கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் வரும் இமேஜ் வியூவர் எனக்குப் பிடிக்கவில்லை. இதைக் காட்டிலும் சிறப்பாக இயங்கும் வேறு ஒரு இமேஜ் புரோகிராம் ஒன்றினைப் பரிந்துரை செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். பழைய விண்டோஸ் போட்டோ வியூவர் நன்றாக இருந்தது. அதனைத் திரும்பப் பெற்று, இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியுமா?
என். சுதந்திரா ராணி, சேலம்.
பதில்
: விண்டோஸ் 10 ல் இயங்கும் Photos app for Windows 10 புதிய வசதிகளுடன் மிக அருமையாகச் செயல்படும் செயலி. இது தானாகவே, போட்டோக்களை பகுத்து, ஆல்பங்களாகக் காட்டும். உங்களுடைய போட்டோக்களில் நகாசு வேலைகளை மேற்கொள்ள எளிமையான டூல்களையும் கொண்டுள்ளது. ஆனால், நீங்கள் பழைய விண்டோஸ் போட்டோ வியூவர் புரோகிராமினை (Windows Photo Viewer program) விரும்பினால், அதனைப் பெறலாம். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை, விண்டோஸ் 7 அல்லது8.1 லிருந்து, இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு உயர்த்தி இருந்தால், அந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் தான் இருக்கும். தேடிப் பார்த்து பயன்படுத்தவும். இதனை உறுதி செய்திட ஒரு வழி சொல்கிறேன். ஏதேனும் போட்டோ பைல் ஒன்றின் பெயர் மீது, ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில் Open with என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் காட்டப்படும் புரோகிராம்களில் ஒன்றாக Windows Photo Viewer உள்ளதா எனப் பார்க்கவும். இருந்தால், அதிலேயே கிளிக் செய்து புரோகிராமினைப் பயன்படுத்தலாம். Windows 10 Settings சென்று, அதில் கிடைக்கும் சிஸ்டம் ஏரியாவில் இதனைக் காணலாம். மேலே குறிப்பிட்டது போல புரோகிராம் உள்ளதா எனச் சோதனை செய்திடுகையில், விண்டோஸ் போட்டோ வியூவர் புரோகிராமினை, மாறா நிலையில் போட்டோக்களைக் காணப் பயன்படுத்தும் புரோகிராமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
நீங்கள் கட்டணம் செலுத்தி, விண்டோஸ் 10 வாங்கி இன்ஸ்டால் செய்திருந்தால், பழைய புரோகிராமினைப் பெறுவது சற்று சிரமமான செயல். TenForums.com என்ற தளத்தில் இதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. ஆனால், விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சில மாற்றங்களைக் கவனமாக மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதால், இதனை நான் பரிந்துரைக்கத் தயங்குகிறேன்.
விண்டோஸ் அப்ளிகேஷன் ஸ்டோர் (Windows app store) சென்றால், இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களை, மைக்ரோசாப்ட் வைத்துள்ளதைக் காணலாம். Fhotoroom மற்றும் Adobe Photoshop Express ஆகியவை இலவசமாகக் கிடைக்கின்றன. பெற்று பயன்படுத்தலாம். போட்டோக்களைப் பார்த்து ரசிக்க, சில எளிய வேலைகளை மட்டும் மேற்கொள்ள XnView, Imagine Picture Viewer, IrfanView மற்றும் FastStone Image Viewer ஆகிய புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.

கேள்வி: நான் எழுபது வயதைக் கடந்தவன். பெர்சனல் கம்ப்யூட்டரைத் தகவல் தொடர்புக்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும் பயன்படுத்துபவன். என்னுடைய பல சந்தேகங்களை, கம்ப்யூட்டர் மலர் தொடர்ந்து தீர்த்து வழி காட்டி வருகிறது. மிக்க நன்றி. அண்மையில் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறினேன். நான் பொழுது போக விளையாடும், எனக்கு மிகப் பிடித்த “Freecell” மற்றும் “Mahjong”. ஆகிய இரண்டு கேம்ஸ் இப்போது கம்ப்யூட்டரில் காணப்படவில்லை. தயவு செய்து இவற்றைப் பெறும் வழிகளைக் காட்டவும்.
கே. தட்சிணாமூர்த்தி, பேராசிரியர் (ஓய்வு), மதுரை.
பதில்:
தங்கள் பாராட்டுக்கு நன்றி. ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்தில், சிஸ்டத்துடன் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்ஸ் விளையாட்டுகள், விண் 10க்கு மேம்படுத்தப்படுகையில் மறைந்து போகும் என நான் முன்பே கட்டுரையில் எழுதி இருந்தேன். அவை காணாமல் தான் போகும். ஆனால், அவற்றை மீண்டும் பெற்றுவிடலாம். உங்களுடைய விண்டோஸ் 10 கம்ப்யூட்டர் மூலம், விண்டோஸ் ஸ்டோர் செல்லவும். இதற்கான விண்டோஸ் ஸ்டோர் ஐகான் உங்கள் கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில் இருக்கும். ஷாப்பிங் பேக் மாதிரி இது காட்டப்படும். இதில் கிளிக் செய்திடவும். அல்லது ஸ்டார்ட் மெனுவில் தேடல் கட்டத்தில் தேடிப் பெறலாம். ஸ்டோர் திறக்கப்பட்டவுடன், உங்களுக்குத் தேவையான கேம்ஸ் உள்ளதா எனத் தேடிப் பார்க்கலாம். Mahjong மற்றும் Free Cell ஆகியவற்றின் இலவச பதிப்பினைக் காணலாம். இவை இலவசம் தான் என்பதை, அந்த கேம்ஸ் தலைப்பிலேயே அறியலாம். Free பட்டனில் கிளிக் செய்து, அவற்றை டவுண்லோட் செய்திடவும். ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்திலேயே அவை டவுண்லோட் ஆகி, கம்ப்யூட்டரில் பதியப்பட்டுவிடும். இவை, அண்மையில் இணைக்கப்பட்ட புரோகிராம் பட்டியலில் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். அல்லது All Programs என்ற பட்டியலிலும் காணலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் கேண்டி க்ரஷ் சாகா கேம் தரப்பட்டிருப்பது மிகவும் வசதியாக உள்ளது. இந்த கேம் அப்படியே இருக்குமா? அல்லது நம்மைக் கேட்காமலேயே மேம்படுத்தப்படுமா? இதனைத் தரும் கிங் நிறுவனம், அப்கிரேட் தருமா? அல்லது விண்டோஸ் சிஸ்டம் தருமா?
என். முகேஷ் குமார், சென்னை.
பதில்
: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன், கேண்டி க்ரஷ் சாகா கேம்ஸ் தரப்பட்டிருப்பது பலரைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில், உங்களின் கேள்வி இன்னும் சில தகவல்களைக் கொண்டு வருகிறது. இந்த கேமைத் தயாரித்து வழங்கும் கிங் (King) நிறுவனம் தான், இந்த கேம் சார்ந்த அப்டேட் பைல்களைத் தயாரித்து வழங்கும். எடுத்துக் காட்டாக, சென்ற வாரம், பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் விண்டோஸ் மொபைல்களில் இயங்கும் கேண்டி க்ரஷ் ஜெல்லி சாகா என்ற விளையாட்டினை, கிங் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. புதிய கதைப் பிரிவு ஒன்றினை 20 லெவல்களுடன் வழங்கியுள்ளது. புதிய எபிசோடின் பெயர் Marzipan Meadow!. ஜெல்லி கேமில் தற்போது 280 லெவல்கள் உள்ளன. இந்த விளையாட்டு மற்றும் அப்டேட் பைல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. https://www.microsoft.com/en-us/store/apps/app/ என்ற தளம் சென்று மேலும் தகவல்களைப் பெறலாம்.

கேள்வி: பேஸ்புக் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், திரை கீழாக மற்றவர்கள் அனுப்பும் செய்திகள் கட்டங்களில் காட்டப்படுகின்றன. சிலர் குழுவினை அமைத்து, அதில் என் பெயரை இணைத்துவிடுகின்றனர். இவர்கள் எந்தப் பயனும் இன்றி, காலை, மாலை வணக்கங்கள் சொல்வது, கடவுள் படம் போடுவது போன்ற தகவல்கள் கட்டங்களில் எழுகின்றன. இவற்றை நான் விரும்பவில்லை. எப்படி தடுப்பது?
ஆ. சிந்தா செல்வராஜ், கோவை.
பதில்:
உங்களுக்குத் தனியாகவும், குழுவாகவும் அனுப்பப்படும் மெசேஜ் கட்டங்களில் கிடைக்கும் உரையாடல் செய்தி உங்களுக்குப் பிடிக்கவில்லை. இதனை நிறுத்துவது எளிது. இந்த கட்டம் பிரவுசர் விண்டோவில், கீழாக வலது பக்கம் காட்டப்படும். அதில் உள்ள சிறிய கியர் ஐகானைக் கிளிக் செய்திடவும். இந்தக் கட்டத்தில் Advanced Settings என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் கட்டத்தில், யார் யாரிடமிருந்து மெசேஜ் வேண்டாம் என்று நீங்கள் தேர்ந்தெடுத்து தடுக்கலாம். அல்லது மொத்தமாக யாரிடமிருந்தும் மேசேஜ் வேண்டாம் என்றும் தடுக்கலாம். இந்நிலையில், உங்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்கள் உங்களுக்கான Inbox செல்லும். அதில் சென்று நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். பின் நாளில் நீங்கள் மெசேஜ் கட்டமும், மெசேஜ்களும் வேண்டும் என்று எண்ணினால், இதே போலச் சென்று, அரட்டை கட்டத்தினை உயிர்ப்பித்து, உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்.

கேள்வி: எனக்கு கூகுள் மின் அஞ்சல் அக்கவுண்ட் உள்ளது. சில வேளைகளில், என் நண்பர்கள் அனுப்பும் அஞ்சல்கள் வருவதில்லை. அவர்கள் தொலைபேசியில் செய்தி தெரிவித்த பின்னரே தெரிகிறது. இதனை எப்படி கூகுள் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துவது? இந்தியாவில் அதற்கு அலுவலகங்கள் இருந்தால், முகவரி மற்றும் தொடர்பு எண் தரவும்.
கே. எஸ். முனிரத்தினம், திருப்பூர்.
பதில்:
உறுதியாக உங்களுக்கு வரும் கூகுள் அஞ்சல்கள் தவறுகின்றன என்று தெரிந்தால், கீழ்க்காணும் தளம்செல்லவும். https://support.google.com/mail/contact/missingemails?rd=1
இங்கு தரப்படும், கேட்கப்படும் தகவல்களைச் சரியாகத் தரவும். உங்கள் பிரச்னையை விளக்கவும். பொதுவான பிரச்னை என்றால், https://support.google.com/mail/#topic=3394144 என்ற தளம் சென்று, பிரச்னை குறித்து எழுதவும். கூகுள் நிறுவனத்தின் பிரதிநிதியிடம் தொடர்பு கொண்டு பேசுவது எந்த பயனையும் தராது என்று நினைக்கிறேன். இந்தியாவில் கீழ்க்காணும் இடங்களில் கூகுள் நிறுவனத்திற்கு அலுவலகங்கள் உள்ளன. பெங்களூர், தொலைபேசி எண் 80-67218000. குர்குவான் 12-44512900. ஹைதராபாத் 40-6619-3000. மும்பை 22-6611-7150.

கேள்வி: என் கம்ப்யூட்டரில், எக்ஸெல் 2003 பயன்படுத்துகிறேன். இதில் அனைத்து ஒர்க் புக்குகளுக்கும், தானாகவே பேக் அப் பைல்கள் உருவாகின்றன. இது எனக்குத் தேவை இல்லை. நான் விரும்பும் ஒர்க்புக்கிற்கு மட்டும், பேக் அப் பைலை உருவாக்கி வைக்க முடியுமா? அதற்கான வழி முறை என்ன?
ஆ. கலைச் செல்வி, திருமங்கலம்.
பதில்:
எக்ஸெல் செயலியில் தானாக பேக் அப் பைல் உருவாகும் வகையில் செட் செய்திடும் வாய்ப்புகள் உள்ளன. இது உங்களுக்கு தேவை இல்லை எனில் நிறுத்தலாம். அல்லது நீங்கள் விரும்பும் வகையில், கட்டுப்படுத்த விரும்பினால், அந்த வழியையும் மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட ஓர் ஒர்க் புக்கிற்கு, பேக் அப் தேவை இல்லை என்றால், கீழ்க்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைக் கையாளவும்.
1. Save As டயலாக் பாக்ஸைத் திறக்கவும். இதற்கு எளிதான வழி எப் 12 கீயை அழுத்துவதுதான்.
2. வலது கீழ் புற மூலையில் Tools என்பதில் கிளிக் செய்திடவும். இது சேவ் பட்டன் அருகே இருப்பதைக் காணலாம். இங்கு எக்ஸெல் செயலி, ஒரு கீழ்விரி மெனுவினைக் கொடுக்கும்.
3. இதில் General Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது General Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. இங்கு Always Create Backup என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
இதனை அமைத்த பின்னர், பேக் அப் கிடைக்காது என்பதால், ஒர்க் புக் அமைக்கும்போது தொடர்ந்து, அவ்வப்போது அதனை சேவ் செய்திட வேண்டும்.
ஒன்றை நீங்கள் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். தானாக பேக் அப் உருவாவது நாம் உருவாக்கும் பைல்களுக்கு நல்லது. AutoRecover என்று ஒரு டூல் உண்டு. அதன் தன்மை வேறு. நீங்களாக ஒரு பைலை, கீ அழுத்தி சேவ் செய்திடும் முன் ("hard saves,"), கம்ப்யூட்டருக்கான மின் சக்தி நிறுத்தப்பட்டால், தற்காலிகமாக தகவல்கள் சேவ் செய்திடுவதற்கும், ஹார்ட் சேவ் செய்திடுவதற்குமான இடையே உள்ள டேட்டாவினை, ஆட்டோ ரெகவர் மூலம் மீளப் பெற்றுவிடலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
c5kothawalchavadips - chennai,இந்தியா
05-ஜூன்-201611:16:58 IST Report Abuse
c5kothawalchavadips சார் வணக்கம் நான் காவல்துறையில் பணியாற்றுகிறேன் எங்கல்துறையில் லினக்ஸ் ஒபெரடிங் சிஸ்டம் பயன்பாட்டில் உள்ளது இதில் ஓபன் ஆபீசில் சக்கள் பாரதி என்ற தமிழ் பாண்டில் டாகுமென்ட் பதிவு செய்வதில் கீக்கள் சிரமாம உள்ளது mcl mangai, vaidehi ஆகிய பொன்ட்களில் உள்ளது போல கீக்களை அமைக்க உதவுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X