம்ப்யூட்டர் வழங்கும் நிறுவனத்திடமிருந்து வருகையிலேயே, அதில் விண்டோஸ் எக்ஸ்பி பதியப்பட்டிருந்தால், அதனை ஓ.இ.எம்.சாப்ட்வேர்  (OEM  original equipment manufacturer) என்று சொல்வார்கள். இதன் பொருள், அதில் தரப்பட்டுள்ள விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை, அந்த கம்ப்யூட்டரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது வர்த்தக ரீதியான ஓர் உடன்பாடு.  ஹார்ட் டிஸ்க்கினை மாற்றுவதால், அது புதிய கம்ப்யூட்டராக மாறாது. எனவே எக்ஸ்பி சிடி ஒன்றைப் பயன்படுத்தி, கேபினில் ஒட்டப்பட்டுள்ள லைசன்ஸ் குறியீடு எண் அடிப்படையில் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திடலாம்.
கேள்வி-2: என் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர், எப்போதும்  ஒரு டிஸ்க் செக் திரையைக் காட்டுகிறது. ‘broken links’  மற்றும் ‘truncated files’  என சில பிரச்னைக் குரிய செய்திகளைத் தருகிறது.  அந்த பிரச்னைகள் பிக்ஸ் செய்யப்பட்டதாகவும் செய்தி வருகிறது. ஆனால் மறுபடியும் இதே எர்ரர் செய்தி வருகிறது.ரன் கட்டத்தில்  chkdsk.exe   பைலை இயக்கிப் பார்த்துவிட்டேன். மீண்டும் இதே கதைதான். பிரச்னை வருகிறது. ஆனால் பிக்ஸ் ஆகவில்லை.
பதில். chkdsk  புரோகிராம் எர்ரர்களைக் காட்டும். அவற்றை பிக்ஸ் செய்யாது. அதாவது தீர்த்துவைக்காது.  பிரச்னைகளை பிக்ஸ் செய்திடுமாறு நாம் தான் அதற்குரிய ஆப்ஷனைத் தர வேண்டும். இதற்கு  விண்டோஸ் எக்ஸ்புளோரர் வழியாக இன்னொரு எளிய தீர்வு உள்ளது. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கவும். லோக்கல் டிஸ்க்  Local disk (C:)  என்று இருப்பதில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Properties  தேர்ந்தெடுக்கவும்.  தோன்றும் விண்டோவில், Tools   டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Check Now என்பதில் கிளிக் செய்திடவும். மீண்டும் தரப்படும் விண்டோவில் இரண்டு ஆப்ஷன்களையும் தேர்ந்தெடுத்து பின்னர்  Start  என்பதில் கிளிக் செய்திடவும். மீண்டும் பிரச்னை தொடர்கிறது என்றால், தயவு செய்து ஹார்ட் டிஸ்க்கினை மாற்றவும். முக்கியமான பைல்களை உடனடியாக, நல்லதொரு மீடியாவில் பேக் அப் எடுத்து, ஹார்ட் டிஸ்க்கினை மாற்றவும். புதிய ஹார்ட் டிஸ்க்கினை இன்ஸ்டால் செய்த பின்னர், பேக் அப் செய்த பைல்களைக் காப்பி செய்துவிடலாம்.
கேள்வி-3: என் விண்டோஸ் எக்ஸ்பி பாஸ்வேர்டினை மறந்துவிட்டேன். லாக் இன் ஸ்கிரீன் அடுத்து என்னால் செல்ல முடியவில்லை. இதனை மீண்டும் பெறும் வழி என்ன?
பதில்: பெரும்பாலான எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில், அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் பாஸ்வேர்ட் இருப்பதில்லை. எனவே உங்கள் User Account (யூசர் அக்கவுண்ட்) பாஸ்வேர்டை மாற்ற இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு, முதலில் கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு, (Safe Mode)  சேப் மோடில் ஸ்டார்ட் செய்திடவும். கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்து, விண்டோஸ் லோகோ வரும் முன் F5  அழுத்தவும்.  அப்போது கிடைக்கும் மெனுவில், சேப் மோட் தேர்ந்தெடுக்கவும். லாக் இன் ஸ்கிரீன் தோன்று கையில், Administrator  (அட்மினிஸ்ட்ரேட்டர்) என்று ஒரு எக்ஸ்ட்ரா ஐகான் தோன்றும். இதில் கிளிக் செய்து, விண்டோஸ் டெஸ்க்டாப் தோன்றும் வரை காத்திருக்கவும். பின்னர், Start,Control Panel, User Accounts (ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல், யூசர் அக்கவுண்ட்ஸ்) எனச் செல்லவும். இதில் உங்கள் அக்கவுண்ட்டினைத் தேர்ந்தெடுத்து, ‘இடச்ணஞ்ஞு tடஞு ணீச்ண்ண்தீணிணூஞீ’ என்பதில் கிளிக் செய்திடவும்.
கேள்வி-4:விண்டோஸ் எக்ஸ்பியில் வரும் தேவையற்ற ஒலிகளை, திறக்கும்போது, ஷட் டவுண் செய்திடுகை யில், டயலாக் பாக்ஸ் மற்றும் பிற மெனுக்களில் செலக்ஷன் செய்திடுகையில் ஏற்படும் ஒலிகளை நிறுத்த முடியுமா? அல்லது குறைத்து வைத்திட முடியுமா?
பதில்: Start   பட்டன் அழுத்தி  Control Panel  செல்லவும். அடுத்து Sounds, Speech, and Audio Devices  என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் வழியைக் கொண்டு சிஸ்டம் வால்யூம் என்பதன் அளவைத் தேவைப்படும் அளவிற்கு மாற்றவும்.  உங்கள் கண்ட்ரோல் பேனல் Classic  வியூவில் இருந்தால், Sounds and Audio Devices  என்பதில் டபுள் கிளிக் செய்திடவும்.  அடுத்து Volume  டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் தரப்பட்டுள்ள ஆப்ஷன்களில் Mute  என்னும் ஆப்ஷனை டிக் செய்வதன் மூலம்  தேர்ந்தெடுத்தால், எந்த ஒலியும் உங்கள் ஸ்பீக்கர்களில் கேட்காது. Sounds  டேப்பில் கிளிக் செய்தால்,விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள  பலவகையான சவுண்ட் அலர்ட் இருப்பதைக் காணலாம். பின்னர்    Programs  பிரிவில்.  Windows event  என்பதில் லெப்ட் கிளிக் செய்து, அதில் Sounds  ட்ராப் டவுண் மெனுவில் None  என்பதனைத் தேர்ந்தெடுத்தால், குறிப்பிட்ட புரோகிராம்களுக்கான ஒலி எதுவும் தரப்பட மாட்டாது. அனைத்து ஒலிகளையும் நிறுத்த, Sound scheme  மெனுவில் No Sounds  என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். அனைத்தையும் உங்கள் விருப்பப்படி அமைத்த பின், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
 

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X