டாகுமெண்ட் எடிட் செய்யப்படும் நேரம்: வேர்ட் புரோகிராம், ஒரு பைலில் நீங்கள் எவ்வளவு நேரம் அதனை எடிட் செய்திட எடுத்துக் கொள்கிறீர்கள் என்று தொடர்ந்து கணக்கிட்டுக் கொண்டே இருக்கும். இதனை நீங்கள் அறிய வேண்டுமானால், டாகுமெண்ட் பைல் பெயரில், ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Statistics கிளிக் செய்தால், இந்த நேர விபரம் அறியலாம். இந்த நேரத்தை, அந்த டாகுமெண்ட்டில், அவ்வப்போது ஒரு எடிட்டிங் முடியும்போது, பதிவு செய்திட எண்ணினால், அதனையும் மேற்கொள்ள வேர்ட் வழி தருகிறது.
கீழ்க்காணும் செயல்முறைகளைக் கையாளவும்.
1. கர்சரை டாகுமெண்ட்டில் எந்த இடத்தில் நேரத்தைப் பதிவு செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த இடத்தில் நிறுத்தவும்
2. ரிப்பனில் Insert டேப் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து டெக்ஸ்ட் குரூப்பில் (Text Group) Quick Parts டூல் என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Fields என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Categories பட்டியலில் Date and Time என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. கிடைக்கின்ற பீல்ட் வகைகளில் EditTime என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
6. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு: வேர்ட் புரோகிராம், அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது, சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான அளவில் வேண்டும் என்றால் என்ன செய்திடலாம்? வேர்ட் தானாக இதனை அமைக்காது. அதன் மாறா நிலையில், குறிப்பிட்ட அளவில் அனைத்து செல்களையும் அமைத்துவிடும். எனவே, மேலே கூறியபடி அகலத்துடன் 12 செல்கள் கொண்ட டேபிள் ஒன்றை அமைக்க, ஒரு சுருக்கமான வழியைப் பார்ப்போம்.
1. மூன்று செல்கள் கொண்ட ஒரு வரிசை டேபிள் ஒன்றை உருவாக்கவும். இது உங்கள் டாகுமெண்ட்டின் ஒரு மார்ஜின் முனையிலிருந்து அடுத்த மார்ஜின் வரை நீட்டிக்கப்பட்டு கிடைக்கும்.
2. அடுத்து மவுஸைப் பயன்படுத்தி, முதல் இரண்டு செல்களின் அகலத்தினை நீங்களே சரி செய்திடுங்கள். எவ்வளவு அதிக அகலம் வேண்டுமோ, அவ்வளவு அகலத்தில் அமைத்திடுங்கள்.
3. மவுஸின் கர்சரை மூன்றாவது செல்லில் நிறுத்தவும்.
4. ரிப்பனுடைய Layout tab டேப்பினைத் திறக்கவும். மவுஸின் கர்சர் செல்லுக்குள் இருந்தால் தான், இந்த டேப் இருப்பது காட்டப்படும்.
5. அடுத்து Merge குரூப்பில், Split Cells என்ற டூலில் கிளிக் செய்திடவும்.
6. அடுத்து Number of Columns என்ற கண்ட்ரோலைப் பயன்படுத்தி, அந்த செல்லை பத்து செல்களாகப் பிரிக்க வேண்டும் என அமைக்கவும்.
7. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.