ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 டிச
2010
00:00

விடுமுறை காலம் நெருங்குகிறது. புத்தாண்டு தொடங்க இருக்கிறது. பொங்கல் வர  இருக்கிறது. மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்.  இந்த முறை, பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட,  இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள். இந்தியாவில் இணையம் வழியாக பொருட்கள் வாங்குவது அதிகரித்துக் கொண்டே செல்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இருப்பினும் இதில் நிறைய தில்லுமுல்லுகளும், திருட்டுகளும் அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சற்று எச்சரிக்கையாக இதனை மேற்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பார்ப்போம்.
1. நம்பிக்கையான கடைகளின் இணைய தளங்கள் வழியே மட்டும் வாங்கவும். இவை தங்களின் முகவரிகளையும், தொலைபேசி  எண்களையும் தந்திருப்பார்கள். அவற்றை முதலில் உறுதி செய்து கொள்ளவும்.
2. இணையத்தில் வாங்க இருப்பதால், அந்த பொருளின் படம் மற்றும் விற்பவர் அது குறித்து தரும் தகவல்கள் மட்டுமே நமக்குத் தெரிய வரும். இது போதாது. வாங்க விரும்பும் பொருள் குறித்து இணையத் தளங்களுக்குச் சென்று தகவல் தேடிப் பெறவும். அவற்றை ஏற்கனவே வாங்கியவர்கள், அதன் பயன் மற்றும் நம்பகத் தன்மை குறித்து இணையத்தில் எழுதி இருப்பார்கள். அவற்றைப் படித்துப் பார்க்கவும்.பொருளின் விலை மட்டும் பார்க்காமல், வரி, அவற்றை உங்களிடம் சேர்ப்பிக்க இணைய தள விற்பனை மையம் வசூலிக்கும் ட்ரான்ஸ்போர்ட் மற்றும் பேக்கிங் கட்டணம்   போன்றவற்றையும் சேர்த்துப் பார்க்கவும்.
3. பொருள் பிடிக்காமல் போனால், அதனை மீண்டும் அந்த கடைக்காரர் எடுத்துக் கொள்வாரா? எடுத்துக் கொள்வார் எனில், அதற்கான நடைமுறை என்ன? என்பன போன்ற தகவல்களைப் பெறவும்.
4. ஆர்டர் செய்து வாங்க முடிவு செய்து, ஆன் லைனிலேயே ஆர்டர் கொடுத்தால், நீங்கள் ஆர்டர் கொடுக்கும் பக்கத்தினை எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்து வைக்கவும். உங்கள் வங்கி அட்டை எண், பணப் பரிவர்த்தனைக்குக் கொடுக்கப்படும் எண், நாள், பொருள் விலை மற்றும் பிற கட்டணங்கள் ஆகிய தகவல்கள் அனைத்தும் இருக்க வேண்டும்.
5.உங்களுடைய கிரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்டினை அடிக்கடி சோதனை செய்திடவும். நீங்கள் வாங்காத பொருளுக்கு ஏதேனும் பணம் எடுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
6. உங்கள் இல்ல மற்றும் நம்பிக்கையான அலுவலகக் கம்ப்யூட்டர் மூலமாக மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடவும். பொதுவான மையங்களில் இந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதை அறவே தவிர்க்கவும்.
7.உங்கள் பாஸ்வேர்டினைப் பாதுக்காக்கவும். மிகவும் உறுதியான பாஸ்வேர்டாக அமைத்து வைத்துக் கொள்ளவும். இதனையும், அடிக்கடி மாற்றவும்.
8.பிரபலமான கடைகளின் இணையத் தளங்கள்  போலத் தோற்றமளித்து, ஆன்லைன் வர்த்தகத்தினை மேற்கொள்ள வழி தரும் மெயில்கள் மற்றும் தளங்களை நம்பக் கூடாது.
9. ஆன்லைன் வர்த்தக இணைய தளங்களின் முகவரியில் “https”   என்ற முன்னொட்டு இருக்கிறதா எனச் சோதனை செய்திடவும். இது போல  “http ”   உடன்  “s” இணைந்து இல்லை என்றால், சற்று சிந்திக்கவும். தயங்கவும்.
10.கூடுமானவரை டெபிட் கார்டுகளை ஆன்லைன் வர்த்தகத்தில் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். கிரெடிட் கார்டுகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு உண்டு.
11. கூடுதல் சலுகைகள், அதிரடி ஆபர்கள் என மெயில்கள் வந்தால்,  சற்று நிதானிக்கவும். இதெல்லாம், உங்களை சிக்க வைத்திடும்  தூண்டில்கள். எனவே இவற்றை அலட்சியப்படுத்தவும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X