கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
00:00

கேள்வி: நான் எட்ஜ் பயன்படுத்துகிறேன். இதில் பிங் பிரவுசர் கிடைக்கிறது. ஆனால், என் இமெயில் பக்கத்தில் இடது பக்கம் உள்ள பிரிவியூ பேனல் விலகுவதில்லை. இதனால், மெயில் பார்ப்பதில் சிக்கல் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது?
வாசகர் பெயர் வெளியிட விரும்பவில்லை.
பதில்:
இது போன்ற பல குழப்பமான கேள்விகள் வருகின்றன. விண்டோஸ் 1-0 வந்த பின்னர், பலர் பிரவுசர், சர்ச் இஞ்சின் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் ஆகியவை குறித்து குழப்பமான கருத்துகளைக் கொண்டிருப்பது தெரிகிறது. மைக்ரோசாப்ட் எட்ஜ் என்பது ஒரு பிரவுசர். பிரவுசரை நாம் இணையத்தில் உள்ள பக்கங்களைத் தேடிப் பெறப் பயன்படுத்துகிறோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம், பயர்பாக்ஸ் மற்றும் சபாரி ஆகியவை பிரவுசர்கள். நீங்கள் ஒரு பிரவுசரைப் பயன்படுத்தும்போது, உங்களுக்கு ஒரு சர்ச் இஞ்சின் எனப்படும் தேடல் சாதனம் தேவை. இவற்றை, இணையத்தில் குறிப்பிட்ட பொருள் சார்ந்த தகவல் வேண்டும்போது பயன்படுத்துகிறோம். இவை இணையத்தில் நாம் தேடும் பொருள் குறித்து தகவல் தரும் தளங்களைத் தேடி அவற்றின் முகவரிகளைத் தருகின்றன. கூகுள், பிங் மற்றும் யாஹூ ஆகியவை பிரபலமான தேடுதல் சாதனங்களாகும். பல பிரவுசர்கள், மாறா நிலையில் தங்களுக்கென சில தேடல் சாதனங்களைக் கொண்டுள்ளன. எட்ஜ் பிரவுசர் பிங், குரோம் கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் யாஹூ என்ற தேடல் சாதனங்களைக் கொண்டுள்ளன. ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரை, நீங்கள் விரும்பும் தேடல் சாதனத்தைப் பயன்படுத்துமாறு செட் அப் செய்திடலாம். அதே போலத்தான், இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பேவரிட் தளப்பட்டியலை எப்படி எடுப்பது என அறிவேன். ஆனால், அண்மையில் நான் பயன்படுத்தத் தொடங்கியுள்ள குரோம் பிரவுசரில் எப்படி பேவரிட் என மார்க் செய்யப்பட்டவற்றை சேவ் செய்வது எனத் தெரியவில்லை. இதற்கான வழி பிரவுசரில் எங்குள்ளது?
ஆர். பவானி முருகேசன், பழநி.
பதில்
: குரோம் பிரவுசரில் இவை favorites என அழைக்கப்படுகின்றன. இங்கும் இவற்றின் பட்டியலை எடுத்து பாதுகாப்பாக வைப்பது எளிது. முதலில் குரோம் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து, வலதுபுறம் மேலாக உள்ள மூன்று சிறிய கோடுகள் உள்ள ஐகானில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Bookmarks என்று இருக்கும் இடத்தில், உங்கள் கர்சரைக் கொண்டு செல்லவும். இனி, BOOKMARK MANAGER என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Bookmark Manager விண்டோ திறக்கப்படும். இங்கு இரண்டு ஆப்ஷன் கிடைக்கும். அவை FOLDER மற்றும் ORGANIZE. இவற்றில் organize என்பதில் கிளிக் செய்திடவும். இதனை புரிந்து கொள்ளும் வகையில் பெயரிட்டு, நினைவில் எளிதாக வரும் இடத்தில் சேவ் செய்திடவும். இதனை புதிய கம்ப்யூட்டர் ஒன்றுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், அதில் மேலே சொன்னபடி சென்று, Import Bookmarks From Html என்பதில் கிளிக் செய்து, பைல் கேட்கையில், ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள புக்மார்க் பைலைக் காட்டவும். அனைத்தும், புதிய கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரில் பதியப்படும்.

கேள்வி: எட்ஜ் பிரவுசரை, விண்டோஸ் 10ல் பயன்படுத்துகிறேன். இதில் குக்கி பைல்கள் உருவாக்கப்படுகின்றனவா எனத் தெரியவில்லை. இந்த பிரவுசரில், குக்கி பைல்கள் உருவாக்கப்பட்டால், அவற்றை எந்த வழியில் சென்று நீக்க வேண்டும் என வழி காட்டவும்.
ஆ. சுலைமான், ஹோசூர்.
பதில்
: மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரில் குக்கி பைல்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை நிர்வகிக்க வழி காணும் முன்னர், ஒன்றைத் தெளிவாக்கிக் கொள்ள விரும்புகிறேன். குரோம். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் குக்கி பைல்களை நிர்வகிப்பது போல, அழிப்பது போல, எட்ஜ் பிரவுசரில் மேற்கொள்ள முடியாது. இதில் மொத்தமாக குக்கி பைல்களை நீக்கலாம். இவ்வாறு சேவ் செய்து வைக்கப்பட்ட வெப்சைட் டேட்டாவினையும் நீக்கலாம். எட்ஜ் பிரவுசரில், மூன்று புள்ளிகள் உள்ள (கோடுகள் உள்ளது அல்ல) More மெனு பட்டனை அழுத்தவும். கிடைக்கும் மெனுவில், “Settings” என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு Clear browsing data என்ற பிரிவில், Choose what to clear என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Clear browsing data என்ற பிரிவில், “Cookies and saved website data” என்பதன் அருகே டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். பின்னர், “Clear” என்பதில் கிளிக் செய்திடவும். இங்குள்ள தகவல்கள் அழிக்கப்படுவதனை பாப் அப் கட்டம் ஒன்று காட்டும். முடிந்தவுடன், முடிக்கப்பட்டது என்ற தகவலும் காட்டப்படும்.

கேள்வி: ஸ்மார்ட் போன்களில் அக்ஸிலரோ மீட்டர் என்ற ஒரு டூல் குறித்து எழுதி வருகிறீர்கள். இது எதனைக் குறிக்கிறது. நாம் டவுண்லோட் செய்திட வேண்டுமா? சாதாரண போன்களில் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்த முடியுமா? நான் எச்.டி.சி. போன் வாங்க முடிவு செய்துள்ளேன். அதில் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியுமா?
என்.பார்த்திபன், காரைக்கால்.
பதில்:
அக்ஸிலரோமீட்டர் (accelerometer) என்பது, ஸ்மார்ட் போனில் மட்டுமே இயங்கும் ஒரு தொழில் நுட்பம். இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டியதில்லை. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில் இது தரப்படுகிறது. ஆப்பிள் போன்களிலும் இது உண்டு. ஒரு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகையில், அதனைப் பல கோணங்களில் திருப்புவோம். எந்த பக்கம் போன் திருப்பப்படுகிறது என்பதனை இந்த தொழில் நுட்பம் உணர்ந்து, அதற்கேற்றார்போல், போனில் உள்ள திரைக் காட்சியை நமக்குக் காட்டுகிறது. இதனை Screen Rotation என்று கூறுவார்கள். இந்தப் பெயரில் அதற்கான ஐகானுடன் ஒரு படம் காட்டப்படும். ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஆப்பிள் போன் செட்டிங்ஸ் சென்று, இதனை இயக்கலாம். அல்லது இயக்கத்தினை நிறுத்தி வைக்கலாம். இதில் இரண்டு வகை காட்சித் தோற்றங்கள் உண்டு. அவை, போர்ட்ரெய்ட் மற்றும் லேண்ட்ஸ்கேப். சுருக்கமாக, நெட்டு வாக்கு மற்றும் பக்க வாக்கு எனக் கொள்ளலாம். ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கினால், இந்த வசதி உள்ளதா என அது குறித்த இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாங்கத் திட்டமிடும் எச்.டி.சி. போன் மாடல் எண்ணை நீங்கள் தரவில்லை. எனவே, அதில் இருக்குமா என என்னால் சொல்ல இயலவில்லை.

கேள்வி: நான் விண்டோஸ் 8.1லிருந்து விண்டோஸ் 10க்கு மாறியுள்ளேன். இதனை, ரீசெட் அல்லது ரெப்ரெஷ் செய்தால், கம்ப்யூட்டரில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் அமைக்கப்படும் நிலை வரும். அப்போது, எனக்கு என்ன சிஸ்டம் கிடைக்கும்? விண்டோஸ் 10 அல்லது விண்டோஸ் 8.1. எது கிடைக்கும்?
ஏ.என். அமர்நாத், சென்னை.
பதில்:
விண்டோஸ் 10க்குத் தான், உங்கள் கம்ப்யூட்டர் ரீசெட் ஆகும். விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இயங்கும் ஒன்றை, மீண்டும் திருப்பி அதன் முந்தைய அமைப்பில் நிலை நிறுத்தும் (reset function) இந்த வசதி, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள வசதிகளில் மிகச் சிறந்ததாகும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் திடீரென மிக மெதுவாக இயங்கினாலோ, அல்லது விநோதமான பிரச்னையில் இருந்தாலோ, இந்த முந்தைய அமைப்பில் நிலை நிறுத்தும் 'ரீசெட் பங்சன்' உதவிக்கு வரும். இது எப்படி இயங்கி உதவிடுகிறது என்று பார்க்கலாம். முதலில் settings சென்று, Update & Security தேர்ந்தெடுக்கவும். அடுத்து Recovery என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Reset this PC என்பதில் கிளிக் செய்து அதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி தொடர்கையில், பைல்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, சிஸ்டத்தினை ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டுமா என்பது போன்ற விருப்பங்களைத் தேர்வு செய்திட வேண்டும். பைல்களை அப்படியே வைத்துக் கொள்ள விரும்பினாலும், நீங்கள் பதிவு செய்த அப்ளிகேஷன்கள் அனைத்தும் மறைந்துவிடும். மீண்டும் நீங்களாக, பதிய வேண்டும். எனவே, நீங்கள் புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, பழைய கம்ப்யூட்டரிலிருந்து பைல்களை அதற்கு மாற்றும் முன்னர், புதிய கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை 'ரீசெட்' செய்திடுவது நல்லது. நீங்கள் இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறி இருந்தால், 30 நாட்களில், மீண்டும் பழைய சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதற்கான வழிகளும் தரப்பட்டுள்ளன என்பதைத் தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

கேள்வி: வேர்டில் சில வேளைகளில் டேபிள் உருவாக்கி முடித்த பின்னர், நெட்டு வரிசையை படுக்கை வரிசையாகவும், படுக்கை வரிசையை நெட்டு வரிசையாகவும் வைத்தால் நல்லது என்று தோன்றுகிறது. ஆனால், அதற்கான சுருக்கு வழிகள் தெரியாததால், ஒவ்வொன்றாக மறுபடியும் அமைக்க வேண்டியதுள்ளது. இதற்கு வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா?
என். ராஜலட்சுமி, தூத்துக்குடி.
பதில்: நீங்கள் மாற்ற நினைப்பதை ஆங்கிலத்தில் “transpose” என அழைப்பார்கள். வேர்ட் புரோகிராமில், இந்த மாற்றத்தினை மேற்கொள்ள, நேரடியான வழிகள் எதுவும் இல்லை. ஆனால், எக்ஸெல் புரோகிராமில் இதற்கான வழிகள் உள்ளன. எனவே, வேர்ட் டேபிளை, எக்ஸெல் புரோகிராமிற்குக் கொண்டு சென்று, மாற்றிவிட்டு, பின் மீண்டும் வேர்ட் பைலுக்குக் கொண்டுவரலாம்.
முதலில் மாற்றப்பட வேண்டிய வரிசைகள் கொண்ட டேபிள் உள்ள வேர்ட் டாகுமெண்ட்டினைத் திறக்கவும். அந்த டேபிள் முழுவதையும் கண்ட்ரோல் + சி கொடுத்து காப்பி செய்திடவும். இப்போது எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து, ஒர்க் ஷீட்டில் காலியாக உள்ள செல் ஒன்றில், கர்சரை வைத்து Ctrl+V கொடுக்கவும். இப்போது டேபிள் அப்படியே எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒட்டப்படும். இதில் Paste Special என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Transpose என்ற பிரிவில் கிளிக் செய்தால், வரிசைகள் மாற்றப்பட்டு ஒட்டப்படும். பின், இதனை அப்படியே காப்பி செய்து, வேர்ட் டாகுமெண்ட்டில் ஒட்டிவிடுங்கள். டேபிளைச் சரியாக அமைத்திட வேண்டியதிருக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X