எக்ஸெல் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
00:00

எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்: எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
அனைத்து ஆபீஸ் 2007 அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், இந்த கால இடைவெளி, மாறா நிலையில் 10 நிமிடங்களாக அமைக்கப்படுகிறது. இதனை நாம் எந்த அளவிலும் வைத்துக் கொள்லலாம். எடுத்துக் காட்டாக 5 நிமிடங்களாக இதனை செட் செய்தால், நீங்கள் எந்த அப்ளிகேஷன் புரோகிராமில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு முறை, நீங்கள் அமைத்த டேட்டா அனைத்தும் உள்ள பைலாக அது சேவ் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனை எப்படி எக்ஸெல் புரோகிராமில் அமைப்பது என பார்க்கலாம்.
1. ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் மெனுவின் கீழாக “Excel Options” என்று உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது “Excel Options” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள மெனுவின் இடது பக்கமாக உள்ள Save என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு “Save AutoRecover information” என்று உள்ள இடத்தில் காட்டப்பட்டுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை இடவும்.
5. எத்தனை நிமிட இடைவெளியில், எக்ஸெல் டேட்டாவினை சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்திடவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

எக்ஸெல்: வரிசைகள் எத்தனை?: எக்ஸெல் தொகுப்பில் வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில் எத்தனை வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எப்படி அறிவது? எடுத்துக் காட்டாக மாணவர்களின் மதிப்பெண்களை வரிசையாக என்டர் செய்கையில், அல்லது செய்த பின் எத்தனை பேருக்கு என்டர் செய்திருக்கிறோம் என்று பார்க்க விரும்புகையில் என்ன செய்கிறோம்?
மானிட்டரில் விரலை வைத்து ஸ்கிரீனைத் தொட்டுப் பார்த்து எண்ணுவதா? அல்லது ஒவ்வொரு வரிசையாகக் கர்சரைக் கொண்டு சென்று 1,2,3 என்று கணக்கிடுவதா? அதிக எண்ணிக்கையில் இருந்தால் நிச்சயம் இவை இரண்டும் நமக்கு சரியாக வராது. எக்ஸெல் இதற்கென்றே ஒரு வசதியைக் கொண்டுள்ளது.
எக்ஸெல் தொகுப்பே உங்களுக்கு நீங்கள் செலக்ட் செய்திடும் வரிசைகளை எண்ணிச் சொல்லும். அதுவும் நீங்கள் செல்களை ஹைலைட் செய்திடும்போதே அவை எண்ணப்பட்டு எண்ணிக்கை என்னவென்று உங்களுக்குச் சொல்லப்படும். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வசதி உங்கள் கண் முன் எப்போதும் உள்ளது. ஆனால் நீங்கள் அதனை இது வரை உற்று நோக்கவில்லை. அதனை இங்கு பார்ப்போம்.
அடுத்த முறை நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திடுகையில் படுக்கை வரிசைகளுக்கான எழுத்துக்கள் தோன்றும் இடத்திற்கு மேலாகப் பாருங்கள். அல்லது இறுதியாக ஹைலைட் ஆன செல்லுக்கு அருகாமையில் மேலாகப் பாருங்கள். எத்தனை காலம் எனக் காட்டப்படும். எடுத்துக் காட்டாக நான்கு காலம் என்றால் 4C எனக் காட்டப்படும். காலம் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதே போல ரோ எனப்படும் படுக்கை வரிசை செலக்ட் ஆகும்போது 4R எனக் காட்டப்படும்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X