கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2010
00:00

கேள்வி: இப்போது வரும் விளம்பரங்களில் புளுரே டிஸ்க்குகளை இவை இயக்கும் என அறிவிக்கப்படுகிறது. இந்த டிஸ்க்குகள் கடைகளில் கிடைக்குமா? இதன் சிறப்பு என்ன? ஏன் புளுரே என அழைக்கப்படுகிறது? -தி. மல்லிகா, நாகமலைப் புதுக்கோட்டை           
பதில்: பிளாப்பி டிஸ்க், சிடி மற்றும் டிவிடி வரிசையில் மேம்படுத்தப்பட்ட காம்பாக்ட் டிஸ்க்காக (Compact Disc CD)  இது வந்துள்ளது.   ""சி.டி''., ""டிவிடி'' என்பது போல இவற்றை ""பி.டி'' என அழைக்கின்றனர். வழக்கமான  ஒரு டிவிடியில் 4.7 கிகா பைட் தகவல்களை அடைக்கலாம். புளூ ரே டிஸ்க்குகள் 50 கிகா பைட் எனத் தொடங்குகின்றன.  இன்றைய இதன் தொழில் நுட்ப வேகத்தினைப் பார்க்கையில் இதைப் போல இரு மடங்கு மற்றும் நான்கு மடங்கு அளவில் கூட இதன் கொள்ளளவு உயரும் என எதிர்பார்க்கலாம்.  திரைப்படத் துறையில்  இந்த பி.டி. மிகவும் பயன்படும். அங்கு உருவாக்கப்படும் டிஜிட்டல் பைல்களின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்பதால், அவற்றைப் பதிய இவை உதவுகின்றன.நாமும் இவற்றை திரைப்படங்கள் போன்ற பெரிய பைல்களைப் பதிந்து கையாள இதனைப் பயன்படுத்தலாம். மற்ற டேட்டா பைல்களையும் பதியலாம். இவற்றை இதற்கென உள்ள ட்ரேயைப் பயன்படுத்தி இயக்க வேண்டும்.  புளூ ரே டிஸ்க் என ஏன் அழைக்கிறார்கள்? டிவிடியில் தகவல்களைப் படிக்க சிகப்பு கதிர்கள் பயன்படுத்தப் படுகின்றன. "பி.டி.' டிஸ்க்கில் தகவல்களைப் படிக்கப் பயன்படும் கதிர்களின் நிறம் புளூ. எனவே தான் இந்தப் பெயர்.

கேள்வி: எக்ஸெல் நான் நன்றாகவே பயன்படுத்துவேன். இப்போது திடீரென செல்லில் எந்த எண் அடித்தாலும், அது தசமஸ்தான எண்ணாக, 5க்குப் பதில் 0.05 என வருகிறது. என்ன செய்தும் மாற்ற முடியவில்லை. தவறு எங்கே உள்ளது.  -ஆ. சிவமாயன், உசிலம்பட்டி
பதில்: தவறு கம்ப்யூட்டர் பயன்படுத்தியவர் ஒருவர் மாற்றி அமைத்த செட்டிங் வழியாக வருகிறது. சரி, தவறினைச் சரி செய்வோம். எக்ஸெல் திறந்து டூல்ஸ்  (Tools)   மெனு செல்லுங்கள். அங்கு கிடைக்கும் மெனு பட்டியலில் ஆப்ஷன்ஸ்   (Options)   பிரிவு செல்லவும்.   இங்கு கிடைக்கும் டேப்களில் எடிட் (Edit)  டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் “Fixed decimal”   என்னும் ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இதற்கு மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து கிளிக் செய்திடவும். இனி நீங்கள் உள்ளிடும் எண்கள் சரியாக அமையும். 
இந்த வசதி ஏன் தரப்பட்டுள்ளது என்றால், தசம ஸ்தானத்தில் மட்டுமே எண்களை அமைக்க வேண்டும் என்கிற நிலையில் 0.08 டைப் செய்திட, இந்த ஆப்ஷனை இயக்கிவிட்டு, 8 என டைப் செய்தால் போதும். இதனையே மூன்று தசம ஸ்தானத்தில் அமைக்க இந்த “Fixed decimal”  என்பதில் டிக் செய்தால் கிடைக்கும்  எதிரே உள்ள  கட்டத்தில், எத்தனை ஸ்தானங்கள் வேண்டுமோ, அந்த எண்ணை அமைக்க வேண்டும்.

கேள்வி: டூல் டிப் என்பது என்ன? நீங்கள் ஜஸ்ட் லைக் தட் எழுதிச் செல்கிறீர்கள். விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பெற மெனுவில் எங்கு செல்ல வேண்டும். -கா. உதயராணி, கும்மிடிப் பூண்டி
பதில்: ம்..ம். இப்படியெல்லாம் குற்றம் சாட்டப்படுகிறேன். சரி, டூல் டிப் என்பது உங்களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நீங்கள் அடிக்கடி சந்திக்கும் விஷயம் தான்.   ஆனால் அதுதான் டூல் டிப் என்று பலருக்குத் தெரியாது. கம்ப்யூட்டரில் ஏதாவது ஒரு ஐட்டத்தின் அருகே மவுஸின் கர்சரைக் கொண்டு செல்கையில் சிறிய மஞ்சள் கட்டம் ஒன்று எழுந்து வரும். அதில் ஏதேனும் ஒரு தகவல் இருக்கும். அதுதான் டூல் டிப் ஆகும். மவுஸ் பாய்ண்ட்டருடன் இணைந்து செயல் படும் சிறிய கிராபிக் கட்டத் தகவலே டூல் டிப். நமக்கு கம்ப்யூட்டரின் சாதனங்களின்  பயன் பாடுகள் குறித்து தகவல் தரும் பலகைகளே இந்த டூல்டிப்கள். சில எடுத்துக் காட்டுக்களைப் பார்ப்போம்.  மானிட்டரில் பொதுவாகக் கீழாக உள்ள சிஸ்டம் டிரேயில் நேரம் காட்டும் இடத்தின் அருகே மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால் உடனே தேதியுடன் கூடிய சிறிய மஞ்சள் கட்டம் ஒன்று மேலாக வரும். இதுதான் டூல் டிப். விரைவாக புரோகிராம்களை இயக்க வேண்டி அதன் ஐகான்களை குயிக் லாஞ்ச் ஏரியாவில் வைத்திருப்போம். அந்த ஐகான் அருகே மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால் அந்த ஐகான் எந்த புரோகிராமுடன் தொடர்பு உடையது என்று தகவல் கிடைக்கும். அதுவே டூல் டிப். இது போல பல டூல் டிப்களை கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நமக்கு அளிக்கிறது. சரியா, சகோதரி.

கேள்வி: வெப் சைட்டிலிருந்து டெக்ஸ்ட் ஒன்றைக் காப்பி செய்து வேர்ட் பைலில் பேஸ்ட் செய்கையில், வெப் டெக்ஸ்ட்டில் உள்ள பார்மட்டிங் இல்லாமல் தேவைப்படுகிறது. இதனை எப்படி தவிர்ப்பது? அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்வது?  -எஸ். முத்துக் குமார்,  விழுப்புரம்
பதில்: இணையப் பக்கத்திலிருந்து காப்பி செய்யப் பட்ட டெக்ஸ்ட்டை, வேர்டில் பேஸ்ட் செய்திடுகையில், Edit > Paste Special  என்ற கட்டளையைக் கிளிக் செய்திடுங்கள். இங்கு Unformatted text  என்ற ஒரு பிரிவு கிடைக்கும்.  இதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், நீங்கள் விரும்பியபடி டெக்ஸ்ட் பார்மட்டிங் எதுவும் இல்லாமல் பேஸ்ட் ஆகும்.

கேள்வி: என்னுடைய இன்டர்நெட் கனக்ஷன் வழி கிடைக்கும் வேகம் சில நேரங்களில் யு-ட்யூப் இணைய தளம் பார்ப்பதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இதனை எப்படி நிவர்த்தி செய்திடலாம்? -ஆ. சிதம்பர நாதன், மேலூர்.
பதில்: மெதுவாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பிற்கேற்ப, யு-ட்யூப் தளம் பார்க்கும் வழியில் செட்டிங்ஸ் மாற்றி அமைக்கலாம். முதலில் யு-ட்யூப் டாட் காம்  (www.youtube.com)  செல்லவும். பின்னர் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய்திடவும். அக்கவுண்ட் இல்லை என்றால் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவும். மிக எளிதாகவும் வேகமாகவும் அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்திவிடலாம்.  இதற்கு தளத்தின் வலது மேல் மூலையில் உள்ள  Create an Account  என்பதில் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் விண்டோவில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் கொடுத்து அக்கவுண்ட் ஒன்றை உங்களுக்கென உருவாக்கவும்.  பின்னர் உங்கள் யூசர் நேம்  பயன் படுத்திச் சென்று உங்கள் அக்கவுண்ட்டில் (Account)  கிளிக் செய்திடவும். இதனை அடுத்து கிடைக்கும் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், Playback Setup  என்பதில் கிளிக் செய்திடவும். வீடியோ பிளே பேக் குவாலிட்டி என்பதன் கீழ்,  “I have a slow connection. Never play higher quality video” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். தொடந்து  Save changes என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி, யு-ட்யூப் தளம், நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவினை, உங்களிடம் இருப்பது சற்று வேகம் குறைந்த இன்டர்நெட் இணைப்பு என்பதற்கேற்ற வகையில் இயக்கும்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துகிறேன். இதில் டேப்களுக்கு இடையே நகர்ந்து செல்ல, ஷார்ட் கட் கீகள் உண்டா? அல்லது ஆட் ஆன் மூலம் ஏற்படுத்தலாமா? -எம். மேரி புஷ்பா, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
பதில்: உங்கள் விருப்பப்படியே ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து, டேப்களுக்கிடையே செல்ல ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து, https://addons. mozilla.org/enUS/firefox/addon/220875/ என்ற முகவரி யில் உள்ள தளம் செல்லுங்கள். இங்கு MoveTabs  என்ற ஆட் ஆன்  தொகுப்பு கிடைக்கும். இதனை இணைக்கவும். பின்னர் Control + Shift + Home  கீகளை அழுத்தினால்  இடது புறம் உள்ள இறுதி டேப் செல்வீர்கள். Control + Shift + End  கீகளை அழுத்தினால்  வலது புறம் உள்ள இறுதி டேப் செல்வீர்கள். Control + Shift+ Page Up  கீகளை அழுத்தினால்  இடது புறம் ஒரு  டேப் நகர்வீர்கள். Control + Shift+ Page Down கீகளை அழுத்தினால்  வலது புறம் ஒரு  டேப் நகர்வீர்கள்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் வழக்கமான பக்க எண்களான 1,2,3 என்பதற்குப் பதிலாக,  i,ii,iii  என அமைக்க விரும்புகிறேன். இதற்கான செட்டிங் எங்கு உள்ளது? எப்படி அமைப்பது? -டி. சூசைராஜ், மதுரை
பதில்: எளிதாக அமைக்கலாம். டாகுமெண்ட்டில் பக்க எண் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு செல்லவும். வியூ மெனுவிலிருந்து Header and Footer  டயலாக் பாக்ஸைப் பெறவும். இதில் கிடைக்கும் Format Page Number  ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு Page Number Format  டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் கிடைக்கும் பார்மட்களிலிருந்து நீங்கள் விரும்பும் பார்மட்டைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஓகே அழுத்தி டயலாக் பாக்ஸ்களை மூடவும். மீண்டும் மாற்றும் வரை இந்த பார்மட்டிலேயே பக்க எண்கள் அமைக்கப்படும்.

கேள்வி: நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனம், நாம் செல்லும் தளங்களின் அனைத்து விபரங்களையும் பதிந்து வைத்துத் தொடர்ந்து கண்காணித்து வருமா? -கே. மேகநாதன், திருவேற்காடு.
பதில்: உலக அளவிலான கம்ப்யூட்டர் நெட்வொர்க்கினை உங்களுடன் இணைக்கும் பாலமாக உங்கள் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் செயல்படுகிறார். நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தள வேண்டுகோள் மற்றும் அனுப்பும் இமெயில் அந்த நிறுவன சர்வர்களின் வழியேதான் செல்கின்றன. எனவே இவற்றை, இந்த நிறுவனத்தால் பதிந்து வைத்துக் கண்காணிக்க முடியும். ஆனால் அப்படி செயல்படுவது என்றால், அனைத்து தகவல்களையும் சேவ் செய்து பாதுகாத்துக் கண்காணிப்பது என்றால், அதற்கு சாதனச் செலவுகள் மிக அதிகமாகும். எனவே சந்தேகப்படும் நபர்கள் குறித்த தகவல்கள் மட்டும், முறையான அரசு வேண்டுகோள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். 

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சித்ரா - மதுரை,இந்தியா
19-டிச-201019:53:28 IST Report Abuse
சித்ரா i was download skype . But when i start to use this i received an error msg as "Failed to get proc address for D3DPERF_setoptions(d3d9.dll)"... how to resolve this???
Rate this:
Cancel
ஜெய் - கோயம்புத்தூர்,இந்தியா
19-டிச-201015:44:45 IST Report Abuse
ஜெய் கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துகிறேன். இதில் டேப்களுக்கு இடையே நகர்ந்து செல்ல, ஷார்ட் கட் கீகள் உண்டா? அல்லது ஆட் ஆன் மூலம் ஏற்படுத்தலாமா? நீங்க கேட்ட கேள்விக்கு பதில் இதோ: "ctrl+pagedown and ctrl+pageup" these keys combination will helps you to move you between the tabs in Firefox browser. Thanks, Jai
Rate this:
Cancel
போன்னேரிசுரேஷ் - சென்னைபொன்னேரி,இந்தியா
19-டிச-201010:58:57 IST Report Abuse
போன்னேரிசுரேஷ் நான் விண்டோஸ் xp கணினியில் கைபேசியை இணைத்து இணையதளத்தை பயன்படுத்துகிறேன் இதில் streaming வீடியோ காட்சிகளையும் ,இணையதளங்களை வேகமாகவும் பார்க்க முடியவில்லை...என்ன செய்வது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X