இந்த வார இணைய தளம் எளிய ஆங்கிலத்தில் மாற்றி எழுத
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
00:00

ஒரு மொழியில் எழுதுகையில், எழுதப்படுவது அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் வகையில் எளிமையாக எழுதலாம். அடிக்கடி பயன்படுத்தாத, அல்லது சற்று நேரம் எடுத்துப் புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களைக் கொண்டும் எழுதலாம். எடுத்துக் காட்டாக, தமிழில் 'ஜன்னல்' என்பதை ஜன்னல் என்று எழுதினால், வழக்கு மொழிச் சொல் எனப் பலரும் புரிந்து கொள்வார்கள். 'சாளரம்' என்று எழுதினால், “இதென்ன புலவர் தமிழாக உள்ளதே” எனச் சிலர் புரிந்து கொள்ளலாம். அதே ஜன்னலை, 'காலதர்' என எழுதினால், (கால்=காற்று, அதர்= வரும் வழி. காலதர் = காற்று வரும் வழி, ஜன்னல்) பெரும்பாலானவர்கள் பொருள் தெரியாமல் கலக்கமடைவார்கள்.
சொல்லில் மட்டுமின்றி, வாக்கியத்திலும் கூட இதே போல, எளிமையின்றி எழுதும் வகையும் உண்டு. ஆங்கிலத்தில் இது சற்று அதிகமாகவே இருக்கும். நமக்கு வேண்டிய பொருள் குறித்த கட்டுரை ஒன்று, சற்று கடினமான ஆங்கிலத்தில் இருந்தால், யாராவது இதனை எளிமைப்படுத்தி எழுதினால் நன்றாக இருக்குமே என்று நாம் விரும்புவோம். இந்த செயலில் நமக்கு உதவிட, இணையத்தில் ஒரு தளம் உள்ளது. Rewordify! என்பது இந்த தளத்தின் பெயர். இந்த தளத்திற்குச் சென்று, நாம் எளிமைப்படுத்த வேண்டிய கடினமான உரைக்கோவையினை இட்டால், அது அந்த டெக்ஸ்ட்டை எளிமைப்படுத்தித் தருகிறது. எடுத்துக் காட்டாக, இந்த தளத்தில் தரப்பட்டுள்ள வாக்கியத்தினையும், அது எளிமைப்படுத்தப்பட்டு தரப்படும் வாக்கியத்தினையும் நீங்கள் படித்துப் பார்த்தால், இதன் செயல்பாட்டினை அறியலாம்.
கடினமான வாக்கியம் (ஆங்கிலத்தில்): The ravenous throng scampered toward the delectable viands, which was impeccably arrayed on the table. இதன் எளிமையான வாக்கியம்: The extremely hungry crowd ran toward the delicious food, which was extremely well organized (into rows) on the table. இன்னொரு எடுத்துக் காட்டு: Four score and seven. படிக்கும் போது எளிமையாகத் தோன்றினாலும், சிலருக்கு மட்டுமே இது எளிமையாக இருக்கும். Score என்பது 20. எனவே, இது 87 ஐக் குறிக்கிறது.
இந்த செயல்பாடு மட்டுமின்றி, இந்த தளம் மூலம் நாம் ஆங்கிலத்தில் சொற்களைக் கற்றுக் கொள்ளலாம்.
பயனாளர்கள் இந்த தளத்தினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்; என்ன என்ன பயன்களை அடையலாம் என்று விரிவாக இந்த தளத்தின் முகப்பு பக்கத்திலேயே தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு. ஆங்கிலத்தில் கட்டுரைகளைத் தேடுவோர் மட்டுமின்றி, சொற்களைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கும், இது ஒரு பயனுள்ள தளமாகும்.
இதன் இணைய முகவரி: https://rewordify.com/

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X