விண்டோஸ் டிபண்டர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
00:00

விண்டோஸ் இயக்க முறைமையில், அதன் இயக்கத்தினைப் பாதுகாக்கும் வகையில் தரப்பட்ட செயலியே 'விண்டோஸ் டிபண்டர்'. நம் கம்ப்யூட்டருக்குள், நமக்குத் தெரியாமல் நுழைந்து நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் புரோகிராம்களின் வருகையையும், செயல்பாட்டினையும் கண்காணிக்கும் புரோகிராம், விண்டோஸ் டிபண்டர். இந்த புரோகிராம், விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்துத் தரப்பட்டது.விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10ல், விண்டோஸ் டிபண்டர் செயலி, மால்வேர் புரோகிராம்களையும் தடுக்கும் வகையில் விரிவு படுத்தப்பட்டுத் தரப்பட்டது. ஆனால், நார்டன் அல்லது மெக் அபி போன்ற ஆண்ட்டி வைரஸ் செயலிகளைச் செயல்படுத்துகையில், விண்டோஸ் டிபண்டர் சரியாகவும் முழுமையாகவும் செயல்படவில்லை. மேலும், ஆண்ட்டி வைரஸ் செயலியை இன்ஸ்டால் செய்கையில், விண்டோஸ் டிபண்டர் செயலியின் இயக்கத்தினை நிறுத்தி வைக்குமாறு தகவல் காட்டப்பட வேண்டும். அவ்வாறு செய்தி வருகையில், நாம் விண்டோஸ் டிபண்டரின் இயக்கத்தினை நிறுத்த இசைவு தெரிவிக்கிறோம். ஆனால், பின்னர், ஆண்ட்டி வைரஸ் செயலியை நிறுத்துகையில், விண்டோஸ் டிபண்டர் தானாக இயங்கத் தொடங்க வேண்டும். அது நடப்பதில்லை. நாமாகத்தான் அதனை இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நாம் மறந்துவிட்டால், கம்ப்யூட்டர் எந்த பாதுகாப்பும் இன்றி இயங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, விண்டோஸ் டிபன்டர் செயலியைச் செயல்படுத்தவும், வேண்டும்போது நிறுத்தி வைக்கவும் வழி ஒன்றினைக் கண்டறிய வேண்டும். அதனை இங்கு பார்க்கலாம்.முதலில் விண்டோஸ் டிபண்டர் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதை எப்படி அறிவது எனப் பார்க்கலாம். இதனை அறிய, டாஸ்க் பாரில், நோட்டிபிகேஷன் ஏரியாவைப் பார்க்கவும். இது நேரம் காட்டப்படும் இடத்திற்கும், டாஸ்க்பாரின் வலது முனை முடிவிற்கும் இடையே இருக்கும். இங்கு கோட்டை ஒன்றின் தோற்றத்தில் ஐகான் உள்ளதா எனப் பார்க்கவும். சில வேளைகளில், இது மறைத்துவைக்கப்பட்டுள்ள ஐகான்களுடன் இடம் பெற்று அமைந்திருக்கலாம். எனவே, மேல் நோக்கிய அம்புக்குறியில் கிளிக் செய்து, உள்ளே பார்க்கவும். குறிப்பிட்ட ஐகான் அங்கு அதன் மீது எக்ஸ் குறி அடையாளம் இல்லாமல் இருந்தால், டிபண்டர் செயலி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள். எனவே, அதனை இயக்க நீங்கள் எந்த செயல்பாட்டினையும் எடுக்க வேண்டாம். அங்கே இல்லை என்றாலோ, இயங்கிக் கொண்டிருப்பதனை நிறுத்த வேண்டும் என்றால் கீழே தரப்பட்டுள்ள குறிப்புகளைப் படிக்கவும்.இதன் இயக்கத்தினை எப்படித் தொடங்கச் செய்வது எனப் பார்க்கலாம். இதனைத் தொடங்க, ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 8 அல்லது விண் 10 என்றால், ஸ்டார்ட் ஸ்கிரீனில் Defender என டைப் செய்திடவும். சர்ச் பார் பெற, விண்டோஸ் கீயுடன் Q அழுத்தவும். இந்த ஷார்ட் கட் கீ, உங்கள் கம்ப்யூட்டரில், தேடல் இயக்கத்தைத் தொடங்கி வைக்கும். தேடல் முடிவுகளின் பட்டியலில், Windows Defender முதல் இடம் பெற்றிருக்கும். விண்டோஸ் டிபண்டர் செயலியை இயக்க, இதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் டிபண்டர் இயங்கிக் கொண்டிருந்தால், நேராக, டிபண்டரின் டேஷ் போர்ட் உங்களுக்குக் காட்டப்படும். செயலி இயக்கத்தில் இல்லை என்றால், உங்களுக்கு ஒரு செய்தி கிடைக்கும். : “this application has been turned off and isn't monitoring your computer” என்று காட்டப்படும். இந்த செய்தி காட்டப்பட்டால், ஸ்டார்ட் மெனுவில் “Action Center” என்பதனைத் தேடவும். தேடி அதில் கிளிக் செய்து திறக்கவும். “Action Center” சென்றவுடன், அதில் உள்ள Security டேப்பில் கிளிக் செய்து, எந்த புரோகிராம், ஸ்பைவேர் மற்றும் தேவையில்லாத சாப்ட்வேர் செயலிகளிடமிருந்து கம்ப்யூட்டரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதனைக் கண்டறியவும். அதில் காட்டப்படும் புரோகிராமிற்குப் பதிலாக, புதியதாக டிபண்டர் செயலியை அமைப்பதாக இருந்தால், கண்ட்ரோல் பேனல் வழியாக, ஏற்கனவே உள்ள ஆண்ட்டி வைரஸ் அல்லது ஸ்பைவேர் புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனைக் கண்ட்ரோல் பேனல் சென்று மேற்கொள்ளலாம். விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இது சற்று வித்தியாசமாக உள்ளது. இதில், கண்ட்ரோல் பேனலைத் திறக்க வேண்டும். Settings அப்ளிகேஷனைத் திறக்க வேண்டியதில்லை. கண்ட்ரோல் பேனலில் System and Security > Security and Maintenance எனச் செல்ல வேண்டும். இங்கு அதே தலைப்பில், ('Spyware and unwanted software protection') நீங்கள் விண்டோஸ் டிபண்டரைத் தேர்ந்தெடுக்க முடியும். இதனைத் திறக்கும் முன், மற்ற ஆண்ட்டி வைரஸ் செயலிகளை, சிஸ்டத்திலிருந்து நீக்கியதை உறுதி செய்திட வேண்டும். ஏற்கனவே இருந்த ஆண்ட்டி ஸ்பைவேர் அல்லது ஆண்ட்டி வைரஸ் செயலிகள் அனைத்தையும் நீக்கிவிட்டதனால், மீண்டும் ஸ்டார்ட் மெனு சென்று, “Defender” என டைப் செய்திடவும். டிபண்டர் செயலியின் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தால், அது செய்தியாகக் காட்டப்படும். அத்துடன் “Click here to turn it on” என்ற லிங்க் காட்டப்படும். அதில் கிளிக் செய்து, டிபண்டர் செயலியை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.உங்கள் கம்ப்யூட்டர் ஏற்கனவே பாதுகாப்பு வளையத்திற்குள் இல்லை என்றால், உங்களுக்கு விண்டோஸ் டிபண்டர் டேஷ் போர்ட் காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் டிபண்டர், அண்மைக் காலத்தில் அப்டேட் செய்யப்படாததாக இருக்கலாம். அந்நிலையில், அதனை முதலில் மேம்படுத்த வேண்டும். அதில் தரப்பட்டுள்ள Updates பட்டனை அழுத்தி, அண்மைக் காலத்தில் கொடுக்கப்பட்டுள்ள அப்டேட் பைல்களை இன்ஸ்டால் செய்திடவும். அனைத்து அப்டேட் பைல்களும் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், பச்சை நிறத்தில் ஒரு நீளக் கட்டம் ஒன்று காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டரை விண்டோஸ் டிபண்டர் பாதுகாக்கத் தயாராகி உள்ளது என்று பொருள். இங்கு கிடைக்கும் Tools லிங்க்கில் கிளிக் செய்து, பின்னர், இடதுபுறப் பிரிவில் உள்ள Realtime protection என்பதில் கிளிக் செய்தால், கூடுதலாகச் சில ஆப்ஷன்கள் தரப்பட்டு, அவற்றிற்கான பைல்களைத் தரவிறக்கம் செய்திட லிங்க்குகள் கிடைக்கும். இவற்றில் பெரும்பாலானவை நமக்குக் கூடுதல் பாதுகாப்பு தருவதற்கென்று அமைக்கப்பட்டவை. எனவே இவற்றை இன்ஸ்டால் செய்து, விண்டோஸ் டிபண்டரை இயக்குவதே நல்லது.இனி, இயங்கிக் கொண்டிருக்கும் விண்டோஸ் டிபண்டரின் இயக்கத்தினை நிறுத்துவது எப்படி எனப் பார்க்கலாம். ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, “Defender” எனத் தேடல் கட்டத்தில் டைப் செய்திடவும். கிடைக்கும் முடிவுகளில், விண்டோஸ் டிபண்டர் காட்டப்படும். அதில் கிளிக் செய்தால், உடன் விண்டோஸ் டிபண்டர் செயலியின் டேஷ் போர்டுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.விண்டோஸ் 7,8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், Tools மெனு செல்லவும். பின்னர், Options என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, இடதுபுறம் உள்ள Administrator என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து, 'Use this program' என்ற இடத்தில் உள்ள பாக்ஸில், டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். விண்டோஸ் 10 இயக்கத்தில், இந்த ஏற்பாட்டினை நேரடியாக மேற்கொள்ளலாம். புரோகிராமினைத் திறந்தவுடன், டேஷ் போர்ட் பிரிவினைப் பார்க்கலாம். இதற்கு, Settings > Update & Security > Windows Defender எனவும் செல்லலாம். இப்போது Realtime protection என்பதில், அமைப்பினை On என்ற நிலையிலிருந்து Off என்ற நிலைக்கு மாற்றலாம். இது ஒரு Toggle Switch போலச் செயல்படும். க்ளவ்ட் அடிப்படையிலும், விண்டோஸ் பாதுகாப்பு நிலை ஒன்று தரப்பட்டு வரும். அதனையும் நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டால், நிறுத்தலாம். ஆனால், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் கம்ப்யூட்டரில், ஆண்ட்டி வைரஸ் அல்லது ஆண்ட்டி ஸ்பைவேர் செயலிகள் இல்லை என்றால், விண்டோஸ் டிபண்டர் நிறுத்தப்பட்ட நிலையில், கம்ப்யூட்டர் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கும். ஹேக்கர்களுக்கு இது நல்ல வாய்ப்பினைத் தரும். உங்கள் கம்ப்யூட்டர் அவர்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். எனவே, கவனமாக டிபண்டர் செயலியின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X