கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
00:00

கேள்வி: வேர்டில் அமைக்கப்படும் டாகுமெண்ட்டில், குறிப்பிட்ட பக்கத்திற்கு உடனடியாகச் செல்வதற்கு எந்த ஷார்ட் கட் கீ பயன்படுத்த வேண்டும்? நான் எப்போதும் மிக அதிகமான பக்கங்களுடன் டாகுமெண்ட் தயாரிப்பதால் எனக்கு இந்த வழி காட்டவும். நன்றி.
என். பாலசுப்பிரமணியன், திருச்சி.
பதில்:
வேர்ட் செயலி இதற்கான வழியை ஷார்ட்கட் கீயாக வைக்கவில்லை. சற்று சுற்று வழியில் அமைக்க வசதி செய்து கொடுக்கிறது. Find and Replace டயலாக் பாக்ஸில் இதற்கான வழி உண்டு. முதலில் எப்5 (F5) அழுத்தவும். வேர்ட் பைண்ட் அண்ட் ரிபிளேஸ் பாக்ஸில், Go To என்ற டேப்பினைத் திறந்தபடி காட்டும். இந்த டயலாக் பாக்ஸில், இடது பக்கம் நீங்கள் குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டும் இடத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்போது எந்த பக்கத்திற்குச் செல்ல வேண்டுமோ, அந்த பக்க எண்ணை அமைக்கவும். அடுத்து Go To என்பதில் கிளிக் செய்து, எண்டர் தட்டவும் உடன் அந்த பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் கர்சர் 17 ஆம் பக்கத்தில் இருக்கும்போது 26 ஆவது பக்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், +6 என டைப் செய்து என்டர் தட்டவும். பின்புறமாகச் செல்ல வேண்டும் என்றால், மைனஸ் அடையாளம் அமைத்து இயக்க வேண்டும்.

கேள்வி: என் நண்பர் கம்ப்யூட்டர் பைல் ஒன்றின் பெயரில் எத்தனை எழுத்துகள் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறுகிறார். பைலின் இருப்பிடம் குறித்து அமைக்கப்படும் பாதை (Path) யின் விபரங்களையும் சேர்த்தாலும், இது போல அளவின்றி பெரியதாக அமைக்க முடியுமா? எந்த எழுத்துகள், சொற்கள் பைல் ஒன்றின் பெயரில் அமையக் கூடாது? பைல் ஒன்றின் துணைப் பெயர் ஏன் கம்ப்யூட்டரில் காட்டப்படுவதில்லை. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்?
என். ஜெயந்தி, கோவை.
பதில்
: சரியான நேரத்தில் இந்த கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். சற்று விரிவான பதிலைத் தருகிறேன். கம்ப்யூட்டர் பைலின் பெயர் அளவு தற்போது விரிகிறது. கம்ப்யூட்டர் பைல் ஒன்றைக் குறிப்பிடுகையில், அதன் ட்ரைவ், டைரக்டரி மற்றும் பைலின் பெயர், துணைப் பெயர் ஆகிய அனைத்தும் சேர்ந்து எத்தனை கேரக்டர்களில் அமையலாம்? இப்போதைய விண்டோஸ் இயக்கத்தில், 260 கேரக்டர்களில் அமையலாம். இந்த பைலின் பெயரை MAX_PATH என அழைக்கின்றனர். தற்போதைய விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இந்த அளவு நீட்டிக்கப்படுகிறது. தற்போதைய சோதனை ஓட்டத்தில் இது அனுமதிக்கப்படுகிறது. பிரிவியூ பதிப்புகளில் இந்த நீட்டிப்பு, 260 கேரக்டர்களுக்கு மேலாக அனுமதிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. (யாரேனும், 260 கேரக்டர்களில், பைல் பெயரினை, அதன் ட்ரைவ், டைரக்டரி, போல்டர், துணை போல்டர் மற்றும் பைல் பெயர், துணைப் பெயர் கொண்டு அமைத்திருக்கிறீர்களா?)
தொடக்கத்தில், கம்ப்யூட்டர் பைல் ஒன்றின் நீள அளவு “8.3” ஆக இருந்தது. அதாவது பைலின் முதன்மைப் பெயர் 8 கேரக்டர்களிலும், துணைப் பெயர் (doc, dat, db) மூன்று கேரக்டர்களிலும் இருந்தது. இது மட்டுமே பைல் பெயர். ஹார்ட் டிஸ்க்கில் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதனை விளக்கும் குறியீடுகள், பைலை அடைய வேண்டி நாம் செல்ல வேண்டிய “பாதையை” (path) குறிக்கின்றன. பின்னாளில், எந்த கேரக்டரையும், பைல் பெயரில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து, 8.3 என்ற தடை விலகியது.
அனைத்து கேரக்டர்களையும், பைல் பெயர் ஒன்றில் பயன்படுத்த முடியாது. < > : " / \ | ? * ஆகிய கேரக்டர்களைப் பைல் ஒன்றின் பெயரில் பயன்படுத்த முடியாது. அதே போல, CON, PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, and LPT9 என்ற சொற்களைப் பைல் பெயரில் பயன்படுத்த முடியாது. பைல் பெயர் ஒன்றின் இறுதியில், ஸ்பேஸ் அல்லது முற்றுப் புள்ளி பயன்படுத்த முடியாது.
பைல் பெயர்களில், பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில், துணைப் பெயர்கள் காட்டப்படுவதில்லை. இருப்பினும், துணைப் பெயர் தெரியப்பட வேண்டும் என எண்ணினால், அதனைக் காட்டும்படி அமைக்கலாம். இதற்குக் கீழே குறிப்பிட்டபடி செயல்பட வேண்டும்.
ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, Folder Options என்பதைத் திறக்கவும். அல்லது, கண்ட்ரோல் பேனல் கிளிக் செய்து, Appearance and Personalization என்பதில் கிளிக் செய்து, தொடர்ந்து Foler Options திறக்கவும்.
தொடர்ந்து View டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர், Advanced Settings என்பதில், கீழே குறிப்பிட்டுள்ள மாற்றங்களை மேற்கொள்ளவும். பைலின் துணைப் பெயர் காட்டப்பட, Hide extensions for known file types என்பதற்கு அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பைலின் துணைப் பெயர் மறைக்கப்பட இதே இடத்தில் உள்ள செக் பாக்ஸில், டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.

கேள்வி: சென்ற வாரம், விண்டோஸ் 7லிருந்து விண்டோஸ் 10க்கு மாறினேன். முன்பு டெஸ்க்டாப் பெற, டாஸ்க் பாரில், வலது ஓர கட்டத்தில் கிளிக் செய்வேன். உடன் கிடைக்கும். ஆனால், இப்போது அப்படி ஒரு கட்டம் இல்லை. ஒவ்வொரு விண்டோவாக மூடித்தான் டெஸ்க்டாப் பெற வேண்டியுள்ளது. இதற்கான தீர்வு என்ன?
கா. யமுனா, செய்யாறு.
பதில்:
விண்டோஸ் 10லும் இதே வசதி உள்ளது. உங்களின் திரைக் காட்சியில் படம் அல்லது அளவு வேறுபாட்டால், டாஸ்க்பார் கட்டம் தெரியாமல் இருக்கலாம். சற்று சரி செய்தால், கட்டம் கிடைக்கும். அதில் கிளிக் செய்து டெஸ்க்டாப் பெறலாம். இன்னொரு வழியும் உள்ளது. விண்டோஸ் கீயுடன் 'டி' (D) கீயை அழுத்தினால், உடன் டெஸ்க்டாப் கிடைக்கும். மீண்டும் அழுத்தினால், முந்தைய திறக்கப்பட்ட விண்டோக்கள் காட்சி தரும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில், பழைய வேர்ட் டாகுமெண்ட்களை எப்படித் திறப்பது? நான் வாங்கிய புதிய எச்.பி.லேப்டாப்பில் எம்.எஸ்.ஆபீஸ் பதியப்படவில்லை. என்னிடம் முன்பு விஸ்டா பயன்படுத்தியபோது வாங்கிய ஆபீஸ் புரோகிராம் டிவிடியாக உள்ளது. இதனைப் பயன்படுத்தலாமா? அல்லது வேறு வழிகள் உள்ளனவா?
என். மயூரநாதன், சிதம்பரம்.
பதில்
: விண்டோஸ் 10 இயக்கத்திலேயே வேர்ட் ப்ராசசர் ஒன்று Word Pad என்ற பெயரில் தரப்பட்டுள்ளது. தேடல் கட்டத்தில் சென்று Word Pad என டைப் செய்து, கிடைக்கும் விடைகளில் அதனைத் தேடி கிளிக் செய்தால் போதும். வேர்ட் ப்ராசசர் கிடைக்கும். அதில் உங்கள் பழைய டாகுமெண்ட் பைல்களைப் படிக்கலாம், திருத்தலாம். புதியதாக சேவ் செய்து கொள்ளலாம். விஸ்டாவின் போது வாங்கிய வேர்ட் புரோகிராம் குறித்த முழு தகவல்களையும் நீங்கள் தரவில்லை. எனவே, அதனைப் பதிந்து பார்க்கவும். விண்டோஸ் 10 ஏற்றுக் கொள்ளும் என்றுதான் நினைக்கிறேன்.
இன்னும் சில வழிகளும் உள்ளன. Outlook.com சென்று, மைக்ரோசாப்ட் வேர்ட் செயலியை இலவசமாகப் பெற்று இயக்கலாம். இந்த வகையில் இணையத்தில் எக்ஸெல், வேர்ட், ஒன் நோட், பவர் பாய்ண்ட் மற்றும் பல புரோகிராம்கள் இலவசமாக இயக்கக் கிடைக்கின்றன. அல்லது, இணையத்தில் LibreOffice மற்றும் Open Office ஆகியவை இலவசமாகக் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து, பதிந்து இயக்கலாம். இவையும் வேர்ட் டாகுமெண்ட்களைக் கையாளுவதற்குச் சிறந்த செயலிகளாகும்.

கேள்வி: பல புரோகிராம்களை விண்டோஸ் திரையில் வைத்து இயக்கிக் கொண்டிருக்கையில், ஆல்ட் மற்றும் டேப் கீ அழுத்தி, ஒவ்வொரு புரோகிராமாக மாற்றிக் கொள்கிறோம். அப்போது நாம் காணும் விண்டோவிலேயே, அனைத்து புரோகிராம்களுக்கும் தம்ப் நெயில் எனப்படும் சிறிய படங்கள் காட்டப்பட்டு, புரோகிராம்கள் தேர்ந்தெடுக்கப்பட வசதி தரப்படுகிறது. இதற்குப் பதிலாக, ஏன், குறிப்பிட்ட முழுமையான புரோகிராம்களின் விண்டோக்கள் காட்டப்படுவதில்லை. இது இன்னும் எளிதாக இருக்குமே?
ஐ. ஆராவமுதன், கும்பகோணம்.
பதில்:
நீங்கள் எதிர்பார்ப்பது சரியான வழியே. ஏற்கனவே இருக்கும் திரைக் காட்சிக்கு மேலாக, இந்த தம்ப் நெயில் படங்கள், நாம் நமக்கான புரோகிராமினைத் தேர்வு செய்வதில் சற்று சிரமத்தினை ஏற்படுத்துகின்றன. உங்கள் எதிர்பார்ப்பின்படி புரோகிராம் விண்டோக்கள் காட்டப்பட்டால், நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுப்பது எளிது. நாம் அனைவரும் ஆல்ட்+டேப் கீகள் இணைப்பு மட்டுமே இதற்குப் பயன்படுத்தி வருகிறோம். மற்ற சில ஷார்ட் கட் கீகளும் இதற்கென உள்ளன. Alt+Esc கீகளை அழுத்தினால், நீங்கள் கேட்டபடி புரோகிராம்கள் இயங்கும் விண்டோக்கள் காட்டப்படும். தம்ப் நெயில் படங்கள் காட்டப்பட மாட்டாது. இது தேர்ந்தெடுக்க எளிதான வழிதான்.
இன்னொரு வழியும் உள்ளது. பெரும்பாலான பயனாளர்கள் இதனை அறிந்திருப்பதில்லை. Ctrl+Alt+Tab என்றவாறு கீகளை அழுத்தினால், Alt+Tab கீகளை அழுத்தினால், என்ன காட்டப்படுகிறதோ, அதே வகையில் தம்ப் நெயில் படங்கள் காட்டப்படும். ஆனால், இதில் ஒரு சின்ன வேறுபாடு உண்டு. கீ போர்டில் இருந்து விரல்களை எடுத்துவிட்டால், தம்ப் நெயில் படங்கள் அனைத்தும் மொத்தமாகக் காட்டப்படும். இப்போது அம்புக் குறி கீ அல்லது மவுஸ் பயன்படுத்தி, நமக்குத் தேவையான புரோகிராம்களைத் தேர்ந்தெடுக்கலாம். இன்னும் ஒரு சிறிய ரகசியம் சொல்லட்டுமா! இந்த கீ இணைகளுடன் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டால், புரோகிராம்கள் பின்னோக்கிக் காட்டப்படும்.

கேள்வி: புதியதாக லேப்டாப் ஒன்று வாங்கினேன். அதில் விண்டோஸ் 10 பதியப்பட்டு தரப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பணம் செலுத்தியும், அதன் ஓ.எஸ். சி.டி. தரப்படவில்லை. இன்னொரு கம்ப்யூட்டரில் பதிய வேண்டும் என்றால், என்ன செய்வது? என்று கேட்டதற்கு, விற்பனை செய்தவர், இந்தக் கம்ப்யூட்டரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கம்ப்யூட்டர் கெட்டுப் போய்விட்டால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவுதான் என்று கூறுகிறார். இது உண்மையா?
என். சகாதேவன், புதுச்சேரி.
பதில்
: ஆம், அவர் கூறுவது உண்மையே. இது ஒரு OEM software என்ற அடிப்படையில் தரப்பட்டுள்ளது. Original Equipment Manufacturer என்ற அடிப்படையில் தரப்படுவது. கம்ப்யூட்டர் உருவாக்கி விற்பனை செய்பவர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து, மொத்தமாக உரிமங்களை கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொண்டு, அவற்றைத் தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களில் பதிந்து தருவார்கள். வாங்குபவருக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அந்தக் கம்ப்யூட்டரில் மட்டுமே பயன்படுத்த உரிமம் வழங்கப்படும். அதனை அன் இன்ஸ்டால் செய்தாலும், இந்த உரிமத்தினைப் பயன்படுத்தி வேறு ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியாது. இது குறித்து மைக்ரோசாப்ட் கீழ்க்காணும் நிபந்தனையைத் தன் வலைமனையில் தந்துள்ளது. The Microsoft Software License Terms, which the end user must accept before using the software, state that the license may not be shared, transferred to, or used concurrently on different computers.” இந்த உரிமத்தினைப் பகிர்ந்து கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் பதிந்து பயன்படுத்தவோ கூடாது என்ற நிபந்தனையுடன் தான், இந்த சிஸ்டம் இயக்கப்பட அனுமதி தரப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, 'சில்லரை உரிமம்' என்பதன் அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் வாங்குபவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் இயக்க முறைமையினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒரு நேரத்தில் ஒரே ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டரிலிருந்து அன் இன்ஸ்டால் செய்தால் மட்டுமே, புதிய கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்த முடியும். எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இல்லாமல் புதிய கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, பழைய கம்ப்யூட்டரில் சிஸ்டத்தினை அன் இன்ஸ்டால் செய்து, அதனைப் புதிய கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X