வேர்ட் டிப்ஸ்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
00:00

நீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.
இதனால் வலது மார்ஜினில் அழகின்றி ஒரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன்மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும்.
டாகுமெண்ட்டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Symbols குருப்பில் Symbol என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbols டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbol பிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், No -Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும்.
இவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது. ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம்.
வேர்டில் எக்ஸெல் ஒர்க் ஷீட் சார்ட் பதித்திட: பொதுவாகவே, மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள சார்ட் ஒன்றை அப்படியே பதித்திடலாம். இதனைக் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம்.
1. வேர்ட் டாகுமெண்ட்டில் பதிக்க விரும்பும் எக்ஸெல் சார்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். சார்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
2. உடன் கண்ட்ரோல் + சி (Ctrl+C ) அழுத்தி, அதனை கிளிப் போர்டில் காப்பி செய்திடவும்.
3. அடுத்து வேர்ட் டாகுமெண்ட் செல்லவும்.
4. டாகுமெண்ட்டில் எந்த இடத்தில், காப்பி செய்த சார்ட்டினை ஒட்ட வேண்டுமோ, அந்த இடத்திற்கு கர்சரைக் கொண்டு செல்லவும்.
5. ரிப்பனில் ஹோம் டேப் தேர்ந்தெடுக்கவும்.
6. Paste டூலில் உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் Paste Special என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது Paste Special டயலாக் பாக்ஸைக் காட்டும்.
7. இங்கு Microsoft Office Excel Chart Object என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
8. இதில் Paste Link ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
9. பின்னர் ஓகே கிளிக் செய்திட்டால், வேர்ட், நீங்கள் தொடர்பு படுத்திய சார்ட்டினை, டாகுமெண்ட்டில் இணைத்துக் கொள்ளும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X