இணைய வேகத்தினை அதிகப்படுத்த
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2010
00:00

இணைய தளங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களில் வேகமாக இறங்கவில்லையா? கம்ப்யூட்டர் வாங்கிப் பழசாகிவிட்டது என்று மட்டும் எண்ணி, ஒன்றும் செய்திடாமல் இருந்துவிட வேண்டாம். கம்ப்யூட்டரின் வேகம், அதனை நாளுக்கு நாள் பயன்படுத்துகையில் ஏன் குறைகிறது என்றும், அதற்கான தீர்வுகள் என்ன என்ன என்றும், ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்திருக்கிறோம்.
இணைய வேகம் குறைய, கம்ப்யூட்டர் மட்டுமின்றி, வேறு சில விஷயங்களும் காரணமாக இருக்கலாம். அவற்றில் சிலவற்றிற்கான தீர்வுகளை இங்கு காணலாம்.
1.வெப் பிரவுசரை மாற்றுக: இன்னும் பலர் தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்பினையே பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், அந்த பிரவுசர் தொகுப்பு விண்டோஸ் சிஸ்டத்துடன் வழங்கப் படுகிறது.  ஆனால் இன்னொரு பிரவுசரைப் பயன் படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லையே! வேறு ஒரு பிரவுசர் மூலம் இணையத்தில்  நுழைந்து, தளங்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றன என்றும், அவற்றிலிருந்து பைல்கள் என்ன வேகத்தில் தரவிறக்கம் ஆகின்றன என்றும் பார்க்கலாமே!
தற்போது வந்திருக்கும் பல பிரவுசர்கள், வேகத்தினை முதன்மை அம்சமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, கூகுள் தரும் குரோம் பிரவுசரைக் கூறலாம்.  இதனுடைய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் அதிக வேகத்தினைத் தரும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுக் கிடைக்கிறது. இந்த பிரவுசரைப் பெற http://www.google.com/chrome  என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம் செல்லவும்.
2. இணைய விளம்பரங்கள் வேண்டாமே!: பல இணைய தளங்களில், விளம்பரங்கள், குறிப்பாக அனிமேஷன் படங்களுடன் காட்டப் படுகின்றன. இந்த தளங்களை டவுண்லோட் செய்கையில், இந்த விளம்பரங்களும் சேர்ந்து இறங்கி, பைலின் அளவை அதிகமாக்குகின்றன. இவற்றை நாம் வடிகட்டி விட்டால், விளம்பரங்கள் இல்லாத தளங்களை இறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்துபவராக இருந்தால், இவற்றை வடிகட்ட Flashblock add-on  என்ற எக்ஸ்டென்ஷனைப் பயன்படுத்தலாம். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசரில், Tools  மெனு சென்று, Add-ons  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Add-ons  கிடைத்தவுடன், அதில் உள்ள சர்ச் பாக்ஸில் Flashblock   என டைப் செய்திடவும். இந்த ஆட் ஆன் தளம் கிடைத்தவுடன், Add to Firefox  என்பதில் கிளிக் செய்திடவும். Flashblock  இயங்கத் தொடங்கியவுடன் பயர்பாக்ஸ் பிளாஷ் மூலம் அமைத்த எதனையும் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கவிடாது. பிளாஷ் வழி விளம்பரங்கள் இருக்கும் இடத்தில் ‘F’ என்ற எழுத்து மட்டும் காட்டப்படும். இதில் விளம்பரம் இருந்து தடுக்கப்பட்டிருந்தால், அப்படியே விட்டுவிடவும். இல்லாமல், ஏதேனும் சிறிய வீடியோ அனிமேஷனாக இருந்து, நீங்கள் அதனைப் பார்க்க விரும்பினால், இந்த எப் எழுத்து உள்ள கட்டத்தில் டபுள் கிளிக் செய்தால், பிளாஷ் வீடியோ அல்லது அனிமேஷன் லோட் ஆகும்.  இதன் மூலம் இணையப் பக்கங்கள் அதிவேகமாக டவுண்லோட் ஆவதனைப் பார்க்கலாம்.
3.மொபைல் இணையதளம் செல்க: இணைய தளங்களில், பிரித்துப் பார்க்க இயலாதவகையில் பல வகையான தகவல்கள் குப்பையாகத் தரப்பட்டுள்ளனவா? அவற்றில் உங்களுக்கானதைத் தேடி எடுப்பது சிரமமாக உள்ளதா? அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த இணைய தளத்திற்கான மொபைல் இணையதளம் உள்ளதா எனத் தேடவும்.  இப்போதெல்லாம், வழக்க மான இணைய தளங்களுக்கிணையாக, மொபைல் போன் வழி பயன்படுத்த, இத்தகைய இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுத் தரப்படுகின்றன. அவற்றில் குறைவான எண்ணிக்கையில் பைல்களுக்கான லிங்க்குகள் தரப்பட்டிருக்கும், இணைக்கப் பட்டிருக்கும். இவற்றைத் தேடி தரவிறக்கம் செய்வது எளிதாக இருக்கும். மேலும் இவற்றை டவுண்லோட் செய்திடும் முன், தளத்திலிருந்தவாறே பார்க்கவும் வசதி செய்து தரப்பட்டிருக்கும். இந்த மொபைல் தளங்களை எப்படிக் கண்டறிவது? வழக்கமான www   என்பதற்குப் பதிலாக ‘m’  என்ற எழுத்தை இவை கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, பி.பி.சி. நிறுவனத்தின் மொபைல் போன் இணைய தளத்தின் முகவரி http://m.bbc.co.uk  ஆகும். இவற்றை எப்படி அணுகுவது என்பதற்கான விவரங்களும் தரப்பட்டிருக்கும். இந்த வகை தளங்கள், சில நொடிகளில் கம்ப்யூட்டர்களில் இறங்குவதைக் காணலாம்.
4.ஆர்.எஸ்.எஸ். ரீடரைப் பயன்படுத்தவும்: ஆர்.எஸ்.எஸ். என்பது (RSS-Really Simple Syndication)   ஓர் இணைய தளம், புதிய விஷயங்களை இணைக்கும் போது, அதற்கான செய்தியைத் தந்து நம்மை நினைவூட்டும். இவற்றில் பல வேளைகளில், தகவலுக்கான தலைப்பு வரிகள் மட்டுமே இருக்கும். சில தளங்கள், புதிய தகவலை, அவை அடங்கியுள்ள கட்டுரையை மட்டும் அப்படியே தரும்.  ஆரஞ்சு நிறத்தில் ஆர்.எஸ்.எஸ். இமேஜ் ஐகான் இணைய தளம் ஒன்றில் இருந்தால், புதிய செய்திகள் வந்துள்ளன என்று பொருள். பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்கள், இந்த ஐகானை அதன் அட்ரஸ் பாரிலேயே காட்டுகின்றன. அதில் கிளிக் செய்தால், பிரவுசர் அந்த தளத்தின் ஆர்.எஸ்.எஸ். வகை செய்தியினை இறக்கிக் காட்டும்.
5. வேகப்படுத்தும் புரோகிராம்கள்: இணையத்தில் கிடைக்கும் சில புரோ கிராம்கள், உங்கள் இன்டர்நெட் தளங்கள் இறங்கு வதனையும்,  பைல்கள் தரவிறக்கம் செய்யப்படுவதனையும் வேகமாக்கும். இந்த வகையில் ஆன்ஸ்பீட் (Onspeed)  என்ற  (http://portal.onspeed.com/ பு@ராகிராம் நமக்கு உதவும். வேறு பல புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவை டெக்ஸ்ட்டை கம்ப்ரஸ் செய்து, இமேஜ் தன்மையைக் குறைத்து பைலின் அளவைக் குறைக்கின்றன. ஆனால் ஸ்ட்ரீமிங் வீடியோ போன்றவை உள்ள தளங்களில், இத்தகைய புரோகிராம்களின் பணி எடுக்காது.
6.கேஷ் மெமரியைக் காலி செய்க:  அனைத்து பிரவுசர்களும், நாம் சென்று பார்த்த தளங்கள் குறித்த தகவல்களைத் தங்கள் கேஷ் மெமரியில் வைத்துக் கொள்கின்றன. இவற்றை அவ்வப்போது காலி செய்வதனால், நம் பிரவுசரின் வேகம் குறையாது. அதே போல தற்காலிகமாகச் சேமித்து வைக்கப்படும்  (Temporary Files)  பைல்களையும் நீக்க வேண்டும்.
7.பார்க்காத தளங்களை மூடுங்கள்: சிலர் இணைய உலாவினைத் தொடங்கிப் பல தளங்களுக்குச் சென்று கொண்டே இருப்பார்கள். இதனால் பல தளங்கள் திறக்கப்பட்டு மூடப்படாமல் இருக்கும். எப்போதும் இணையத்தில் இருக்கும் ஒரு சிலர் இருபதுக்கும் மேற்பட்ட தளங்களைத் திறந்து வைத்து இயக்குவதனைப் பார்த்திருக்கிறேன்.  இவை இணைய வேகத்தினை நிச்சயம் குறைத்திடும். எனவே எப்போது ஓர் இணைய தளத்தினைப் பார்த்து முடித்து விட்டோமோ, உடனே அந்த தளத்தினை மூடுவது நல்லது. 

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
போன்னேரிசுரேஷ் - சென்னை,இந்தியா
19-டிச-201011:12:35 IST Report Abuse
போன்னேரிசுரேஷ் computerai on செய்யும்போதெல்லாம் விண்டோஸ் திறக்கமட்டேன்கிறது சிறிய restart பட்டனை அழுத்திய பின்பே திரை தோன்றுகிறது அடிக்கடி இப்படி செய்வதால் எதாவது பிரச்சனையை ஏற்படுமா ?
Rate this:
Cancel
ரிஷி AV - erode,இந்தியா
18-டிச-201008:37:22 IST Report Abuse
ரிஷி AV காஷ் மேம்மொரி கேளிர் பண்ண crt+shift+del கீ பிரஸ் பண்ணவும். இது உங்களக்கு வழி கட்டும்...
Rate this:
Cancel
அன்வர் பாஷா - புரசை.சென்னை.,இந்தியா
18-டிச-201006:46:22 IST Report Abuse
அன்வர் பாஷா கம்ப்யூட்டர் ஆசிரியருக்கு கோடி வந்தனம். எத்தனை தெரியாத விஷயங்கள் ஆசிரியர் அருகில் இருந்து கற்றுதருவதைப்போல் எளிமையாக விளக்கப்படுகின்றன. சில பேர் யாரிடமாவது கேட்டு அறிய வெட்கப்பட்டு எது எதையோ முயற்சித்து அசந்து போவார்கள். அவர்களுக்கும் மற்றும் கேட்டு அறிபவருக்கும் சேர்த்து விளக்கம் அளிக்கப்படுவதற்கு நன்றிகள் பல பல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X