கூகுள் தேடலில் சில வழிகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
கூகுள் தேடலில் சில வழிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
00:00

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. இணைய தளம் கட்டளை (The site: command): இந்த ஆப்பரேட்டர் மூலம், நாம் நமக்குத் தேவையான தகவல்களை, ஒரே ஒரு தளத்தில் மட்டும் தேடும்படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக, தினமலர் இணைய தளத்தில் மட்டும் Bluetooth என்ற சொல்லைத் தேடுவதாக இருந்தால், bluetooth site www.dinamalar.in எனக் கொடுக்க வேண்டும். இந்த கட்டளையானது, தினமலர் இணைய தளத்தில் மட்டும், Bluetooth என்ற சொல் உள்ள பக்கங்களைத் தேடித்தருமாறு கேட்கிறோம். இதனால், மற்ற இணையதளங்களில் இந்த சொல் பயன்பாடு உள்ளதா என்ற தேடல் மேற்கொள்ளப்பட மாட்டாது.
2. குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடல் (inurl:command): இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், நாம் தேடிப் பெற விரும்பும் தேடலை, குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடும்படி அமைக்கிறோம். எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும்.
3. விளக்கம் வேண்டும் தேடல் (define: “word”): தேடல் கட்டத்திலேயே நாம் சிலவற்றிற்கான விளக்கம் மற்றும் விரிவான குறிப்புகளைத் தேடிப் பெறலாம். ஒரு சொல் துல்லியமாக என்ன பொருளைக் கொண்டுள்ளது என்று நீங்கள் தெரிந்து கொள்ள இந்தக் கட்டளையைப் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, super computer என்பதற்கான விளக்கம் தேவை எனில், define: super computer என்ற கட்டளையைக் கொடுக்கலாம்.
4. குறிப்பிட்ட சொல் உள்ள டெக்ஸ்ட் பக்கம் மட்டும் தேடிப் பெற (intext command): இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்துத் தேடுகையில், குறிப்பிட்ட சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இணையப் பக்கங்களை மட்டும் தேடிக் காட்டச் செய்கிறது. எடுத்துக் காட்டாக, soup recipes என்பது குறித்த தகவல்களைத் தேடிப் பெறுகையில், நமக்கு 'chicken' என்ற சொல் பயன்படுத்தப்படும் தளங்கள் மட்டும் தேடிப் பெற, soup recipes intext:chicken என்று கட்டளை கொடுக்க வேண்டும். கூகுள், chicken என்ற சொல் உள்ள, soup recipes குறித்த இணையப் பக்கங்களை மட்டும் காட்டும்.
5. ''convert' கட்டளை: இது ஒரு ஆப்பரேட்டர் இல்லை; டூல் என்று சொல்லலாம். இது பன்னாட்டு பண மதிப்பைக் கையாள்கிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு அமெரிக்க டாலர் எவ்வளவு? என்ற வினாவிற்கு, அன்றைய பன்னாட்டளவிலான மதிப்பில் டாலர் மதிப்பைக் காட்டும். இதே போல எந்த நாட்டு கரன்சிக்கும் பெறலாம். எடுத்துக் காட்டாக, convert 100 INR to usd என்ற கட்டளைக்கு ரூ.100க்கு இணையான அமெரிக்க டாலர் எவ்வளவு என்று காட்டப்படும்.
மேலே காட்டப்பட்டுள்ள குறுக்கு வழிகள், நம் தேடலை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள வழி தருகின்றன. இதே போல பல குறுக்கு வழிகள் உள்ளன. இவற்றை அறிந்து நாம் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X