கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
00:00

கேள்வி: திடீரென என் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை. என்ன செய்தாலும், மீண்டும் லாக் இன் காட்சி திரை காட்டப்படுகிறது. என் கணக்கு பெயர் மற்றும் பாஸ்வேர்டினைச் சரியாகத்தான் இன்புட் செய்து இயக்குகிறேன். இருப்பினும் கணக்கைத் திறக்க இயலவில்லை. இதற்கான காரணத்தையும், தீர்வையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.என். வேணுகோபால், புதுச்சேரி.பதில்: பேஸ்புக்கில் பயனாளர்களைச் சிக்க வைத்து, அவர்கள் கணக்கில் நுழையாத வகையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் ஸ்பேம் ஒன்று சுழற்சியில் உள்ளது. இதன் காரணமாக நீங்கள் தரும் நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம். மேலும் சில வாசகர்களும் இது போல எழுதியுள்ளனர். இது போல ஏற்படுகையில் என்ன செய்திட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம். முதலில் www.facebook.com தளத்திற்குச் செல்லவும். நீங்கள் நுழைய முடியவில்லை என்றால், லாக் இன் திரை தொடர்ந்து காட்டப்படும். மேல் வலது பக்கத்தில், லாக் இன் செய்வதற்கான கட்டங்கள் இருக்கும். இந்த உள்ளீடு கட்டங்கள் கீழாக, வெளிர் நீல வண்ணத்தில், “Forgot account” என இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். உடன், நீங்கள் ஒரு புதிய திரைக் காட்சிக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டுடன் தொடர்புள்ள மின் அஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்திட கட்டங்கள் இருக்கும். இந்த தகவல்களை உள்ளீடு செய்து, Search என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் பாஸ்வேர்டை மீண்டும் அமைத்திட வாய்ப்பு தரப்படும். இந்த வாய்ப்பு நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த மின் அஞ்சல் வழியாகச் சரி வழங்கப்படும். உங்கள் அஞ்சல் முகவரிக்கு ஒரு குறியீட்டு எண் அனுப்பப்படும். அல்லது தொலைபேசியினை அமைத்திருந்தால், குறிப்பிட்ட தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். வழியாக அந்த எண் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் யூசர் நேமிற்கு உரிய பாஸ்வேர்டினை மாற்றி அமைத்துக் கொண்டு தொடர்ந்து பயன்படுத்தலாம்.இது போன்ற சிக்கலான நிகழ்வுகளிலிருந்து மீள, பேஸ்புக் அக்கவுண்ட்டிற்கான மின் அஞ்சல் முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணை அவ்வப்போது சரியாக உள்ளதா என அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
கேள்வி: வரும் ஜூலை 29 வரை மட்டுமே, விண்டோஸ் 10 இலவசம் என்பதால், இந்த ஜூன் மாதம், விண் 10க்கு மாற இருக்கிறேன். தற்போது விண்டோஸ் 7 மற்றும் எம்.எஸ். ஆபீஸ் 2007 பயன்படுத்தி வருகிறேன். விண் 10க்கு மாறிய பின்னர், எம்.எஸ். ஆபீஸ் மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? அதற்கு என்னிடம் டிஸ்க் இல்லை. என்ன செய்திடலாம்?ஆர். சந்திரா பார்த்திபன், உடுமலை.பதில்: இது குறித்து ஏற்கனவே, கேள்வி பதில் பகுதியில் எழுதி இருக்கிறேன். விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பைல்கள் வழியாக உங்கள் கம்ப்யூட்டரில் அமைக்கப்படும். அப்போது, நீங்கள் தற்போது கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்களும், விண்டோஸ் 10ல் இயங்கும்படி அமைக்கப்படும். சில புரோகிராம்கள் மட்டும் கிடைக்காது. அவை எவை என்று ஏற்கனவே இப்பகுதியிலும், கட்டுரைகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு மாறாக, எந்தப் புரோகிராம்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எம்.எஸ். ஆபீஸ் புரோகிராமினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை.உங்கள் பைல்களைப் பொறுத்தவரை, அனைத்தும் மீண்டும் அப்படியே கிடைக்கும். இருந்தாலும், மிக மிக முக்கிய பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
கேள்வி: சென்ற மாத இறுதியில் நான் விண்டோஸ் 10 க்கு மேம்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர், சில சிக்கல்கள் ஏற்பட்டதால், மீண்டும் விண்டோஸ் 7க்கு, விண் 10 கொடுத்த டூல் மூலம் மாறிக் கொண்டேன். இப்போது அந்த சிக்கல்கள் எல்லாம், சாதாரணமானவை என்றும், அவற்றை எளிதாகச் சமாளிக்கலாம் என்றும் அறிந்து கொண்டேன். இனி, மீண்டும் விண்டோஸ் 10க்கு அப்டேட் செய்து கொள்ள முடியுமா? முன்பு அப்டேட் செய்கையில் எனக்கு ஆக்டிவேஷன் எண் எதுவும் வழங்கப்படவில்லை. இனி எதனைக் கொண்டு அப்டேட் செய்திட முடியும். ஜூலை 29க்குள் செய்திட வேண்டுமா? தயவு செய்து வழி காட்டவும்.எஸ். ரங்கநாதன், ஸ்ரீரங்கம்.பதில்: நீங்கள் விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்த போது, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் குறியீட்டினை (Hash Code) தன்னுடைய ஆக்டிவேஷன் சர்வரில், மைக்ரோசாப்ட் பதிந்து வைத்திருக்கும். மீண்டும் நீங்கள் முயற்சி செய்கையில், இது மீண்டும் சரி பார்க்கப்பட்டு, விண்டோஸ் 10 உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும். இணைய இணைப்பிலேயே இதனை மேற்கொள்ள வேண்டும். ஆக்டிவேஷன் கீ தேவையில்லை. ஜூலை 29க்குப் பின்னரும் இதனை நீங்கள் மேற்கொள்ளலாம்.
கேள்வி: செயல்பட்டுக் கொண்டிருக்கும் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை, மின் சக்தி இணைப்பிலிருந்து விடுத்து, பின் மீண்டும் இணைப்பது, கம்ப்யூட்டருக்கு சிக்கல் ஏற்படுத்துமா? மீண்டும் சரிப்படுத்த முடியாத சிக்கலாக அது இருக்குமா? ஏனென்றால், வீட்டில் லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்குகையில், ஒரு ப்ளக் பாய்ண்ட்டிலிருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் சென்று இணைக்க வேண்டியதுள்ளது.கா. நரேந்திரன், ஹோசூர்.பதில்: இதனால், எந்த சிக்கலும் ஏற்படாது. லேப்டாப் கம்ப்யூட்டர்கள், பேட்டரியிலும், மின் இணைப்பிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பில் மிக அதிகமாக அழுத்த வேறுபாடு ஏற்பட்டு, இணைப்பு ட்ரிப் ஆகும்போது அதன் தாக்கம் லேப்டாப் கம்ப்யூட்டரில் ஏற்படலாம். இந்தச் சூழ்நிலையிலும், ஹார்ட் டிஸ்க் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தொழில் நுட்பத்தைப் பெற்றுள்ளது. எனவே, பெரும்பாலும் சிக்கல் ஏற்படாது. முன்பு வந்த நிக்கல் கேட்மியம் பேட்டரிகளில் பிரச்னை ஏற்பட்டு, கம்ப்யூட்டரின் மெமரியில் அதன் தாக்கம் இருந்தது. இப்போது, லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்பாட்டில், இது போன்ற சிக்கல்கள் ஏற்பட வழியில்லை. பேட்டரியின் நிலையைக் காட்டும் பல சாப்ட்வேர் செயலிகள் தற்போது கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டே கிடைக்கின்றன. அவை பேட்டரியைப் பாதுகாக்கும் திறனையும் கொண்டுள்ளன. பேட்டரிகள் சீராக உள்ளவரை, லேப்டாப் கம்ப்யூட்டரை எந்த வேளையிலும், மின் சக்தியைத் தரும் இணைப்பிலிருந்து எடுக்கவும் இணைக்கவும் செய்திடலாம்.
கேள்வி: அலுவலகக் கம்ப்யூட்டரில், வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, திடீரென அவை அனைத்தும் “ரீட் ஒன்லி” பைலாக அமைகின்றன. இவை ஏன் இப்படி திடீரென அமைகின்றன என்று தெரியவில்லை. எந்த இடத்திலும் நாங்கள் செட்டிங்ஸ் மாற்றவில்லை. இவற்றை எடிட் செய்திட முயற்சித்தால் முடியவில்லை. கே. உதயச் சந்திரன், திருப்பூர்.பதில்: உங்கள் பிரச்னையில் இறுதியில் குறிப்பிட்டபடி, 'ரீன் ஒன்லி' (readonly file) பைல்களை, டாகுமெண்ட்களை, எடிட் செய்திட முடியாது. அதற்காகத்தான் 'ரீட் ஒன்லி' என அவை அமைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை நீங்கள் திறந்து பார்க்கலாம். படிக்கலாம். காப்பி செய்திடலாம். இறுதி செய்யப்பட்ட டாகுமெண்ட்டில், கோப்பில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது. டாகுமெண்ட் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்று அறிய, Review டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Protect Document என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். யார் வேண்டுமானலும் பார்த்து எடிட் செய்திடலாம் என்றால், 'Unrestricted Access' என்பதில் டிக் அடையாளம் இருக்கும். யாரும் எடிட் செய்திடக் கூடாது என்றால், Restrict Formatting and Editing என்பதில் டிக் அடையாளத்தினை மேற்கொள்ளலாம்.சில வேளைகளில், நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் வேறு ஒருவர், வேர்டில் பைல்கள் சேவ் செய்யப்படும் தன்மையினை மாற்றி இருக்கலாம். மேலே கூறப்பட்டுள்ள வகையில் சென்று, இதன் தன்மையை மாற்றிக் கொள்ளவும்.இன்னொரு வழியிலும் இந்த பைல் மாற்றப்பட்டிருக்கலாம். உங்கள் வேர்ட் டாகுமெண்ட்களை நீங்கள் ஒரு நெட்வொர்க்கில் அமைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டரில் உருவாக்கியிருக்கலாம். அவை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் மற்ற கம்ப்யூட்டர் இயக்குபவர்களால், கையாளப்படலாம். ஒருவர் டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதே டாகுமெண்ட்டினை நீங்களும் பயன்படுத்தத் தொடங்குகையில், நிச்சயமாக அது ரீட் ஒன்லி என்றுதான் காட்டும். நீங்கள் முன்னவர் முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.சில நேரங்களில், அந்த பைல் வைக்கப்பட்டிருக்கும் போல்டர் ReadOnly போல்டராக இருக்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அந்த போல்டரின் தன்மையைக் கண்டறிந்தால், இதனை உறுதி செய்திடலாம். ஒரு குறிப்பிட்ட பைல் ரீட் ஒன்லியாக உள்ளது. அதனை மாற்ற இயலவில்லை என்ற நிலையில் இருந்து, அதனை மாற்ற வேண்டும் என நினைத்தால், அந்த பைலைத் திறந்து, அதில் உள்ள அனைத்து வரிகள் மற்றும் படங்கள் அனைத்தையும், கண்ட்ரோல் + ஏ கொடுத்துத் தேர்ந்தெடுக்கவும். புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து, காப்பி செய்ததை ஒட்டவும். இப்போது இந்த புதிய டாகுமெண்ட்டை நீங்கள் புதியதாக ஒரு பெயரில் சேவ் செய்திடலாம். அல்லது பழைய பைலை அழித்துவிட்டு, அதே பெயரில் சேவ் செய்து கொள்ளலாம்.
கேள்வி: விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகிறேன். மிக எளிமையாகவும், பயனுள்ள வகையிலும் உள்ளது. தாங்கள் அடிக்கடி தரும் குறிப்புகள் இதற்கு மிகவும் உதவுகின்றன. நான் டாகுமெண்ட்கல் மற்றும் ஒர்க்புக் தயாரிக்கையில் கால்குலேட்டர் தேவைப்படுகிறது. இதன இயக்கி பின்னரும், மற்ற விண்டோக்களின் பின்னாக, கால்குலேட்டர் மறைந்துவிடுகிறது. டாஸ்க் பார் சென்றுஇயக்க வேண்டியுள்ளது. இதனை முன்பாகவே திரையில் அமைக்க என்ன வழி?என். கிருத்திகா, மதுரை.பதில்: பொதுவாக, அப்ளிகேஷன் செயலி ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கையில், அது திரையின் முன்பாகக் காட்சி அளிக்கும். கால்குலேட்டர் அப்ளிகேஷனை டாஸ்க் பாரில் 'பின்' செய்து, அதன் பின்னர், பல புரோகிராம்களை இயக்கி, அவற்றின் விண்டோக்களைத் திறந்தேன். பின்னர், டாஸ்க் பாரில், கால்குலேட்டரில் கிளிக் செய்த போது, அது முன்னணிக்கு வந்தது. ஆனால், உங்களுக்கு இது வரவில்லை என்கிறீர்கள், இல்லையா? இதற்கான காரணம், உங்களுடைய accessibility options செட்டிங்ஸ் அமைப்பில் ஏற்பட்டிருக்கலாம். சர்ச் கட்டத்தில் Ease of access என டைப் செய்து முடிவுகளைப் பார்க்கவும். இதில் Make mouse easier to use என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பாக்ஸில், Activate window by hovering over it with a mouse என்பது செக் செய்யப்பட்டு, டிக் அடையாளம் இருப்பின், அதனை நீக்கவும். மேலும், கால்குலேட்டரை, நீங்கள் இழுத்து விடலாம் (“snap”). இந்த இழுத்துவிடும் வசதி, விண்டோஸ் 8.1 மற்றும் விண்டோஸ் 10ல் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், இரு விண்டோக்களை திரையில் அருகருகே அமைத்துக் கொள்ளலாம். இதற்கு, கால்குலேட்டர் செயலியைத் திறந்து, அதனை அப்படியே, திரையின் ஓரத்திற்கு இழுத்துச் சென்று அமைக்கவும். புரோகிராமிற்கு வெளியே, மிக மெல்லிதாக கோடு ஒன்றைக் காணலாம். இதனை இழுத்தால், அதற்கான புரோகிராம் இயக்கத்திற்கு வரும். கால்குலேட்டரை இவ்வாறும் பயன்படுத்தலாம். இவ்வாறு இழுத்து வைத்துப் பயன்படுத்தும் செயலிகளின் விண்டோ அளவினைச் சற்று குறைத்து அமைக்கலாம். இழுத்துத் திரையில் வைக்கும்போது, மற்ற விண்டோக்களை மறைக்காது. இதன் மூலம், மற்ற விண்டோக்களில் செயல்படுகையில், கால்குலேட்டரைத் திறந்த நிலையில் வைத்துத் தேவைப்படும்போது இயக்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X